ஒரு கட்சி சொல்றதை எல்லாம் கேட்போம்னு நினைக்காதீங்க! அடித்து சொன்ன எடப்பாடி! பதறிய பாஜக-அப்போ கூட்டணி
வாக்குகள் சிதற கூடாது என்பதால் கூட்டணி வைக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம் என்று எடப்பாடி கூறி உள்ளார்.
சென்னை: ஒரு கட்சியுடன் கூட்டணி வைப்பதால் அந்த கட்சி சொல்வதை நாங்கள் கேட்போம் என்று நீங்கள் நினைக்கவேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி பேசி இருக்கிறார். சிறுபான்மையினர் முன் அவர் இப்படி பேசியது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன் கூட்டம் ஒன்றில் பேசிய எடப்பாடி பழனிசாமி அதிமுக லோக்சபா தேர்தலுக்காக மெகா கூட்டணி அமைக்கும். அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைத்து திமுகவை எதிர்கொள்வோம் என்று கூறி இருந்தார்.
அப்போதே இந்த கூட்டணியில் பாஜகவிற்கு இடம் உண்டா, இல்லையா என்பது குறித்த விவாதம் நிலவி வந்தது பாஜகவுடன் கூட்டணியை அதிமுக தொடருமா என்ற கேள்வி இருந்தது.

சிறுபான்மையினர் வாக்குகள்
கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி தோல்வி அடைய சிறுபான்மையினர் வாக்குகள் முக்கிய காரணமாக இருந்தது. இதை மாஜி அமைச்சர் சிவி சண்முகம் கூட வெளிப்படையாக தெரிவித்து இருந்தார். சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்காததே அதிமுக தோல்விக்கு காரணம் என்று குறிப்பிட்டு இருந்தார். சிறுபான்மையினர் வாக்குகளை கவர பாஜகவுடன் கூட்டணியை முறிக்க அதிமுக தயாராகி வருகிறதோ என்ற கேள்வியும் எழுந்தது. சிவி சண்முகமும் திமுக - பாஜக கூட்டணி வைக்க போகிறது என்றெல்லாம் கூறி பரபரப்பை கிளப்பினார்.

பரபரப்பு
ஆனால் சமீபத்தில் கூட்டம் ஒன்றில் பேசிய எடப்பாடி பழனிசாமி இது தொடர்பான விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதன்படி பாஜகவுடன் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி தொடரும் என்று வெளிப்படையாக எடப்பாடி கூறினார். அதில், அதிமுகதான் இந்த இடைத்தேர்தலில் வெல்ல போகிறது. மக்களுக்கு அதிகம் செய்தது நாங்கள்தான். திமுக மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. இடைத்தேர்தல் வெற்றி திமுகவிற்கு ஏமாற்றம் கொடுக்கும். இன்றைய சூழ்நிலையில் அதிமுக தான் பல கட்சிகளை தாங்கி பிடித்து வருகிறது. யாரை நம்பியும் அதிமுக இல்லை. அதிமுகவுக்கு யாரும் உதவவில்லை, அதிமுக தான் பிற கட்சிகளுக்கு உதவுகிறது. மேலும் அடுத்த கட்சி வளர்வதற்காகவா நாங்கள் கட்சி நடத்துகிறோம்? தற்போது பாஜக எங்கள் கூட்டணியில் தான் உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வரும்போது சூழ்நிலைக்கு ஏற்றவாறு கூட்டணி அமைப்போம். எங்களின் கூட்டணி நாடளுமன்ற தேர்தலிலும் தொடரும் என்றார் எடப்பாடி பழனிசாமி.

அதிமுக இழப்பு
இதனால் அதிமுகவிற்கு மீண்டும் சிறுபான்மையினர் வாக்குகள் சரியும் வாய்ப்புகள் உள்ளன. முக்கியமாக ஈரோடு கிழக்கில் சிறுபான்மையினர் வாக்குகளை அதிமுக இழக்கும் வாய்ப்புகளும் உள்ளன. ஈரோடு கிழக்கில் 17 சதவிகிதம் கவுண்டர்கள் இருக்கிறார்கள். 36 சதவிகிதம் செங்குந்த முதலியார்கள் இருக்கிறார்கள். 17 சதவிகிதம் மைனாரிட்டிகள் இருக்கிறார்கள். 6 சதவிகிதம் அருந்ததியர்கள் இருக்கிறார்கள். இதில் கவுண்டர்கள் வாக்குகளை விட மற்றவர்களை சேர்த்தால் அதிக வாக்குகள் வருகிறது. முக்கியமாக செங்குந்த முதலியார்கள்தான் இங்கு தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறார்கள். இந்த இடைத்தேர்தலில் பெரும்பாலும் மைனாரிட்டிகள் திமுகவிற்குத்தான் வாக்களிப்பார்கள் என்று அரசியல் வல்லுனர்கள் பலர் கணித்து உள்ளனர். அதோடு அதிமுக பாஜகவோடு நெருக்கமாக இருப்பதால் மைனாரிட்டிகள் வாக்குகள் திமுக கூட்டணிக்கே வரும் என்று அரசியல் வல்லுனர்கள் பலர் கணித்து உள்ளனர்.

எடப்பாடி பேச்சு
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி சிறுபான்மையினர் முன்னிலையில் இன்று அதிமுக - பாக்கல கூட்டணி குறித்து பேசி உள்ளார். அதில், ஒரு கட்சியுடன் கூட்டணி வைக்கிறோம் என்றால் அவர்களின் கொள்கையை ஏற்றுக்கொண்டோம் என்று அர்த்தம் ஆகிவிடாது. நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தாலும் எங்களின் கொள்கை மாறிவிடாது. எங்கள் கொள்கை அப்படியேத்தான் இருக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கட்சி இன்னொரு கட்சியுடன் கூட்டணி வைக்கும் போது கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அர்த்தம் இல்லை. ஒரு கட்சியுடன் கூட்டணி வைப்பதால் அந்த கட்சி சொல்வதை நாங்கள் கேட்போம் என்று நீங்கள் நினைக்கவேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி பேசி இருக்கிறார். சிறுபான்மையினர் முன் அவர் இப்படி பேசியது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.

கேள்வி 1
சிறுபான்மையினர் முன் எடப்பாடி கொடுத்த விளக்கம், அவர்களின் வாக்குகளை கவரவா அல்லது பாஜகவிற்கு கொடுக்கும் சிக்னலா இது என்று கேள்வி எழுந்துள்ளது. அதாவது பாஜகவின் பேச்சை நாங்கள் கேட்க மாட்டோம், கவலைப்படாதீர்கள், உங்களுக்கு எந்த சிக்கலும் வராது என்று எடப்பாடி சிறுபான்மையினருக்கு நம்பிக்கை கொடுக்கும் விதமாக பேசினாரா அல்லது இஸ்லாமியர்களுக்கு பிரச்சனை வந்தால் பாஜகவின் பேச்சை நாங்கள் கேட்க மாட்டோம் என்று பாஜகவிற்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக அவர் இப்படி பேசினாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கேள்வி 2
இரண்டாவதாக, வாக்குகள் சிதற கூடாது என்பதால் கூட்டணி வைக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம் என்று கூறி உள்ளார். வாக்குகள் சிதறுகிறது என்பதற்காக எடப்பாடி கொள்கையை கொஞ்சம் தள்ளி வைக்க அல்லது சில சமரசங்களை செய்து கொள்ள முடிவு எடுத்துவிட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவரின் இந்த கொள்கை பேச்சு, பாஜகவிற்கு எதிரான இந்த திடீர் நிலைப்பாடு எல்லாம் தேர்தல் முடியும் வரைதானா அல்லது இனி இப்படித்தானா.. இனி இப்படித்தான் என்றால் கூட்டணி தொடர்வது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்னொரு பக்கம் எடப்பாடி பேச்சுக்கு பாஜக என்ன மாதிரியான ரியாக்சன் கொடுக்க போகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
-
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications