Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாளைக்கு வேண்டாம்! உச்ச நீதிமன்றத்தில் திடீரென எடப்பாடி "பல்டி".. சொந்த செலவில் சூனியம்? ஏன் இப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: உச்ச நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு வழக்கில் நேற்று எடப்பாடி பழனிசாமி எடுத்த நிலைப்பாடு கடும் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக பொதுக்குழு வழக்கு.. கிட்டத்தட்ட கன்னித்தீவு கதை போல.. மிக நீளமாக சென்று கொண்டே இருக்கிறது. இந்த வழக்கில் இந்த வருடம் தீர்வு கிடைக்காது என்பது உறுதியாகி உள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழுவில் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். இந்த பொதுக்குழு செல்லாது என்று ஓ பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

இந்த வழக்குதான் உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் இதற்கு முன் எடப்பாடி பழனிசாமி இடைக்கால நிவாரணம் கோரி இருந்தார். அதாவது, உச்ச நீதிமன்றத்தில் பொதுக்குழு வழக்கு நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி பொதுக்குழுவில் செய்யப்பட்ட தேர்தல் விதி மாற்றங்களை இன்னும் ஏற்றுக்கொள்ளாமல் தேர்தல் ஆணையம் உள்ளது. எனவே இந்த வழக்கிற்கும், அதற்கும் சம்பந்தம் இல்லை என்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும், என்று எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்தார். இதற்கு பதில் அளித்த நீதிபதிகள், இடைக்கால நிவாரணம் வழங்குவது பற்றி விசாரிக்க தயாராக இருக்கிறோம். ஆனால் அதற்கு நீங்கள் தனியாக மனுதாக்கல் செய்ய வேண்டும். இதற்கு எடப்பாடியும் மனு தாக்கல் செய்தார். அதேபோல் ஓ பன்னீர்செல்வமும் பதில் மனு தாக்கல் செய்தார்.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

இந்த நிலையில் நேற்று நடந்த 5 நிமிட விசாரணையில், நேரம் இன்மை காரணமாக வழக்கை நாளை தள்ளி வைக்கலாமா என்று நீதிபதிகள் கேட்டனர். இத்தனை காலம் வழக்கை வேகமாக நடத்த சொன்ன எடப்பாடி தரப்பு இன்று கோர்ட்டில் புதிய நிலைப்பாடு எடுத்தது. அதன்படி நாளை விசாரணை வேண்டாம், கிறிஸ்துமசுக்கு பின் வழக்கை நடத்தலாம் என்று கூறினர். இத்தனை நாட்கள் வழக்கை உடனே விசாரிக்க வேண்டும் என்று சொன்ன எடப்பாடி தரப்பு இன்று திடீரென விடுமுறைக்கு பின் நடத்துங்கள் என்று கூறியது பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஓபிஎஸ் கோரிக்கை

ஓபிஎஸ் கோரிக்கை

ஓ பன்னீர்செல்வம்தான் இத்தனை நாட்கள் இந்த கோரிக்கையை வைத்து வந்தார். அதாவது வழக்கில் உடனடி விசாரணை வேண்டாம் என்று தள்ளிப்போட சொல்லிக்கொண்டு இருந்தார். ஓ பன்னீர்செல்வம் இந்த வழக்கை முடிந்த அளவு தாமதப்படுத்த நினைக்கிறார். வழக்கை முடிந்த அளவு தள்ளிப்போட பார்க்கிறார். தாமதம் ஆக ஆக தன்னுடைய கரங்கள் வலுப்படும் என்று அவர் நினைக்கிறார். கடந்த இரண்டு மாதத்தில் நிறைய நிர்வாகிகள், முக்கியமாக மேற்கு மண்டல நிர்வாகிகள் ஓ பன்னீர்செல்வம் பக்கம் வந்துவிட்டனர். இப்போது வழக்கு மேலும் தாமதம் ஆனால் எடப்பாடி மீது அவரின் ஆதரவாளர்கள் நம்பிக்கை இழப்பார்கள். இந்த இடைப்பட்ட காலத்தில் எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவை பற்றி வேறு பேசி சர்ச்சையில் சிக்கிவிட்டார். இதனால் சில மூத்த தலைகள் அப்செட்டில் இருக்கிறார்கள்.

எடப்பாடி ஆர்வம்

எடப்பாடி ஆர்வம்

நாட்கள் செல்ல செல்ல எடப்பாடி ஆர்வம் இழப்பார். அவரின் வேகம் குறையும் என்று ஓ பன்னீர்செல்வம் இப்படி செய்கிறார் என்கிறார்கள் விவரம் தெரிந்த சட்ட வல்லுனர்கள். இந்த நிலையில்தான் எடப்படியும் திடீரென இதே நிலைப்பாட்டை எடுத்துள்ளார். வழக்கை விடுமுறைக்கு பின் ஒத்திவைக்குமபடி அவர் சொன்னது கடும் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. ஓ பன்னீர்செல்வம் தரப்பில் இருந்து கோவை செல்வராஜ் வெளியேறிவிட்டார் . வழக்கு தொடர்ந்து நடந்து வந்தால், இன்னும் பலர் ஓ பன்னீர்செல்வம் தரப்பில் இருந்து வெளியேறுவார்கள். அவர் தரப்பின் வலிமை குறையும் என்று எதிர்பார்த்து எடப்பாடி இப்படி வழக்கை தள்ளி வைக்க சொன்னாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

சூனியம்

சூனியம்

இன்னொரு பக்கம் எடப்பாடி சொந்த செலவில் வைத்துக்கொண்ட சூனியமாகவும் பார்க்கப்படுகிறது. ஜனவரி மாதம் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டதால், அதுவரை எடப்படியால் அதிமுகவில் முடிவுகளை எடுக்க முடியாது. பெரிய மாற்றங்களை செய்ய முடியாது.பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த முடியாது. எடப்பாடி ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பின்படி ஜனவரி மாதம் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி இருக்க வேண்டும். ஆனால் இப்போது வழக்கே ஜனவரி மாதத்திற்கு செல்கிறது. இதனால் அவரால் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+