இப்படி நடந்ததே இல்லை! சடசடவென பிடிஆர் ஆபிஸுக்குள் போன ஸ்டாலின்.. கைமாறிய ரிப்போர்ட்.. என்ன நடந்தது?
சென்னை: முதல்வர் ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருக்கும் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறைக்கு திடீரென சென்றுள்ளார்.
தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் தொடர்பான பேச்சுக்கள் கடந்த சில நாட்களாக மீண்டும் எழும்ப தொடங்கி உள்ளன. இந்த வருடம் மே மாதம், ஜூன் மாதம் வாக்கில் அமைச்சரவை மாற்றம் தொடர்பாக பல்வேறு பேச்சுக்கள் எழுந்து வந்தன.
அமைச்சரவையில் முக்கியமான சில மாற்றங்கள் செய்யப்பட போவதாக செய்திகள் வட்டமடித்தன. ஆனால் அதன்பின் இந்த செய்திகள் அப்படியே அடங்கின.

நிதி அமைச்சர்
முக்கியமாக மூத்த - செயல்படாத அமைச்சர்கள் சிலரின் (2 பேரின்) பதவி பறிக்கப்படலாம் என்று செய்திகள் வேகமாக பரவின. இதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வந்தன. இதில் பல விதமாக யுகங்களும் வட்டமடித்து வந்தன. திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவை பதவி கொடுக்கப்படலாம் என்று கூறப்பட்டது. எம்எல்ஏ டிஆர்பி ராஜாவிற்கும் அமைச்சரவை பதவி கொடுக்கப்படலாம் என்று கூறப்பட்டது.

ரிப்போர்ட்
இப்படி அமைச்சரவையை மாற்ற இரண்டு விதமான ரிப்போர்ட்கள் பயன்படுத்தப்படுகிறதாம். ஒரு ரிப்போர்ட் அமைச்சர்கள் தங்கள் துறையை பற்றி கொடுக்கும் ரிப்போர்ட். தங்களுக்கு கீழ் உள்ள இலக்காக்களில் அமைச்சர்கள் எடுக்கும் முடிவுகள், செயல்பாடுகள் பற்றி அமைச்சர்களே கொடுக்கும் ரிப்போர்ட். இதை அவ்வப்போது அமைச்சர்கள் கொடுப்பார்கள். இரண்டாவது ரிப்போர்ட் அமைச்சர்கள் பற்றி உளவுத்துறை கொடுக்கும் மாதாந்திர ரிப்போர்ட். அமைச்சர்களின் செயல்பாடு பற்றி உளவுத்துறை கொடுக்கும் மார்க்.

என்னாச்சு?
இதை எல்லாம் அடிப்படையாக வைத்து, அமைச்சர்களின் செயல்பாடு, அவர்கள் மீது உள்ள புகார், 2024 லோக்சபா தேர்தல் என்று பல விஷயங்களை மனதில் வைத்து இந்த அமைச்சரவை மாற்றங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த அமைச்சரவை மாற்ற செய்திகள் மீண்டும் உலவ தொடங்கி உள்ளன. விரைவில் அமைச்சரவை மாற்றம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மூத்த அமைச்சர்கள் பிடிஆர், கேஎன் நேரு, செந்தில் பாலாஜி, துரைமுருகன் போன்றவர்கள் அவர்களின் துறைகளில் நீடிப்பார்கள் என்று அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிடிஆர் ஸ்டாலின்
பொதுவாக அமைச்சர்கள் சார்பாக முதல்வருக்கு செல்லும் ரிப்போர்ட்.. துறை செயலாளர்களிடம் ரிப்போர்ட் கொடுக்கப்படும். அந்த ரிப்போர்ட் முதல்வரின் தனி செயலாளர்கள் வழியாக முதல்வருக்கு செல்லும். இதுதான் முறை. இந்த நிலையில்தான் நேற்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறைக்கே சென்று முதல்வர் ஸ்டாலின் சென்று பேசி இருக்கிறார். அப்போது முதல்வர் ஸ்டாலினிடம் அமைச்சர் பிடிஆர் இந்த வார ரிப்போர்ட்டை கொடுத்து உள்ளார். வாராந்திர ரிப்போர்ட் ஒன்றை அமைச்சர் கொடுப்பது இதுவே முதல்முறை.

ரிப்போர்ட் வழங்கினார்
அமைச்சர் பிடிஆருக்கு கொடுக்கப்பட்டு உள்ள தலைமை செயலகத்தில் உள்ள அறைக்குத்தான் முதல்வர் ஸ்டாலின் திடீரென இன்று சென்றார். அங்கு சில நிமிடங்கள் இவர்கள் பேசிக்கொண்டனர். அதன்பின் முதல்வரிடம் பிடிஆர் ரிப்போர்ட்டை கொடுத்தார்.இது தொடர்பாக அமைச்சர் பிடிஆர் செய்துள்ள ட்விட்டில், முதல்வர் ஸ்டாலின் முதல்முறையாக தலைமை செயலகத்தில் உள்ள என்னுடைய அறைக்கு வருகை புரிந்தார். அவரிடம் நான் கடந்த வாரத்திற்கான ரிப்போர்ட்டை வழங்கினேன். திமுக அரசு தொடங்கி 18 மாதம் முடிந்துள்ள நிலையில், என்னுடைய இந்த வார ரிப்போர்ட்டை அவரிடம் வழங்கினேன், என்று கூறி உள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications