Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்டாலின் தந்த கிரீன் சிக்னல்.. அடுத்தடுத்த அதிரடிகள்.. அமுதா ஐஏஎஸ் எடுத்த ஆக்சன்.. நடுங்கிய தலைகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுராந்தகம் டிஎஸ்பி மணிமேகலை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். உள்துறை செயலாளர் அமுதா எடுத்த இந்த ஆக்சனுக்கு பின் முக்கியமான ஒரு காரணம் இருக்கிறதாம்.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக அதிகாரிகள் பலர் அடிக்கடி மாற்றப்பட்டு வருகின்றனர். இந்த அதிகாரிகள் மாற்றத்திற்கு இடையில்தான், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்து 17 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே விழுப்புரத்தில் 12 பேர் உயிரிழந்த நிலையில், ராஜவேல்(38) என்பவர் விழுப்புரத்தில் பலியாகி உள்ளார்.

Why does Madhurandhagam DSP Manimekalai change by Amudha IAS on the illicit liquor issue?

ஏற்கனவே செங்கல்பட்டில் கள்ளச்சாராயத்தால் 5 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இதில் பலியான நபர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்து உள்ளார்.

தமிழ்நாடு உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ்ஸுக்கு முதல்வர் ஸ்டாலின் முக்கியமான டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளதாக தமிழ்நாடு கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து நேற்று கள்ளச்சாராய விவகாரம் காணமாக ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

விழுப்புரம் மாவட்ட டிஐஜியாக, சிபிசிஐடி டிஐஜி ஜியாவுல் ஹக் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.காஞ்சிபுரம் எஸ்பி சுதாகர், செங்கல்பட்டு எஸ்பி-யாக கூடுதல் பொறுப்பு ஏற்று உள்ளார். கள்ளக்குறிச்சி எஸ்பி மோகன்ராஜ், விழுப்புரம் எஸ்.பி-யாக கூடுதல் பொறுப்பு ஏற்று உள்ளார்.

தமிழ்நாடு உள்துறை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ். உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இன்றும் மாற்றம்:

தமிழ்நாடு உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் மற்றும் அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் முக்கியமான டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளதாக தமிழ்நாடு கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி தமிழ்நாடு முழுக்க கள்ளச்சாராயம் விற்பனை குறித்து விசாரிக்க வேண்டும். அதிகாரிகள் உடனே துரிதமாக செயல்பட்டு கைது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதோடு போலீஸ் அதிகாரிகள் மெத்தனமாக செயல்பட்டால் அவர்கள் மீது அமுதா ஐஏஎஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உள்துறை அமைச்சகம் இதில் மிக விரைவாக செயல்பட வேண்டும். கள்ளச்சாராய உற்பத்தி குறித்து உளவுத்துறையும் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் துறை ரீதியாக உத்தரவிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

இதையடுத்தே மதுராந்தகம் டிஎஸ்பி மணிமேகலை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கிராமங்களில் கள்ளச்சாராயம் குடித்து 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து சிவசக்தி என்பவர் புதிய டி.எஸ்.பி-ஆக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

கள்ளச்சாராயம்:

தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் கள்ளச்சாராயம் உச்சத்தில் இருந்தது. 90 களில் உச்சத்தில் இருந்த பிஸ்னஸ் ஆகும் இது. அதன்பின் அரசு தீவிரமாக செயல்பட்டு இதை முடக்கியது.

அப்போது கண்கள் போன பரிதாபமும், உயிர்கள் போன கொடூரமும் அரங்கேறியது. அதன்பின் டாஸ்மாக் வந்ததும் கள்ள சாராயத்திற்கான தேவை குறைந்தது. படிப்படியாக கள்ளச்சாராயம் அதிகம் ஆனது.

இந்த நிலையில் டாஸ்மாக்கில் மலிவான விலையில் எளிதாக கள்ளச்சாராயம் கிடைக்கும் நிலையிலும் கூட தமிழ்நாட்டில் திடீரென கள்ளச்சாராய பயன்பாடு அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், கள்ளச்சாராய மரணங்கள் என்னும் துயரச் செய்தி வந்ததும், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு விரைந்தேன். இதற்குக் காரணமானவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கடமை தவறிய காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

Why does Madhurandhagam DSP Manimekalai change by Amudha IAS on the illicit liquor issue?

இனி இப்படி ஒரு சம்பவம் நிகழக் கூடாது என ஆய்வுக் கூட்டத்தில் கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளேன். இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது.

கள்ளச்சாராயம் குடித்ததால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்கவும் மருத்துவர்களிடம் அறிவுறுத்தியுள்ளேன்.

கள்ளச்சாராயம் எனும் தீமையை யாரும் நெருங்க வேண்டாம் எனப் பொதுமக்களைக் கேட்டுக் கொள்கிறேன். கள்ளச்சாராயத்தை ஒழிக்க அரசு இரும்புக் கரம் கொண்டு செயலாற்றும்!, என்று குறிப்பிட்டு உள்ளார்.

அமுதா ஐஏஎஸ்:

அமுதா ஐஏஎஸ் சமீபத்தில் உள்துறைக்கு கொண்டு வரப்பட்டது மிக பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. கடந்த 2021ம் வருடம் திமுக ஆட்சிக்கு வந்த பின் பிரதமர் அலுவலகத்தில் கூடுதல் செயலாளராக இருந்த அமுதாவை விடுவித்து அதற்கான ஆணையை சமீபத்தில் பிறப்பித்திருந்தது மத்திய அரசு.

மாநில அரசு இவரை மீண்டும் கேட்டதாக அப்போதே செய்திகள் வந்தன.

அதனடிப்படையில், மாநில பணிக்கு திரும்பும் அமுதா, எந்த துறையில் நியமிக்கப்பட போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடம் அப்போதே இருந்தது. இதையடுத்து ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் பதவி அமுதாவிற்கு கொடுக்கப்பட்டது.

மாற்றம் இல்லை:

அப்போது வேறு வழியின்றி அவருக்கு தற்காலிகமாக ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் பதவி அளிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது உள்துறை செயலாளர் பதவி அளிக்கப்பட்டு உள்ளது. உள்துறை என்பது முதல்வர் ஸ்டாலினின் துறை. ஸ்டாலினின் டீமிற்கு வந்து இருக்கும் அமுதாவுக்கு முக்கியமான சில டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு உள்ளதாம்.

உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி கீழ் சென்னையில் கொஞ்சம், கொலை சம்பவங்கள் அதிகரித்தன. 2ம் கட்ட நகரங்களிலும் கிரைம்கள் அதிகரித்தன. இதை எல்லாம் கட்டுபடுத்த வேண்டும் என்ற உத்தரவு சென்றுள்ளதாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+