பால் பொங்கிய நேரத்தில்.. சீமான் இப்படி அடுப்பை அணைச்சிட்டாரே! அதிமுக ஏன் திடீர் கோபம்? இதான் காரணம்
சென்னை: அதிமுக - நாம் தமிழர் இடையே கூட்டணி உருவாக வேண்டிய சூழலில்.. சீமான் அந்த கூட்டணியை அடித்து உடைத்துள்ளார்.
சமீபத்தில் அதிமுக கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில், அவர்கள் நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி வைத்தால் நன்றாக இருக்கும் என பல நிர்வாகிகள் தெரிவித்தனராம். எடப்பாடி பழனிசாமியும் கொஞ்சம் இதற்கு ஆதரவாக பேசி உள்ளாராம்.

அதன்படி நாம் தமிழருடன் கூட்டணி வைத்திருந்தால் நாம் லோக்சபா தேர்தலில் பெரிய வெற்றிபெற்று இருக்க முடியும். பல தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க முடியும் என நிர்வாகிகள் தெரிவித்தனராம். 1999 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் இதே போன்று தேர்தல் தோல்விக்கு பின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது நாம் மீண்டு வந்தோம். அதேபோல் நாம் மீண்டு வருவதற்கு சீமான் உடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று கூறி உள்ளனர். எடப்பாடி பழனிசாமியும் கூட இதை கொஞ்சம் வழிமொழிந்து பேசி உள்ளனர். சீமான் உடன் கூட்டணி வைத்தால் வடமாவட்டங்களில் வெற்றிபெற முடியும்.
அதிமுகவின் எழுச்சிக்கு சீமான் வருகை வசதியாக இருக்கும். திமுக தனியாக நிற்கவில்லை. பெரிய கூட்டணி வைத்துதான் போட்டியிடுகிறார்கள். அதேபோல் நாமும் பெரிய கூட்டணி வைத்து போட்டியிட வேண்டும். அதுதான் கட்சிக்கு பலம் சேர்க்கும் என்று கூறி உள்ளார்.
சீமான் கோரிக்கை: முன்னதாக சீமானும் அதிமுகவின் கூட்டணிக்கு மறைமுகமாக அழைப்பு விடுத்தார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், அதிமுக ஆதரவை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுள்ளார். அதன்படி, கட்சி ஆரம்பிக்கும் முன்பு ஜெயலலிதாவை ஆதரித்து.. அதிமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்தேன். இலங்கை போர் நடந்தது. என் சொந்தங்களை கொன்ற கூட்டத்திற்கு ஆதரவாக இருந்த காங்கிரஸ், திமுகவை எதிர்த்து அதிமுகவிற்கு ஆதரவு அளித்தேன். அதன்பின் 2011 தேர்தலில் மீண்டும் அதிமுகவிற்காக பிரச்சாரம் செய்தேன். திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக பிரச்சாரம் செய்தேன்.
2014ல் மீண்டும் அதிமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்தேன். எந்த பிரதி பலனும் எதிர்பார்க்கவில்லை. பணம் வாங்கவில்லை. உண்டியல் குலுக்கித்தான் பிரச்சாரம் செய்தேன். இப்போது நாங்கள் விக்கிரவாண்டியில் நிற்கிறோம். அதிமுக ஆதரவை கேட்கிறோம்.
அதிமுக - சீமான் கூட்டணி: நம்முடைய பொது எதிரி திமுக. அப்படிப்பட்ட பொது எதிரியை வீழ்த்த வேண்டும் என்று பிரச்சாரம் செய்கிறோம். திமுக என்ற நச்சுமரத்தை வீழ்த்த வேண்டும் . அதற்கு எளிய பிள்ளைகள் எங்களை ஆதரித்து எங்களுடன் நில்லுங்கள். நான் உங்களுக்கு நின்று உள்ளேன். இந்த ஒரு தேர்தல் நீங்கள் எங்களுக்கு ஆதரவு கொடுங்கள். அதிமுக இந்த தேர்தலில் நிற்கவில்லை.
அப்படி இருக்க அதிமுக எங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். அதிமுகவின் ஆதரவை எங்களுக்கு கொடுக்கலாம். எங்களின் வேட்பாளர் அபிநயாவிற்கு ஆதரவு கொடுக்க வேண்டும். 2026ல் என்ன நடக்குறது என்று பார்க்கலாம். அப்போது அரசியல் எப்படி மாறும் என்று பார்க்கலாம். இது சாதாரண இடைத்தேர்தல்தான். இந்த தேர்தலில் எங்களுக்கு ஆதரவு கொடுங்கள், என்று சீமான் வெளிப்படையாக கேட்டிருந்தார்.
ஆதரவு கிடைக்கவில்லை: ஆனால் எடப்பாடி பழனிசாமி சீமானுக்கு ஆதரவு கொடுக்கவில்லை. நாம் தமிழருக்கு இந்த ஆதரவை எடப்பாடி பழனிசாமி கொடுக்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் அதிமுக - நாம் தமிழர் இடையே கூட்டணி உருவாக வேண்டிய சூழலில்.. சீமான் அந்த கூட்டணியை அடித்து உடைத்துள்ளார். பால் பொங்கும் நேரத்தில் சீமான் அடுப்பை அணைத்து உள்ளார்.
ஜெயலலிதா, கருணாநிதி போன்ற தலைவர்களை தொடர்ச்சியாக ஏன் இழிவு செய்கிறீர்கள் என்ற கேள்விக்கு சீமான் சொன்ன பதிலில், ஜெயலலிதா இரண்டு திராவிட தலைவர்களின் சமாதிக்கு நடுவில் படுத்திருந்தா ஆமா நடுவுல படுத்திருக்கு என்று தானே சொல்ல முடியும் ? அது தப்பு என்றால் இனிமேல் சாஷ்டாங்கமாக விழுந்து கிடக்குதுன்னு சொல்றேன் என்கிறார்.
அவரின் இந்த பேச்சு அதிமுகவினரை கடுப்பாக்கி உள்ளது. விக்கிரவாண்டியில், எடப்பாடி பழனிசாமி சீமானுக்கு ஆதரவு கொடுக்கவில்லை. நாம் தமிழருக்கு இந்த ஆதரவை எடப்பாடி பழனிசாமி கொடுக்கவில்லை. இந்த கோபம் கூட சீமான் இப்படி பேச காரணமாக இருக்கலாம் என்கிறார்கள்.
-
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications