அமைச்சர்களிடம் போனில் சீறிய ‘தலை’.. கையில் ‘டேட்டா’.. சறுக்கிய இடங்கள்.. எப்படி நடந்தது? செம டோஸ்!
அமைச்சர்கள் சிலருக்கு திமுக தலைமை கடுமையாக‘டோஸ்’ விட்டிருக்கிறதாம்.
சென்னை : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக அமைச்சர்களுக்கு இத்தனை பூத்கள் என தேர்தல் பொறுப்பு பிரித்து வழங்கப்பட்டிருந்த நிலையில், 'ரிசல்ட்' அடிப்படையில் அமைச்சர்கள் சிலருக்கு பாராட்டும், சிலருக்கு டோஸும் கிடைத்திருக்கிறதாம். மிகவும் குறைவாக வாக்குகள் பெற்ற பகுதிகளில் பணியாற்றிய அமைச்சர்களிடம் சீறிவிட்டாரம் முதல்வர் ஸ்டாலின்.
எடப்பாடி பழனிசாமி காட்டமான விமர்சனத்தால், அதிமுக டெபாசிட் இழக்க வேண்டும் என அமைச்சர்களுக்கு தலைமையிடம் இருந்து உத்தரவு பறந்தது.
ஆனால், டெபாசிட்டை தக்க வைத்தது அதிமுக. இதற்கு சில அமைச்சர்கள் பணியாற்றிய பகுதிகளில் குறைவான வாக்குகள் கிடைத்ததே காரணம் என தலைமைக்கு ரிப்போர்ட் சென்றுள்ளது.

திமுக அமைச்சர்கள் உழைப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற நிலையில் வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ஆம் தேதி நடைபெற்றது. இதில், திமுக கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கடந்த முறை இந்த தொகுதியில் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திருமகன் ஈவெரா வென்ற நிலையில், இந்த முறை அதைவிட பல மடங்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார் ஈவிகேஎஸ் இளங்கோவன். காங்கிரஸ் வேட்பாளரின் இவ்வளவு பெரிய பிரமாண்ட வெற்றிக்காக உழைத்தது திமுக அமைச்சர்கள்.

ஸ்டாலின் பிளான்
22 மாத கால திமுக ஆட்சிக்கு கிடைக்கும் நற்சான்றிதழாகவும், 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாகவும், அதிமுகவின் வாக்கு வங்கியை சிதைத்து பெரிய அளவில் எதிரணிக்கு நெருக்கடியைக் கொடுக்கும் வகையிலும் இந்த தேர்தல் முடிவு அமைய வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தனது கட்சியினருக்கு உத்தரவிட்டிருந்தார். ஈரோடு கிழக்கில் மிகப்பெரிய வெற்றியைப் பெறவேண்டும், அதிமுக வேட்பாளரை டெபாசிட் இழக்கச் செய்யவேண்டும் என்பதற்காக, பெரும் பட்டாளத்தையே ஈரோடு கிழக்கில் இறக்கி இருந்தார் முதல்வர் ஸ்டாலின்.

அமைச்சர்கள் இடையே ரேஸ்
ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பணியாற்ற, அமைச்சர்கள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு இந்தந்த பகுதி என பொறுப்பு கொடுக்கப்பட்டது. தங்கள் பகுதிகளில் திமுக கூட்டணிக்கு அதிக வாக்குகள் பெற்றுத்தந்தால் தலைமையின் 'குட்புக்'கில் இடம்பெற முடியும் என்பதால் போட்டி போட்டு களப்பணி ஆற்றினார்கள் திமுக அமைச்சர்கள். அமைச்சர்கள் இடையே நடந்த இந்த 'வோட் ரேஸில்' அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி, மதிவேந்தன் உள்ளிட்டோர் அடங்கிய குழுக்களில் தான் அதிகபட்சமாக 68 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் கை சின்னத்திற்கு டிரான்ஸ்பர் ஆகியுள்ளன.

தலைமை டோஸ்
பல்வேறு முக்கிய அமைச்சர்கள் தேர்தல் பணியாற்றிய பகுதிகளில் குறைவாகவே வாக்குகள் திமுகவுக்கு டிரான்ஸ்பர் ஆகியுள்ளன. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ரிசல்ட்டைக் கையில் வைத்துக்கொண்டு அமைச்சர்களுக்கு தலைமையிடம் இருந்து போன் கால் பறந்திருக்கிறது. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் சிறப்பாக பணியாற்றி அதிக வாக்குகளைப் பெற்றுத்தந்தவர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளாராம் திமுக தலைவர். அதேசமயம், தேர்தல் பணியில் சொதப்பிய அமைச்சர்களுக்கு கடுமையான டோஸும் விழுந்திருக்கிறதாம்.

டெபாசிட் எப்படி கிடைச்சது
ஈரோடு கிழக்கு தொகுதி பிரச்சாரத்தின்போது எடப்பாடி பழனிசாமி, மீசை வச்ச ஆம்பளையா இருந்தா, வேட்டி கட்டிய ஆம்பளையா இருந்தா என்றெல்லாம் சவால் விட்டதால் கடுமையாக டென்ஷன் ஆகிவிட்டாராம் திமுக தலைவர். அதிமுகவை டெபாசிட் இழக்கச் செய்து பதிலடி கொடுக்க வேண்டும் என உத்தரவுகள் பறந்ததாம். ஆனாலும், தேர்தல் முடிவில் டெபாசிட்டை தக்கவைத்துக்கொண்டது அதிமுக. சில பகுதிகளில் இன்னும் கொஞ்சம் போராடியிருந்தால் அதிமுகவின் டெபாசிட் பறிபோயிருக்கும் என்பதே திமுக தலைவருக்கு சொல்லப்பட்ட செய்தியாம்.

ரிசல்ட் டேட்டாவை கையில் வைத்துக்கொண்டு
இதனால் தான், ரிசல்ட் டேட்டாவை கையில் வைத்துக்கொண்டு குறைவாக வாக்குகள் பெற்ற பகுதிகளில் பணியாற்றிய அமைச்சர்களிடம் கடுமையாகப் பேசியுள்ளாராம் முதல்வர். இடைத்தேர்தலில் எல்லாம் நமக்குச் சாதகமாக அமைந்திருந்தும், இப்படி பாடுபட்டும் நீங்கள் வேலை பார்த்த பகுதியில் 60 சதவிகித வாக்கு கூட பெற முடியவில்லை என்றால் எப்படி எம்.பி தேர்தலில் ஜெயிப்பது? உங்களை நம்பி எப்படி தேர்தல் பொறுப்பைக் கொடுப்பது எனச் சீறிவிட்டாராம் முதல்வர். இதனால், வோட் ரேஸில் பிந்திய அமைச்சர்கள் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் வாயடைத்துப் போனார்களாம்.
-
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல்












Click it and Unblock the Notifications