பண்ருட்டியார் பிளானிங்! உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி அஸ்திவாரத்தையே உலுக்கும் ஓபிஎஸ்! முடங்கும் இலை?
சென்னை: உச்ச நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு வழக்கு நடக்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமியின் அஸ்திவாரத்தையே முடக்கும் மிகப்பெரிய திட்டம் ஒன்றை ஓ பன்னீர்செல்வம் கையில் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் இரண்டு தரப்பிற்கும் இடையில் சட்ட போராட்டம் ஒரு பக்கம் தீவிரமாக நடந்து கொண்டு இருக்கிறது. இன்னொரு பக்கம் டெல்லியில் பாஜகவின் ஆதரவை பெற.. அதாவது மோடி - அமித் ஷாவின் ஆதரவை பெற எடப்பாடி - ஓ பன்னீர்செல்வம் இருவரும் தீவிரமாக முயன்று கொண்டு இருக்கின்றனர்.
அதிமுக பொதுக்குழு வழக்கு.. கிட்டத்தட்ட கன்னித்தீவு கதை போல.. மிக நீளமாக சென்று கொண்டே இருக்கிறது. இந்த வழக்கில் இந்த வருடம் தீர்வு கிடைக்காது என்பது உறுதியாகி உள்ளது.

வழக்கு விசாரணை
உச்ச நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழுவில் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். இந்த பொதுக்குழு செல்லாது என்று ஓ பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் மனுதாக்கல் செய்துள்ளனர். கடந்த 15ம் தேதி இந்த வழக்கில் விசாரணை நடத்தப்பட்டது. அதில், அதிமுக பொதுக்குழு வழக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்பதால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. குளிர்கால விடுமுறைக்கு பின்பாக மனுக்கள் விசாரணை செய்யப்படும்.

விசாரணை
கடந்த விசாரணையில், எடப்பாடி தரப்பு வைத்த வாதத்தில், எங்களுக்கே கட்சியில் பெரும்பான்மை உள்ளது. அதிமுக பொதுக்குழு செல்லாது என்று ஓபிஎஸ் தொடுத்த மனு காலாவதியாகிவிட்டதாக வாதம் வைத்தது. ஆனால் மனு காலாவதியாகவில்லை என்று ஓபிஎஸ் தரப்பு வாதம் வைத்தது. இதில் ஓபிஎஸ் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதாவது பொதுக்குழுவிற்கு எதிரான ஓபிஎஸ் மனுவும் ஜனவரி 4ம் தேதி விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதில் உச்ச நீதிமன்ற பிறப்பித்த உத்தரவில்.. அடுத்த அமர்விற்குள் இரண்டு தரப்பும் எழுத்து பூர்வமாக மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது

கூட்டம் ஏன்?
இந்த நிலையில்தான் ஓ பன்னீர்செல்வம் டிசம்பர் 21ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்த இருக்கிறார். இந்த கூட்டத்தை அவர் நடத்த முக்கியமான காரணம் உள்ளது. அதிமுகவில் இவர் தனியாக மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் ஆகியோரை நியமனம் செய்து வருகிறார். இந்த மாவட்ட செயலர்களை வைத்து ஓ பன்னீர்செல்வம் நடத்தும் கூட்டம் தொடர்பான புகைப்படங்கள், ரிப்போர்ட்கள் உச்ச நீதிமன்றத்தில் ஓ பன்னீர்செல்வம் சமர்ப்பிக்கும் எழுத்துபூர்வமான வாதத்தோடு சமர்ப்பிக்கப்படும். அதில்.. என் பக்கமும் கட்சி நிர்வாகிகள் இருக்கிறார்கள். கட்சியில் இரண்டு குழுக்கள் இருக்கிறது. எடப்பாடி

திட்டம் என்ன?
இதனால் ஒரு குழுவை மட்டும் அங்கீகரிக்கவே கூடாது. எனக்கு ஆதரவு இருக்கிறது பாருங்கள் என்று ஓ பன்னீர்செல்வம் சொல்ல திட்டமிட்டு இருக்கிறார் என்று கூறப்படுகிறது. எடப்பாடி தனக்குத்தான் பெரும்பான்மை இருக்கிறது என்று சொல்லும் நிலையில் அந்த வாதத்தையே உடைத்து நொறுக்க ஓபிஎஸ் முடிவு செய்துள்ளார். இதனால்தான் ஓ பன்னீர்செல்வம் திடீரென இந்த கூட்டத்தை நடத்த உள்ளார் என்று கூறப்படுகிறது. இது உச்ச நீதிமன்றத்தில் எடுபடாமல் போனாலும் தேர்தல் ஆணையத்தில் இரண்டு அணிகள் இருப்பதை நிரூபிக்க உதவும். இதன் மூலம் எடப்பாடி தன்னை சேர்க்கவில்லை என்றால் இரட்டை இலை சின்னத்தையே முடக்க ஓ பன்னீர்செல்வம் முயற்சிக்க வாய்ப்புகள் உள்ளன. எனக்கும் ஆட்கள் இருக்கிறார்கள் என்று நிரூபித்து இரட்டை இலை சின்னத்தை ஓ பன்னீர்செல்வம் முடக்க பார்க்கும் வாய்ப்புகள் உள்ளன.

ஆலோசனை யார்?
ஓ பன்னீர்செல்வம் இதற்காக பல்வேறு ஆலோசனைகளையும் நடத்தி வருகிறாராம். ஓ பன்னீர்செல்வம் ஆலோசனை செய்யும் நபர்களில் முக்கியமானவர் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன். இவரிடம் கிட்டத்தட்ட தினமும் ஓபிஎஸ் ஆலோசனை செய்து வருகிறாராம். இவர்கள் இருவரும் தமிழகம் டூ டெல்லி வரையிலான பல்வேறு அரசியல்களை விவாதிக்கின்றனர். சிக்கலான பிரச்சனைகளில் எம்.ஜி.ஆர். காலத்தில் எடுக்கப்பட்ட பல சம்பவங்களை ஓபிஎஸ்சுக்கு எடுத்துச் சொல்கிறாராம் பண்ருட்டியார். இதனால் ஓபிஎஸ் முகாமில் சுவாரஸ்யத்துக்குப் பஞ்சமில்லை. இவர்தான் இந்த மாவட்ட செயலாளர் கூட்டம் பற்றிய ஐடியாவையும் கொடுத்தவர் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications