Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"துரோகி".. என்னவெல்லாம் பேசினார்.. ஓபிஎஸ் மீது பாயும் ஒழுங்கு நடவடிக்கை? எடப்பாடியின் "பெரிய" மூவ்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தியை ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் சந்தித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஓ பன்னீர்செல்வம் மாட்டிகிட்டாரு.. இது அவருக்கு எதிராகவே திரும்பும் என்கிறார்கள் எடப்பாடி ஆதரவு ரத்தத்தின் ரத்தங்கள். அப்படி என்ன நடக்கும்?

Recommended Video

    ADMK பொதுக் குழு கூட்டத்தை ஒத்தி வைக்க Edappadi Palanisamy-க்கு OPS கடிதம் *Politics

    அதிமுகவில் தற்போது பெரிய சிவில் வார் நடந்து கொண்டு இருக்கிறது. ஓபிஎஸ் பெருசா.. இபிஎஸ் பெருசா.. யார் பெருசுன்னு அடிச்சுக் காட்டு என்று சொல்லும் அளவிற்கு மோதல் பெரிதாகி உள்ளது.

    தர்மயுத்தம் 1.0 விற்கு பின் இத்தனை வருடங்கள் கழித்து மீண்டும் அதிமுக விவகாரங்களை வடஇந்திய ஊடகங்கள் தீவிரமாக கவனித்து விவாதம் செய்யும் அளவிற்கு நிலைமை மோசமாகி உள்ளது.

     என்ன நடக்கிறது

    என்ன நடக்கிறது

    அதிமுகவில் பொதுக்குழு கூடும் முன் தங்கள் பக்கம் முடிந்த அளவு ஆதரவை திரட்ட இரண்டு தரப்பும் முயன்று கொண்டு இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி வரிசையாக பல்வேறு மாவட்ட செயலாளர்களை சந்தித்தும், போன் மூலம் பேசியும் ஆதரவு திரட்டி வருகிறார். நேற்று எடப்பாடியை சந்தித்த மாவட்ட செயலாளர்கள் பலர் அவருக்கு நேரடியாக ஆதரவு தெரிவித்தனர். அதேபோல் எம்எல்ஏக்கள் பலரும் எடப்பாடி தரப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    அதிருப்தி

    அதிருப்தி

    அதிமுகவில் எடப்பாடி எழுச்சியால் ஓரம்கட்டப்பட்ட நிர்வாகிகள், ஒதுக்கப்பட்ட நிர்வாகிகளை ஓ பன்னீர்செல்வம் இன்னொரு பக்கம் சந்தித்து வருகிறார். எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கொங்கு மண்டலத்திலேயே இருக்கும் சில நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் பேசி வருகிறார். பொதுக்குழுவிற்கு முன் முடிந்த அளவு நிர்வாகிகளை தன் பக்கம் எப்படியாவது இழுத்துவிட வேண்டும் என்ற போட்டி நிலவுகிறது. சிறிய வயதில் கிரிக்கெட் ஆடும் சிறுவர்கள் ஆள் பிடிப்பது போல.. இவர் எனக்கு.. அவர் உனக்கு என்று போட்டி போட்டு ஆள் பிடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

    சந்தித்தார்

    சந்தித்தார்

    இந்த நிலையில்தான் திடீரென நேற்று அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தியை ஓ பன்னீர்செல்வம் சந்தித்தார். அதிமுகவில் புகழேந்தி இல்லை என்றாலும், ஓபிஎஸ்ஸை அவர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி.. இபிஎஸ் ஒரு துரோகி. அவர் துரோகம் செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். அவர் மூலம் 4 வருடத்தில் கொள்ளையடித்தவர்கள் மட்டுமே.. அவரின் பக்கத்தில் தற்போது இருக்கிறார்கள். அதிமுகவில் நிலைமை சரி இல்லை.

