வார்த்தையை விட்ட எடப்பாடி? போச்சு போச்சு! லேசாக சிரித்த ஓபிஎஸ்! டெல்லி முழு சப்போர்ட்டாமே! கேம் ஓவர்
சென்னை: பேசாத கூடாத இடத்தில் பேசுவதும்.. பேச வேண்டிய இடத்தில் பேசாமல் இருப்பதும் சிக்கலை உண்டாக்கும் என்பார்கள். எடப்பாடி பழனிசாமி அப்படித்தான் பேச கூடாது விஷயம் ஒன்றை பேசி தேவையின்றி "மேலிடத்தின்" வெறுப்பை சம்பாதித்துவிட்டார் என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தினர் அப்படி என்ன நடந்தது.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் இன்று ஓ பன்னீர்செல்வம் தனது தொண்டர்களை சந்தித்தார். கடந்த சில நாட்களாக மழை, வெள்ளம் காரணமாக அதிமுகவில் அடங்கி இருந்த கூட்டங்கள் அமித் ஷா வருகைக்கு பின் மீண்டும் தொடங்கி உள்ளன.
இன்று சுமார் 2 மணி நேரம் ஓ பன்னீர்செல்வம் வீட்டில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஓ பன்னீர்செல்வம் பல்வேறு முக்கியமான விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்து இருக்கிறார். எடப்பாடி கேம்பில் இருந்து வெளியேறி ஓ பன்னீர்செல்வம் கேம்பில் ஐக்கியம் ஆன நிர்வாகிகள் பலரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

எடப்பாடி
இதில் பேசிய எடப்பாடி கேம்பின் எக்ஸ் நிர்வாகி ஒருவர்.. எடப்பாடி தேவையின்றி அமித் ஷா பற்றி பேசுவிட்டார். அவர் கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டார். வார்த்தையைவிட்டுவிட்டார்.. பாஜகவில் பலரும் அப்செட் என்று பேசி இருக்கிறார். அதோடு எடப்பாடியின் பேச்சை அவருக்கு நெருக்கமாக இருக்கும் மாஜி அமைச்சர்களே விரும்பவில்லையாமே.. எங்கே எடப்படியால் நம்ம வீட்டுக்கு ரெய்டு வருமோ என்ற அச்சத்தில் இருக்கிறார்களாம் என்றும் பேசி இருக்கிறார்.

எக்ஸ் நிர்வாகி
இதை எல்லாம் கேட்டுவிட்டு, ஓ பன்னீர்செல்வம் லேசாக சிரித்து இருக்கிறார். நிர்வாகிகள் பேசுவதை கேட்டுவிட்டு.. மற்றவர்கள் பற்றி பேச வேண்டாம். உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணை 21ம் தேதி வருகிறது. அதை தொடர்ந்து நமக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும். நாம் பொதுக்குழுவை கூட்ட வேண்டும். அதற்கு முன் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்த வேண்டும். அதில் எடப்பாடிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

பொதுக்குழு கூட்டம்
பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்தான் கூட்ட வேண்டும் என்று நாம் தானே வாதம் வைத்தோம். எடப்பாடி இல்லாமல் நாம் எப்படி கூட்டத்தை கூட்டுவது என்று நிர்வாகி ஒருவர் இந்த மீட்டிங்கில் கேட்டு இருக்கிறார். அதற்கு பதில் அளித்த ஓ பன்னீர்செல்வம், நாம் முதலில் பொதுக்குழு உறுப்பினர்களை புதிதாக நியமனம் செய்வோம். பின்னர் அவரே வழிக்கு வருவார்.

டெல்லி சப்போர்ட்
டெல்லி சப்போர்ட் நமக்குத்தான். அவர் ஆதரவு நிர்வாகிகள் எல்லாம் அப்செட்டில் இருக்கிறார்கள். என்னுடைய தலைமையில் பொதுக்குழு கண்டிப்பாக நடக்கும் என்று ஓ பன்னீர்செல்வம் கூறி இருக்கிறாராம். எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவை பார்க்க வராமல் இருந்ததும். அதை தொடர்ந்து அமித் ஷா வந்தாலே பார்க்க வேண்டுமா என்று கேள்வி கேட்டதுதாம் ஓ பன்னீர்செல்வத்திற்கு கிடைத்த உதேவகம் என்கிறார்கள். எடப்பாடி பேச்சால் டெல்லி அப்செட்டில் இருக்கிறது. அதனால் பாஜக நமக்கு சப்போர்ட் செய்யும் என்று ஓ பன்னீர்செல்வம் நினைக்கிறாராம்.

பாஜக
முக்கியமாக டெல்லி பாஜகவை நாம் அனுசரித்து சென்று இருக்கிறோம். மோடி, அமித் ஷாவிடம் நாம் அன்பாக இருந்திருக்கிறோம். அதெல்லாம் போக மோடி மதுரை விமான நிலையத்திலேயே என் மீதான மதிப்பை வெளிப்படுத்திவிட்டார். அதனால் கண்டிப்பாக பாஜகவின் முழு சப்போர்ட் தனக்கு கிடைக்கும் என்று ஓ பன்னீர்செல்வம் நம்புகிறாராம். இதையே இன்று நடந்த கூட்டத்திலும் ஓ பன்னீர்செல்வம் பேசி இருக்கிறார் என்கிறார்கள். அமித் ஷா வந்துவிட்டு சென்ற குஷியில்தான் ஓ பன்னீர்செல்வம் இந்த கூட்டத்தையே நடத்தியதாக கூறப்படுகிறது.

ஓ பன்னீர்செல்வம் பேட்டி
இதையடுத்து ஓ பன்னீர்செல்வம் அளித்த பேட்டியில், அதிமுக பொதுக்குழு கூட்டம் விரைவில் நடக்கும். புதிதாக மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்து இருக்கிறேன். அவர்களுடன் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்க உள்ளது. அந்த கூட்டத்திற்கு பின்பாக பொதுக்குழு கூட்டம் நடக்கும். அதன்பின் மாவட்ட வாரியாக சென்று மாவட்ட செயலாளர்களை சந்திப்பேன். எனது தலைமையில் பொதுக்குழு கூட்டம் பிரம்மாண்டமாக நடக்கும், என்று ஓ பன்னீர்செல்வம் நம்பிக்கையாக பேசி உள்ளார்.












Click it and Unblock the Notifications