யாரும் செய்ய துணியாத செயல்! பெண் போலீஸ் ஆமினாவை நேரில் பாராட்டிய சைலேந்திர பாபு.. நெகிழ்ச்சி பின்னணி
சென்னை: பெண் போலீஸ் அதிகாரி ஆமினா என்பவரை நேரில் அழைத்து பாராட்டி இருக்கிறார் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு. டிஜிபியே இவரை அழைத்து பாராட்ட என்ன காரணம்? அப்படி இவர் செய்தது என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
மேட்டுப்பாளையத்தில் போலீஸ் கான்ஸ்டேபிளாக பணியாற்றி வருகிறார் ஆமினா. போலீஸ் வேலையை தினமும் அர்ப்பணிப்போடு செய்யும் இவர்.. வேலைக்கு இடையில் இன்னொரு முக்கியமான பணியையும் செய்து வருகிறார்.
போலீஸ் வழக்குகளில் அவ்வப்போது பல இடங்களில் அநாதை உடல்கள் கிடைக்கும். ரயில் தண்டவாளத்தில், பாலங்களுக்கு கீழே, பிச்சைக்காரர்கள் மரணம் அடையும் போது.. இப்படி உறவினர்கள் உரிமை கொண்டாடாத உடல்கள் அவ்வப்போது போலீசாருக்கு வரும்.

உடல்கள்
இந்த உடல்களை அடக்கம் செய்வது. அல்லது உறவினர்களிடம் சென்று சேர்ப்பது. உடல்களை போஸ்ட் மார்ட்டத்திற்கு அனுப்புவது போன்ற பணிகள் மிகவும் சிரமமானவை. இந்த பணியைத்தான் போலீஸ் கான்ஸ்டேபிளாக பணியாற்றி வரும் ஆமினா செய்து வருகிறார். இந்த உடல்களை மீட்பது, அதை போஸ்ட்மார்ட்டம் செய்வது, பின்னர் இறுதி சடங்கு செய்வது போன்ற பணிகளை செய்து வருகிறார். இவரின் அன்றாட பணியே உடல்களை உறவினர்களிடம் ஒப்படைப்பதுதான்.

தினசரி பணி
போலீஸ் கேஸ் ஆன பின் மருத்துவமனைக்கு வரும் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணிகளை இவர் செய்து வருகிறார். இதில் உரிமை கோரப்படாத உடல்களைத்தான் தாமாக முன் வந்து இறுதி சடங்கு செய்யும் பணிகளை செய்கிறார். தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவிகளோடு இந்த பணியை அவர் செய்கிறார். கடந்த 5 வருடமாக இந்த சேவையை அவர் செய்து வருகிறார். உடலை இடுகாட்டிற்கு எடுத்து செல்வது.

நேரடி பணி
இடுகாட்டில் கடைசி வரை இருந்து பணிகளை செய்வது என்று எல்லா பணிகளையும் இவர் செய்கிறார். 2017ல் இருந்து மேட்டுப்பாளையத்தில் இவர் செய்யும் இந்த பணிகள் மக்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது. 100க்கும் மேற்பட்ட உடல்களை இவர் இப்படி அடக்கம் செய்துள்ளார். ஒவ்வொரு உடலுக்கும் இப்படி இறுதி சடங்கு செய்ய 1500 ரூபாய் வரை ஆகும். இருந்தாலும் தனது சக போலீஸ் அதிகாரிகளுடன் செலவை பகிர்ந்து இவர் இந்த பணிகளை செய்கிறார்.

பாராட்டு
இவரின் இந்த செயல்களுக்கு அவரின் கணவரும் உதவியாக இருந்து வந்துள்ளார். ஆமினா குறித்து கேள்விப்பட்ட டிஜிபி சைலேந்திர பாபு இன்று ஆமினாவை அழைத்தார். நேரில் அழைத்த சைலேந்திர பாபு அவரின் பணிகள் குறித்து கேட்டறிந்தார். அவரின் சேவைகளை கேட்டு, அவருக்கு பாராட்டு தெரிவித்தார். அதோடு பாராட்டு சான்றிதழும் வழங்கினார். மேட்டுப்பாளையம் போலீஸ் நிலைய அதிகாரிகளும் இவரின் செயலை பாராட்டி உள்ளனர்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications