அசிங்கம்! தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரா இருந்துகிட்டு.. குஷ்பு இப்படி பேசலாமா? கொதிக்கும் நெட்டிசன்ஸ்
சென்னை: தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்புவின் ரிப்ளை ஒன்று நெட்டிசன்கள் இடையே கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
திமுகவில் உறுப்பினராக இருந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மேடை பேச்சுக்களில் ஆபாசமாக பேசுவதை வழக்கமாக கொண்டு இருந்தார். அவர் பேசும் பல கருத்துக்கள் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வந்தன.
முக்கியமாக எதிர்க்கட்சிகளில் இருக்கும் தலைவர்கள், அதிலும் பெண் தலைவர்கள் பற்றி மிக கடுமையான கருத்துக்களை, ஆபாசமான கருத்துக்களை இவர் தொடர்ச்சியாக பேசி வந்தார். இதையடுத்து அவர் கட்சியில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்டார்.

பாஜகவை சேர்ந்த சில பெண் தலைவர்கள் பற்றி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தவறாக பேசிய நிலையில் அவர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். அதன்பின் அவர் விளக்கம் கொடுத்து ,மன்னிப்பு கேட்ட பின் சில நாட்கள் கழித்து கட்சியில் சேர்க்கப்பட்டார்.
மீண்டும் மோசம்: இந்த நிலையில்தான் இவர் சமீபத்தில் மீண்டும் மேடை ஒன்றில் மிகவும் ஆபாசமாக பேசினார். ஆளுநர் ஆர்என் ரவி, பாஜகவில் உள்ள நடிகைகள் பற்றி மேடையில் சர்ச்சைக்குரிய வகையில் ஆபாசமாக பேசினார். இதையடுத்து அவர் கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
கருணாநிதியின் 100 நாள் பிறந்தநாள் விழா கூட்டத்தில்தான் அவர் இப்படி சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். முக்கியமாக பாஜகவை சேர்ந்தவரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு குறித்து அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளை சொல்லி அவர் கடுமையாக பேசி இருந்தார்.
இதையடுத்து அவர் கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். இந்த முறை மொத்தமாக அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் உடனடியாக கைதும் செய்யப்பட்டார். குஷ்பு கண்ணீரோடு புகார் கொடுத்த சில மணி நேரங்களில் இந்த கைது நடந்துள்ளது.
அதோடு குஷ்புவும் இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி சொல்லி இருக்கிறார்.
மோசமான போஸ்ட்: இந்த நிலையில்தான் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்புவின் ரிப்ளை ஒன்று நெட்டிசன்கள் இடையே கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. குஷ்பு தனது கணவர் சுந்தர் சி புகைப்படத்தை பகிர்ந்து தனது காதல் குறித்து போஸ்ட் செய்து இருந்தார்.
இதற்கு நெட்டிசன் ஒருவர் உங்கள் கணவரை காப்பாற்றத் தானே நீங்கள் பாஜகவில் சேர்ந்தீர்கள் என்று விமர்சனம் வைத்தார். இதற்கு நேரடியாக பதில் அளிக்காமல் குஷ்பு அந்த நெட்டிசனின் குடும்ப பெண்களை இழுத்து அசிங்கமாக போஸ்ட் செய்தார். அவரின் இந்த போஸ்ட் சர்ச்சையாகி உள்ளது.

விமர்சனம்; இதையடுத்து நெட்டிசன்கள் பலரும் குஷ்புவை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். நீங்கள்தான் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரா? மகளிர் ஆணைய உறுப்பினராக இருந்து கொண்டு நீங்களே இப்படி பேசலாமா?
நீங்கள் மட்டும் பெண்களை அவமதித்து பேசலாமா என்று நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் பாஜக கூலிப்படையினர் பயன்படுத்தும் வார்த்தைகளை சரளமாக பேசும் குஷ்புவிற்கு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக இருக்க எந்த தகுதியும் இல்லை. எப்போதும் Victim mode தானா? பின்னூட்டத்திற்கு ஒருவர் சொன்ன பதிலுக்கு அவர் வீட்டு பெண்களை இழிவாக பேசியது ஏன்? குஷ்பு சுந்தர் இது தான் உங்க பெண்ணியமா? என்றும் கடுமையாக விமர்சனம் வைத்து வருகின்றனர்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்!












Click it and Unblock the Notifications