    ஓபிஎஸ்

    ஓபிஎஸ்

    ஓபிஎஸ் தலைமை ஏற்றால்தான் கட்சி சரியாகும். அவர் மனது வைத்தால் எடப்பாடியை கூட கட்சியில் இருந்து நீக்க முடியும். அவருக்கு அந்த உரிமை உள்ளது. இதை நான் சொல்லவில்லை,. கட்சி விதி சொல்கிறது. அதிமுகவில் ரவுடியிசம் அதிகரித்துவிட்டது. அதற்கு காரணம் ஜெயக்குமார் மட்டும்தான் என்று பெங்களூர் புகழேந்தி நேற்று குறிப்பிட்டார்.

    என்ன நடந்தது?

    என்ன நடந்தது?

    இந்த நிலையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தியை ஓபிஎஸ் சந்தித்தது கட்சி விதிமீறல் என்று எடப்பாடி தரப்பு கொதித்து எழுந்துள்ளது. ஓ பன்னீர்செல்வம் மாட்டிகிட்டாரு.. இது அவருக்கு எதிராகவே திரும்பும் என்கிறார்கள் எடப்பாடி ஆதரவாளர்கள். கடந்த வருடம் அதிமுகவில் சசிகலாவுடன் நெருக்கமாக இருந்தவர்கள் பலர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அப்போது அதிமுக செய்தி தொடர்பாளராக இருந்த புகழேந்தி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் கட்சியில் இருந்து வெளியே வந்த புகழேந்தி எடப்பாடியை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார்.

    கடுமையான விமர்சனம்

    கடுமையான விமர்சனம்

    எடப்பாடி ஒரு சர்வாதிகாரி.. அந்த சர்வாதிகாரியின் கட்டுப்பாட்டில் ஓபிஎஸ் இருக்கிறார். ஓபிஎஸ்ஸுக்கு நாங்கள் ஆதரவு கொடுத்தும் எதிர்க்கட்சி தலைவர் பதவி அவருக்கு கிடைக்காததற்கு இந்த சர்வாதிகாரம்தான் காரணம் என்று புகழேந்தி குறிப்பிட்டார். அதோடு ஓபிஎஸ்ஸை ஒரு செய்தியாளர் சந்திப்பில் துரோகி என்றும் மோசமாக விமர்சனம் செய்து இருந்தார். இந்த நிலையில்தான் புகழேந்தி தற்போது யூ டர்ன் போட்டு ஓபிஎஸ்ஸை ஆதரித்து உள்ளார்.

    விரோதம்

    விரோதம்

    அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பெங்களூர் புகழேந்தியை, ஓபிஎஸ் சந்தித்தது கட்சி விரோத நடவடிக்கை என்று எடப்பாடி பழனிசாமி நேற்று நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் கமெண்ட் அடித்து இருக்கிறாராம். நேற்று இரவு தனக்கு ஆதரவான நிர்வாகிகளுடன் பேசிய எடப்பாடி பழனிசாமி இந்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இது தொடர்பாக கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவில் எடப்பாடி ஆதரவு சீனியர்கள் புகார் கொடுக்கவிருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

    சேர கூடாது

    சேர கூடாது

    அதிமுக விதிகளின் படி கட்சியில் இருந்து ஒழுங்கு நடவடிக்கை காரணமாக நீக்கப்பட்டவருடன் யாரும் பேச கூடாது. அவருடன் தொடர்பு வைக்க கூடாது. அவரின் ஆதரவை பெற கூடாது. அவரை ஆதரிக்க கூடாது. மாற்று கட்சியினருடன் கூட நட்பாக இருக்கலாம். ஆனால் ஒழுங்கு நடவடிக்கையால் நீக்கப்பட்டவருடன் நட்பாக இருக்க கூடாது. அதையும் மீறி ஓபிஎஸ் புகழேந்தியை சந்தித்த காரணத்தால், அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை குழுவில் எடப்பாடி ஆதரவு உறுப்பினர்கள் புகார் தரும் முடிவில் இருக்கிறார்களாம்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+