டென்சன்.. இப்படி ஆகிடுச்சே.. 7 மணி நேரம் காத்திருந்த "எம்பி" இளையராஜா.. ஏர்போர்ட்டில் என்ன நடந்தது?
சென்னை: சென்னை விமான நிலையத்தில் இசையமைப்பாளர் எம்பி இளையராஜா 7 மணி நேரம் காத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றும் இன்றும் அதிகாலையும் மழை பெய்தது. சென்னையில், அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் இரவு முழுக்க மழை பெய்தது.
முக்கியமாக சென்னையில் ஏர்போர்ட் உள்ள மீனம்பாக்கத்திலும் கடுமையாக மழை பெய்தது.

சென்னை
இதனால் சென்னை விமான நிலையத்திற்கு வர வேண்டிய விமானங்கள் தாமதம் ஆனது. முக்கியமாக சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்கள் தாமதம் ஆனது. ரன் வேயில் தண்ணீர் இருந்தது, மோசமான வானிலை, மேகமூட்டம் போன்ற காரணங்களால் விமானங்கள் தரையிறங்குவதிலும், புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டது. இதனால் பயணிகள் பலர் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல வேண்டிய பயணிகள் கஷ்டப்பட்டனர்.

மழை
அதேபோல் சென்னைக்கு வர வேண்டிய சில விமானங்கள் பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. இதனால் பயணிகள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகினர். கடந்த 7-8 மணி நேரமாக சென்னை விமான நிலையத்தில் பயணிகள் அதிக எண்ணிக்கையில் காத்து இருக்கின்றனர். இவர்களுக்காக மாற்று ஏற்பாடுகள் சரியாக செய்து கொடுக்கப்படவில்லை என்றும் புகார் வைக்கப்பட்டு வருகிறது. இசையமைப்பாளர் எம்பி இளையராஜாவும் இதில் காத்து இருந்தார்.

விமானம்
ஹங்கேரிக்கு நிகழ்ச்சி ஒன்றுக்காக இளையராஜா செல்ல இருந்தது. இதற்காக சென்னை விமான நிலையத்திற்கு அவர் வந்தார். எம்பி என்பதால் விஐபி பகுதியில் இவர் காத்து இருந்தார். ஆனால் அவர் செல்ல வேண்டிய விமானம் தாமதம் ஆனது. இந்த விமானம் துபாய் சென்று அங்கிருந்து கனெக்டிங் விமானம் மூலம் ஹங்கேரிக்கு செல்ல வேண்டும். முதலில் இந்த விமானம் 2 மணி நேரம் தாமதம் என்று கூறப்பட்டது.

இளையராஜா
அதன்பின் மேலும் 3 மணி நேரம் விமானம் தாமதம் ஆனது. இதன் காரணமாக விமான நிலையத்தில் இளையராஜா கொஞ்சம் டென்ஷனாக இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் சென்னை வானிலை சரியாகவில்லை. இதனால் மேலும் 2 மணி நேரம் விமானம் தாமதம் ஆனது. இதன் காரணமாக 7 மணி நேரமாக விமானத்திற்காக இளையராஜா காத்து இருந்தார். அங்கு இருந்த காத்திருப்பு அறையில் அவர் ஓய்வு எடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications