ஓபிஎஸ் எதிர்ப்பை சமாளிச்சது போல.. செங்கோட்டையன் எதிர்ப்பை எடப்பாடி ஈசியாக சமாளிக்க முடியாது! ஏன்?
சென்னை: ஓ பன்னீர்செல்வம் எதிர்ப்பை கடந்த வருடங்களில் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக எதிர்கொண்டார். கட்சியையும் தனது கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வந்தார். ஆனால் ஓபிஎஸ் எதிர்ப்பை சமாளிச்சது போல.. செங்கோட்டையன் எதிர்ப்பை எடப்பாடி எளிதாக சமாளிக்க முடியாது.. இதற்கு பின் முக்கியமான காரணங்கள் உள்ளன.

1. ஓ பன்னீர்செல்வத்தை அதிமுகவை கைப்பற்ற பல முறை உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், கீழமை நீதிமன்றங்களில் கூட வழக்கு தொடுத்தார். ஆனால் அவர் தொண்டர்களை தன்பக்கம் கொண்டுவர நினைக்கவில்லை.
2. அவருக்கு தொண்டர்கள் சப்போர்ட் பெரிதாக இல்லை.
3. சாதி ரீதியாக இதில் பிரிவு இருந்தது. கொங்கு மண்டலம், வடக்கு மண்டலம் எடப்பாடி பக்கம் நின்றது.
4. தென்மண்டலத்திலும் ஆர்.பி உதயகுமார் உள்ளிட்ட முக்குலத்தோர் தரப்பு எடப்பாடி பக்கம் நின்றது.
5. அதோடு எடப்பாடி பக்கம் செங்கோட்டையன் தொடங்கி மற்ற வலுவான லீடர்கள் இருந்தனர்.
6. டெல்லி சப்போர்ட் போதிய அளவிற்கு ஓ பன்னீர்செல்வத்திற்கு கிடைக்கவில்லை.
செங்கோட்டையன் எதிர்ப்பு:
ஆனால் செங்கோட்டையன் எதிர்ப்பு அப்படி கிடையாது. செங்கோட்டையன் எதிர்ப்பு எடப்பாடிக்கு தலைவலியை கொண்டு வர சில காரணங்கள் உள்ளன.
1. செங்கோட்டையன் கொங்கு மண்டலம். அதே எடப்பாடியின் அதே ஜாதி பின்புலத்தை சேர்ந்தவர்.
2. செங்கோட்டையனுக்கு எடப்பாடியை விட அவர் ஜாதி பின்புலத்தில் அதிக பவர் உள்ளது.
3. செங்கோட்டையன் சீனியர் என்பதால்.. அவருக்கு உட்கட்சி சப்போர்ட் அதிகம் இருக்கும்.
4. இது போக செங்கோட்டையன் ஜெயலலிதா காலத்திலேயே அரசியல் செய்தவர். அவருக்கு கட்சி அரசியல், நிர்வாக பிரச்சனை, ஜாதி பார்முலாக்களை எதிர்கொள்ள தெரியும்.
5. இதெல்லாம் போக செங்கோட்டையன் எதிர்ப்பு அலை போல மற்ற சீனியர்கள் எதிர்ப்பை பதிவு செய்ய காரணமாக அமையும்.
6. செங்கோட்டையன் டெல்லி சப்போர்ட்டை பெறலாம். ஏனென்றால் எடப்பாடி பாஜகவுடன் நெருக்கமாக இல்லை. ஆனால் செங்கோட்டையன் இறங்கி போகலாம்.
7. செங்கோட்டையன் கொங்கு மண்டலம். அதே எடப்பாடியின் அதே ஜாதி பின்புலத்தை சேர்ந்தவர் என்பதால் பாஜக இவர் பக்கம் செல்லவும் தயாராக இருக்கும்.
அதிமுக செங்கோட்டையன் மோதல்
அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்காக எடப்பாடி பழனிச்சாமிக்கு விவசாயிகள் எடுத்த பாராட்டு விழாவில் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை. விழாவை அவர் புறக்கணித்தது சர்ச்சையாகியிருக்கிறது.
உள் கட்சி பூசல் தான் காரணம் என சொல்லப்பட்டது. அதற்கேற்ப, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் வைக்கப்படாததால் செல்லவில்லை என செங்கோட்டையன் சொல்கிறார். அத்திக்கடவு - அவிநாசி திட்டம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் புகைப்படம் இல்லாததால் அந்த விழாவை புறக்கணித்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். நாங்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்டவர்கள். எங்களை வளர்த்து ஆளாக்கிய தலைவர்களின் படங்கள் விழாவில் இல்லை. அதனால் அந்த கூட்டத்திற்கு நான் செல்லவில்லை என்று கூறி உள்ளார்.
ஆனால், உண்மையான காரணம் அது கிடையாது என்கின்றனர் அதிமுகவினர். நம்மிடம் பேசிய சீனியர் ஒருவர், "2026-ல் அதிமுக ஆட்சியைப் பிடிக்க வேண்டுமானால் கட்சியில் ஒற்றுமை இருக்க வேண்டும். பிரிந்தவர்கள், நீக்கப்பட்டவர்கள் கட்சியில் மீண்டும் சேர்க்கப்பட வேண்டும் என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார் செங்கோட்டையன். கடந்த 1 வருடமாக சசிகலாவுடம் நெருங்கிய தொடர்பில் இருந்து வருகிறார். சசிகலாவின் எண்ணத்தை பிரதிப்பலிப்பதைப் போலவே செங்கோட்டையனின் சமீபகால நடவடிக்கைகள் இருக்கின்றன.












Click it and Unblock the Notifications