சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதை வச்சுதானே ஆடுனீங்க.. குஷியாக சொன்ன ஓபிஎஸ்! உதறலில் கடுகடுத்த இபிஎஸ்! அதிமுக அப்படியே மாறிடுச்சே!

Google Oneindia Tamil News

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்த நிலையில் ஓ பன்னீர்செல்வம் தரப்பு மட்டும் சில விஷயங்களால் ஏக குஷியில் இருப்பதாக ரத்தத்தின் ரத்தங்கள் தெரிவிக்கின்றனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அதிமுக தரப்பை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. கடந்த 26 வருடங்களில் இல்லாத மிகப்பெரிய தோல்வியை அக்கட்சி உள்ளாட்சி தேர்தலில் பெற்று இருக்கிறது. பிரதான எதிர்க்கட்சியாக இருந்தாலும், தொண்டர்கள் பலம் இருந்தாலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ளது.

21 மாநகராட்சிகளில் அதிமுக ஒன்றை கூட இந்த முறை கைப்பற்றவில்லை. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக 164 மாநகராட்சி வார்டுகளை வென்றுள்ளது. 638 நகராட்சி வார்டுகளை வென்றுள்ளது. 1206 பேரூராட்சி வார்டுகளை அதிமுக இந்த தேர்தலில் வென்றுள்ளது.

தோல்விகளை சந்தித்தாலும் அதிமுக மகத்தான வெற்றி பெற்றுள்ளது ... ஓபிஎஸ் நம்பிக்கை தோல்விகளை சந்தித்தாலும் அதிமுக மகத்தான வெற்றி பெற்றுள்ளது ... ஓபிஎஸ் நம்பிக்கை

தோல்வி ஒரு பக்கம்

தோல்வி ஒரு பக்கம்

அதிமுகவின் இந்த தோல்வி காரணமாக கட்சி தலைமை கடும் அதிர்ச்சியில் இருக்கிறது. அதிலும் சென்னையில் 18 வார்டுகள் வரை பாஜக இரண்டாம் இடம் பிடித்து இருக்கிறது. அதிமுகவை இங்கு பாஜக முந்தி இருப்பது அதிமுகவின் இரட்டை தலைமைக்கு அதிர்ச்சியை கொடுத்து உள்ளதாம். ஏற்கனவே அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் - இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே இருவருக்கும் இடையில் இருக்கும் விரிசலை இந்த தோல்வி மேலும் பெரிதாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

ஓபிஎஸ் சந்தோசம்

ஓபிஎஸ் சந்தோசம்

ஆனால் என்னதான் தோல்வி காரணமாக ஒரு பக்கம் ஓபிஎஸ் தரப்பும் அதிர்ச்சியில் இருந்தாலும், அவர் தனிப்பட்ட வகையில் குஷியாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன. கொங்கு மண்டலத்தில் அதிமுக வாஷ் அவுட் ஆகி இருக்கிறது. கோவையில் கிளீன் போல்ட், சேலத்தில் மாநகராட்சி காலி, பல வார்டுகளில் டெபாசிட் காலி என்று கொங்கை மொத்தமாக அதிமுக இழந்துள்ளது. இது ஓபிஎஸ்கேம்பிற்கு ஒரு வகையில் பெரிய பலத்தை நம்பிக்கையை கொடுத்து இருக்கிறதாம்.

இனி அதை சொல்ல முடியாது

இனி அதை சொல்ல முடியாது

கொங்கு மண்டலத்தில் அதிமுக வலுவாக இருந்தது. அதை வைத்துதான் எடப்பாடி, வேலுமணி ஆகியோர் கட்சியை கட்டுப்படுத்தி வந்தனர். இனி அப்படி செய்ய முடியாது என்று ஓபிஎஸ் குஷியில் இருக்கிறாராம். இதற்கு முன் கட்சி கூட்டங்களில் ஒருங்கிணைப்பாளராக இருந்தாலும் ஓபிஎஸ் குரலுக்கு அவ்வளவு மவுஸ் இருக்காது. என்ன சொன்னாலும்.. கொங்கில்தான் அதிமுக வென்றது. கொங்கு இல்லை என்றால் அதிமுக மிக மோசமான தோல்வியை தழுவி இருக்கும் என்று கொங்கு மண்டல அதிமுக தலைவர்கள் பதில் அளிப்பார்கள்.

 கொங்கு கேங்க்

கொங்கு கேங்க்

இந்த வாதத்தை வைத்ததே கொங்கு கேங்க் ஓபிஎஸ்ஸை ஆப் செய்து வந்தது. இனிமேல் அந்த கொங்கு கார்டை எடப்பாடி பயன்படுத்த முடியாது என்று ஓபிஎஸ் குஷியில் இருக்கிறாராம். அதோடு செந்தில் பாலாஜியின் கோவை எழுச்சி அதிமுகவிற்கு சிக்கலாக இருந்தாலும் இதனால் வேலுமணியின் கை இறங்கியதில் ஓபிஎஸ் தரப்பு ஹாப்பியாம். இனி கட்சி கூட்டங்களில், முடிவுகளில் நம்முடைய கை ஓங்கிவிடும் என்ற நம்பிக்கையில் ஓபிஎஸ் இருக்கிறாராம். இதை முன்னிட்டே அதிமுக எடப்பாடிக்கு எதிராக பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் குரல் கொடுத்து வருகின்றனர்.

நீக்க மறுப்பு

நீக்க மறுப்பு

சமீபத்தில் கூட விழுப்புரம் நிர்வாகிகள் சசிகலாவை தொடர்பு கொண்டு பேசினார்கள். எடப்பாடி எதிர்கட்சித் தலைவராக சரியில்லை என்று கூறி சசிகலாவை மீண்டும் அதிமுக கேம்பிற்கு அழைக்க இவர்கள் முயன்று வருகிறார்கள். ஆனால் இவர்களை நீக்க ஓபிஎஸ் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. எடப்பாடிக்கு எதிராக பேசும் நிர்வாகிகளை நீக்க முடியாது. சசிகலாவை எதிர்கொள்ளுங்கள். ஏற்கனவே பலரை நீக்கித்தான் கட்சியின் வலிமையே போய்விட்டது என்று ஓபிஎஸ் காட்டமாக கூறியதாக ரத்தத்தின் ரத்தங்கள் கூறுகிறார்கள்.

இபிஎஸ் வாய்ப்பு தேடுகிறார்

இபிஎஸ் வாய்ப்பு தேடுகிறார்

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தற்போது ஓபிஎஸ்ஸுக்கு செக் வைக்க வழி தேடிக்கொண்டு இருக்கிறாராம். இத்தனை நாள் கொங்கு கார்டை பயன்படுத்தி ஓபிஎஸ்ஸை அடக்கியது போல இனி செய்ய முடியாது. அதிமுகவின் கொங்கு தோல்வி எடப்பாடி மீதான இமேஜை பெரிய அளவில் டேமேஜ் செய்துள்ளது. பல நிர்வாகிகள் நம்பிக்கை இழந்துள்ளாராம். இதனால் எடப்பாடி தரப்பு கொஞ்சம் உதறலில் இருப்பதாகவும், நெருங்கிய தலைவர்களிடம் கடுகடுப்பாக அவர் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் வேறு விதத்தில் மீண்டும் கட்சிக்குள் பவர் சென்டராக உருவெடுக்க எடப்பாடி திட்டமிட்டு வருகிறாராம்.

English summary
Why does O Panneerselvam camp is very much happy after the AIADMK downfall in Kongu region in Local Body elections?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X