இருக்குது கச்சேரி.. அதிரடிக்கு தயாராகும் எடப்பாடி.. ஜெ. ஸ்டைலில் “சாட்டை”! அதிர்ச்சியில் மா.செக்கள்!
மா.செக்கள் சீட்டைக் கழற்ற ரெடி ஆகிறாராம் எடப்பாடி பழனிசாமி.
சென்னை : ஜெயலலிதா பாணியில் சாட்டையைச் சுழற்ற எடப்பாடி பழனிசாமியும் தயாராகிறாராம். கட்சியில் பூத் கமிட்டி பணிகளை தீவிரப்படுத்த பலமுறை அறிவுறுத்தியும் மாவட்ட செயலாளர்கள் இன்னும் சீரியஸாக இறங்கவில்லை என்பதில் ஈபிஎஸ் பயங்கர அப்செட்டில் இருக்கிறாராம்.
சமீபத்தில் நடைபெற்ற மா.செக்கள் கூட்டத்திலும் இதனை மீண்டும் வலியுறுத்தியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், தங்களால் தான் எடப்பாடியே தலைமைப் பதவிக்கு வந்தார் என்ற மிதப்பில் இருக்கிறார்களாம் மா.செக்கள்.
இதனால், பொதுச் செயலாளர் தேர்தல் முடிந்தபிறகு அதிரடியைக் காட்டும் திட்டத்தில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தினர்.

3 விஷயங்கள்
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மூன்று முக்கியமான விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டன. விரைவில் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த வேண்டும். அதற்கான ஆயத்த பணிகளை மேற்கொள்ள வேண்டும், அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை மிக தீவிரமாக கவனிக்க வேண்டும் என்பது தொடர்பாக இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது. பூத் அளவில் கட்சி நிர்வாகிகளை நியமித்து இப்போது முதலாகவே தீவிரமாகச் செயல்பட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என விவாதிக்கப்பட்டுள்ளது.

போராட்டங்கள்
மேலும், திமுக அரசுக்கு எதிரான போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை மிகத் தீவிரமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும் ஆகிய விஷயங்கள் இந்த மாவட்ட செயலாளர் கூட்டத்தில் தீவிரமாக விவாதிக்கப்பட்டிருக்கிறது. மேலும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவின் செல்வாக்கு அடுத்தடுத்து நடந்த தேர்தல்களில் சரிந்து வருகிறது. ஓபிஎஸ் அணியினரும் சரி, திமுகவினரும் சரி தொடர்ச்சியாக 8 தேர்தலில் தோல்வியைச் சந்தித்துள்ளதாக விமர்சித்து வருகின்றனர். இதை சரி செய்ய இப்போதே இருந்து தேர்தல் பணிகளை மேற்கோள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ஈபிஎஸ் சந்திக்கும் சிக்கல்
விரைவில் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தி முடித்த பிறகு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் திமுக அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கட்சியை வெற்றி நோக்கி அழைத்துச் செல்வதற்காக அதிமுகவை பலப்படுத்தும் பணிகளை எடப்பாடி பழனிச்சாமி தீவிரமாக மேற்கொள்ள இருக்கிறார். ஆனால், இதில் தான் எடப்பாடி பழனிசாமி சில சிக்கலை எதிர்கொண்டு வருகிறாராம். கட்சியில் மேற்கொள்ளவேண்டிய அடுத்தகட்ட பணிகள் குறித்து, நிறைய திட்டங்கள் இருந்தாலும் எடப்பாடி பழனிசாமியால், சீனியர்களுக்கு ஆர்டர் போட முடியவில்லை எனக் கூறப்படுகிறது.

சீரியசாக எடுத்துக்கொள்ளாத மாசெக்கள்
பூத் கமிட்டியை பலப்படுத்த வேண்டும் என ஏற்கனவே பல முறை சொல்லியிருந்தும் மாவட்ட செயலாளர்கள் யாரும் இதனை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லையாம். ஒன்றிய செயலாளர்கள், கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டு பணிகளை வேகப்படுத்தவில்லையாம். இதனால் எடப்பாடி பழனிசாமி கொஞ்சம் அதிருப்தியிலேயே இருக்கிறாராம். ஆனால் அதை வெளிப்படையாகவும் சொல்ல முடியாத சூழல். நாங்கள் எல்லாரும் சேர்ந்துதானே எடப்பாடி பழனிசாமியை தலைவராக்கினோம் என்ற மனநிலையில் சீனியர்கள் இருக்கிறார்களாம்.

சமாளிக்க முடியல
இதனால், எடப்பாடி பழனிசாமி, கட்சியின் சீனியர்களையும், மாவட்ட செயலாளர்களையும் சமாளிக்க முடியாமல்தான் இருக்கிறாராம். தனது பேச்சை உத்தரவாக எடுத்துக்கொண்டு மா.செக்கள் தீவிரமாகச் செயல்பட வேண்டும் என ஈபிஎஸ் எதிர்பார்க்கிறார். ஆனால், அப்படியான சூழல் தற்போது இல்லை. ஒவ்வொரு மாவட்ட செயலாளரும் பெரிய அளவில் பொதுக்கூட்டங்களுக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும், என்னை பொதுக்கூட்டங்களுக்கு அழையுங்கள் என அறிவுறுத்தி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. தன்னை அழைத்து பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யாமல் காலங்கடத்தும் மாவட்ட செயலாளர்களை தூக்கும் பிளானிலும் இருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி.

சாட்டை சுழற்ற ஆயத்தம்
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்திய பின்னர், கட்சியில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் விவரமறிந்த வட்டாரத்தினர். பல ஆண்டுகளாக எந்த வளர்ச்சிப் பணியையும் மேற்கொள்ளாமல் இருக்கும் மாவட்டச் செயலாளர்களைத் தூக்கிவிட்டு, செயல்வீரர்களாக இருக்கும் நிர்வாகிகளை பொறுப்பில் நியமிக்கும் முடிவில் இருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி. ஆக, ஜெயலலிதா பாணியில், மாவட்ட செயலாளர்கள் சீட்டில் சூடு வைத்து அவர்களை கட்சிப் பணியில் தீவிரமாகச் செயல்பட வைக்கும் திட்டத்தில் இறங்கியிருக்கிறாராம் ஈபிஎஸ்.
-
அதிமுகவுக்கு ஆப்பு வைக்கப் போறாரு விஜய்! இப்பவே உஷாராவது நல்லது! அடித்துச் சொல்லும் ஜெ.வின் நிழல்! -
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி -
ஆதவ் உட்பட ஒரே குடும்பத்திலிருந்து களமிறங்கும் 3 வேட்பாளர்கள்.. கட்சி வேறு வேறு.. சுவாரஸ்யம்! -
"ஈ அடிச்சான் காப்பி".. அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பியடித்த திமுக? எவ்வளவு ஒற்றுமை பாருங்க -
எடப்பாடி பழனிசாமிக்கு நேரடியாக சவால் விட்ட செங்கோட்டையன்.. 'நாளை பார்ப்பீர்கள்'.. அதிரடி பேட்டி -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும்












Click it and Unblock the Notifications