இவர் முக்கியம்.. பகைச்சுக்க கூடாது.. எடப்பாடியை டெல்லிக்கு அழைத்த மோடி? ஏன்? இதுதான் காரணம்!
சென்னை: தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் அதிக இடங்களை வாங்க பாஜக முயன்று வருவதாக தகவல்கள் வருகின்றன. டெல்லியில் நேற்று நடைபெற்ற கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி அழைக்கப்பட்டதற்கும், இந்த கூட்டணி கணக்கிற்கும் இடையே முக்கிய தொடர்பு இருப்பதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலுக்கு மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கடந்த லோக்சபா தேர்தலுக்கு தமிழ்நாட்டில் அதிமுக மெகா கூட்டணி அமைத்து இருந்தது. அதிமுக + பாஜக + பாமக + தேமுதிக இணைந்து லோக்சபா தேர்தலை சந்தித்தன.
ஆனால் சட்டசபை தேர்தலின் போதே இந்த கூட்டணி உடைந்தது. தேமுதிக வெளியேறி அமமுகவுடன் கூட்டணி வைத்தது. அதன்பின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாமக, பாஜகவும் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டது.

கூட்டணி
இந்த நிலையில்தான் சமீபத்தில் கூட்டம் ஒன்றில் பேசிய எடப்பாடி பழனிசாமி, நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைப்போம். மெகா கூட்டணியாக இது இருக்கும். அதிமுக அழிந்துவிடும் என்று நினைப்பவர்களின் கனவு பலிக்காது. பல காலமாக இந்த இயக்கம் அழிந்துவிடும் என்று நினைப்பவர்கள் ஏமாந்து போய் இருக்கிறார்கள். அதுதான் இப்போதும் நடக்கும். தமிழ்நாட்டில் மீண்டும் எம்ஜிஆர் ஆட்சியை நிலைநிறுத்துவோம். எங்கள் மீது வழக்குகளை போட்டு எங்களை முடக்க முடியாது. அதற்கு நாங்கள் விட மாட்டோம், என்று கூறினார். அவரின் இந்த அறிவிப்பு அதிமுகவினர் இடையே கவனம் பெற்றுள்ளது.

அண்ணாமலை
பாஜக தலைவர் அண்ணாமலை இதை உடனே வரவேற்று இருந்தார். அவர் தனது பேச்சில், அதிமுக தலைமையில் செயல்பட நாங்கள் தயார். இதில் எந்த குழப்பமும் இல்லை. அதிமுக பெரிய கட்சி. அவர்கள் தலைமையில் நாங்கள் செயல்பட தயார். 2024 தேர்தல் மிக முக்கியமானது. இந்த தேர்தலில் நாங்கள் பல கட்சிகளுக்கு முடிவுரை எழுதுவோம். யார் பலமான கட்சி என்பது அந்த தேர்தலில் நாங்கள் நிரூபிப்போம், என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஆனால் கூட்டணி கூடி வரும் நிலையில் எடப்பாடி - பாஜக இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

கருத்து வேறுபாடு
சமீபத்தில் மதுரைக்கு வந்த பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமியும், ஓ பன்னீர்செல்வமும் ஒன்றாக வரவேற்றனர். இந்த விஷயம்தான் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை அப்செட் ஆக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தன்னை தனியாக அழைக்கவில்லை. ஓபிஎஸ்ஸுக்கும், எனக்கும் ஒரே அளவு மரியாதை கொடுப்பது தவறு என்று எடப்பாடி பழனிசாமி அப்செட்டில் இருக்கிறாராம். இதனால்தான் மறுநாள் அமித் ஷாவை சந்திக்கவும் இவர் செல்லவில்லை. அமித் ஷா வரும்போதெல்லாம் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என்று எடப்பாடி சொல்ல காரணம் என்கிறார்கள் அரசியல் விவரம் அறிந்தவர்கள்.

சமாதானம்
இந்த மோதல் காரணமாக எடப்பாடி பழனிசாமி அதிமுக + காங்கிரஸ் + விசிக என்ற கூட்டணிக்கு முயன்று வருவதாகவும் கூட அரசியல் தரப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. காங்கிரஸின் வியூக வகுப்பாளராக இருக்கும் முக்கிய "மாஸ்டர்மைண்ட்" ஒருவரும் எடப்பாடியும் இதை பற்றி பரஸ்பரம் விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் - அதிமுக கூட்டணியை ஏற்படுத்த இவர்கள் தீவிரமாக முயன்று வருவதாக கூறப்படுகிறது. இந்த தகவல் தெரிந்துதான் எடப்பாடி பழனிசாமியை பாஜக தரப்பு டெல்லிக்கு வர சொல்லி மரியாதை கொடுத்துள்ளது என்கிறார்கள்.

எடப்பாடி டெல்லி
நேற்று டெல்லியில் ஜி 20 நடைபெற்ற இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். இதற்காக அவருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு கீழ், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்று கூறப்பட்டு இருந்தது. அதிமுகவில் ஒற்றை தலைமை வரும் காலத்தில் நீக்கப்பட்டாலும் கண்டிப்பாக எடப்பாடி கட்சிக்குள் முக்கிய சக்தியாக இருப்பார். முடிவு எடுக்கும் இடத்தில் இருப்பார். அவரை பகைத்துக்கொண்டால் கூட்டணியில் அதிக இடம் கிடைக்காது என்று பாஜக கருதுகிறதாம்.

20 இடங்கள்
தமிழ்நாட்டில் 15 லோக்சபா இடங்களில் வெல்ல வேண்டும் என்று பாஜக கணக்கு போட்டுள்ளதாம். இதற்கு குறைந்தது 20 இடங்களிலாவது போட்டியிட வேண்டும். இந்த இடங்களை வாங்க வேண்டும் என்றால் அதற்கு எடப்பாடி தயவு வேண்டும் என்றுதான் எடப்பாடிக்கு இந்த திடீர் மரியாதையை டெல்லி தரப்பு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை ஒற்றை தலைமை நீக்கப்பட்டு, ஓபிஎஸ் உள்ளே வந்தால் கூட எடப்பாடி அப்படியே ஓரம்கட்டப்பட மாட்டார். இதனால் அவரை சமாதானம் செய்ய வேண்டும் என்றே அவரை டெல்லிக்கு பாஜக தரப்பு அழைத்ததாக கூறப்படுகிறது.
-
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
குடும்ப தலைவிகளுக்கு பிரிட்ஜ் இலவசம்.. அதிமுக சார்பாக 297 தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட எடப்பாடி! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி












Click it and Unblock the Notifications