“ட்விஸ்ட்”.. வெற்றிக் கொண்டாட்டத்தில் ஓபிஎஸ் அணியினர்.. எடப்பாடி ஜெயிலுக்கு போவாராம்.. என்ன இது?
முடிவை தள்ளிப்போட்டதே எங்கள் வெற்றிதான் என ஓபிஎஸ் தரப்பினர் கொண்டாடி வருகின்றனர்.
சென்னை : பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கில் மார்ச் 24ல் உத்தரவு பிறப்பிக்கப்படும், அதுவரை பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை வெளியிடக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வெடி வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த தடை இல்லை என்றாலும், தீர்ப்பு வரும் வரை முடிவுகளை அறிவிக்கக்கூடாது என நீதிபதி உத்தரவிட்டுள்ளதையே வெடி வெடித்து கொண்டாடியுள்ளனர் ஓபிஎஸ் தரப்பினர்.
பொதுச்செயலாளர் தேர்தலுக்கான முடிவை, தள்ளிப் போட்டதே எங்களுக்கு கிடைத்த வெற்றிதான் என ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் தரப்பு வெடி வெடித்து கொண்டாட்டம்
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான தேதி கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டு, நேற்று எடப்பாடி பழனிசாமி மனுத் தாக்கல் செய்துள்ளார். இன்று வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததும் எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவார் என சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், வைத்திலிங்கம் ஆகிய மூன்று பேரும் தனித்தனியாக வழக்குகளைப் பதிவு செய்தனர்.

சட்ட விரோதம்
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரினர். நீதிபதி குமரேஷ் பாபு இன்று அவசர வழக்காக இதனை விசாரித்தார். ஓபிஎஸ், ஈபிஎஸ் இரு தரப்பிலும் பரபரப்பாக வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்றும், தேர்தல் ஆணையம் இதுவரை இடைக்கால பொதுச் செயலாளராக யாரையும் அங்கீகரிக்கவில்லை என்றும் வாதிடப்பட்டது. விதிகளை மாற்றி எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக வர முயற்சிப்பது சட்ட விரோதம் என்றும் வாதிடப்பட்டது.

எடப்பாடி தரப்பு
மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், உள்கட்சி விவகாரத்தில் தலையிடக் கூடாது. ஜெயலலிதாவை நிரந்தர பொதுச்செயலாளராக அறிவித்துவிட்டு மீண்டும் அப்பதவியை கொண்டு வருவதாக கூறுகின்றனர். ஆனால், ஏன் கொண்டுவரக்கூடாது என்ற காரணத்தை ஓ.பி.எஸ். தரப்பினர் கூறவில்லை. சூழ்நிலைகள் மாறியதால் கட்சி விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. பொதுச் செயலாளரை அடிப்படை உறுப்பினர்கள் தேர்வு செய்யும் விதி மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது. தீர்மானம் சட்டவிரோதமானது அல்ல; கட்சி உள்விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என ஈபிஎஸ் தரப்பு வாதிட்டது.

நீதிபதி உத்தரவு
இதையடுத்து நீதிபதி குமரேஷ் பாபு, "தீர்மானம் தொடர்பான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த என்ன அவசரம்? பொதுச்செயலாளர் தேர்தலை நிறுத்த விரும்பவில்லை. அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கு மற்றும் பொதுக்குழு தொடர்பான வழக்கை வரும் 22ம் தேதி விசாரிக்கிறேன். 24ஆம் தேதி தீர்ப்பு வழங்குகிறேன். அதுவரை தேர்தல் நடைமுறையான வேட்பு மனுத் தாக்கல், பரிசீலனை உள்ளிட்டவற்றை தொடரலாம். ஆனால், முடிவுகளை வெளியிடக்கூடாது" என்று உத்தரவிட்டார்.

வெடி வெடித்து கொண்டாட்டம்
பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த ஓபிஎஸ் தரப்பு தடை கோரியது, ஆனால், அதற்கு நீதிபதி தடை ஏதும் விதிக்கவில்லை, முடிவை மார்ச் 24ஆம் தேதி வரை வெளியிடக்கூடாது என்று மட்டுமே கூறியுள்ளார். அதாவது 4 நாட்களுக்கு முடிவை அறிவிக்க முடியாது, அவ்வளவுதான். எனினும், இதனை ஓபிஎஸ் தரப்பினர் கொண்டாடி வருகின்றனர். இந்த உத்தரவையடுத்து, "இது எங்களுக்கு கிடைத்த வெற்றி" எனக் கூறி ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் வெடி வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

ஜெயிலுக்குப் போகவேண்டும்
உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான முடிவை, தள்ளிப் போட்டதே எங்களுக்கு கிடைத்த வெற்றிதான். நீதி, நேர்மை எங்கள் பக்கம் இருக்கிறது; பொதுச்செயலாளர் என்று அறிவித்தால் பழனிசாமி ஜெயிலுக்குதான் செல்ல வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications