Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எல்லாம் முடிஞ்சிடுச்சா? எடப்பாடிக்கு மோடி தந்த "அங்கீகாரம்".. நொறுங்கிய ஓபிஎஸ்? நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று டெல்லியில் நடைபெற்ற ஜி 20 ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். ஓ பன்னீர்செல்வம் தரப்பை இந்த விஷயம் அப்செட் ஆக்கி உள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜி 20 கூட்டமைப்பிற்கு தலைமை வகிக்க இந்தியா தேர்வாகி உள்ளது. 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லியில் பிரம்மாண்ட உச்சி மாநாடும் நடக்க உள்ளது. இந்த நிலையில்தான் இதை பற்றி ஆலோசனை செய்ய நேற்று பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் கூட்டம் நடைபெற்றது.

குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில முதல்வர்கள், பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, துணைக் குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் இருந்து முதல்வர் ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, விசிக தலைவர் எம்பி திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

நேற்று டெல்லியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். இதற்கான கடிதம் 2 நாட்களுக்கு முன் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பப்பட்டது. அந்த கடித்ததில் எடப்பாடி பழனிசாமிக்கு கீழ், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்று கூறப்பட்டு இருந்தது. மத்தியில் பாஜக அரசு இதுவரை எடப்பாடியை இடைக்கால பொதுச்செயலாளர் என்று அழைத்ததே இல்லை. அண்ணாமலை, அமித் ஷா, மோடி என்று யாருமே எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்று அழைத்ததே இல்லை.

 கூட்டம்

கூட்டம்

ஆனால் சட்டப்படி இப்போது எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர்தான். அவரின் பதவிக்கு இன்னும் இடைக்கால தடை விதிக்கப்படவில்லை. பொதுக்குழு முடிவிற்கு இன்னும் இடைக்கால தடை விதிக்கப்படவில்லை. இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமியை முதல்முறையாக டெல்லி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்று அழைத்து உள்ளது. இது எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி தரப்பு இதனால் மிகுந்த குஷியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வம் தரப்பை இது கடும் அப்செட்டில் உள்ளாக்கி இருக்கிறதாம். கிட்டத்தட்ட ஓ பன்னீர்செல்வம் தரப்பை மனசு உடைய வைத்து இருக்கிறதாம். மோடி, அமித் ஷா வந்த போதெல்லாம் அவரை போய் பார்த்தேனே. டெல்லி சொன்னதெல்லாம் கேட்டேனே. அவரோடு ராசியாகத்தானே இருந்தேன். ஆனால் எனக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்கவில்லையே. நான் வழக்கு தொடுத்த நேரம் பார்த்து.. எடப்பாடியை இடைக்கால பொதுச்செயலாளர் என்று அழைத்தால் என்ன நியாயம். தேர்தல் ஆணையம் இந்த பொறுப்பை இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லையே . அப்படி இருக்கும் போது இவர்கள் மட்டும் அங்கீகரித்தது ஏன் என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு புலம்ப தொடங்கி உள்ளதாம்.

ஓ பன்னீர்செல்வம்

ஓ பன்னீர்செல்வம்

இன்னொரு பக்கம் டிடிவி தினகரன் தரப்பும் இதனால் கடும் அப்செட்டில் இருக்கிறதாம். அதன்படி, டெல்லி நமக்கு ராசியாக இருக்கிறது என்று தானே நினைத்தோம். நமக்கு நெருக்கமாக வந்து கொண்டு இருந்ததே. இப்போது எடப்பாடியை இப்படி அழைக்கிறார்கள். ஒருங்கிணைந்த அதிமுக இருந்தால் தானே கூட்டணியில் இருக்கும் பாஜகவிற்கு வசதி. ஆனால் இவர்கள் என்ன இப்போது எடப்பாடியை ஆதரித்து உள்ளனர். சமீபத்தில் அவர்தானே அமித் ஷாவை பார்க்க வேண்டும்.. பார்க்க அவசியம் இல்லை என்றெல்லாம் கூறினார். அப்படி இருக்கையில், அவருக்கு போய் இவ்வளவு பெரிய அங்கீகாரத்தை கொடுத்து இருக்கிறார்களே. என்ன நியாயம் இது, என்று டிடிவி தினகரன் தரப்பும் கடுப்பில் இருக்கிறதாம்.

டெல்லி சிக்னல்

டெல்லி சிக்னல்

இது தொடர்பாக 3 பின்னணிகளை டெல்லி தரப்பு நம்மிடம் தெரிவித்து உள்ளது. முதல் பின்னணி, உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை வந்தார். தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவர் வந்திருந்தார். இந்த நிலையில் அவரை தனியாக சந்திக்க ஓ பன்னீர்செல்வம் அனுமதி கேட்டு இருந்தார். ஆனால் இதற்கு அனுமதி தரப்படவில்லை. மாறாக அந்த தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க மட்டும் ஓ பன்னீர்செல்வத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டது. இதில் அமித் ஷாவை சந்தித்த ஓ பன்னீர்செல்வம் அவருக்கு கை கொடுத்தார். முன்னாள் முதல்வர் என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமிக்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் எடப்பாடி பழனிசாமி இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை.

அமித் ஷா

அமித் ஷா

அமித் ஷாவை தனியாக சந்திக்க அனுமதிக்கவில்லை என்பதற்காக எடப்பாடி பழனிசாமி இந்த கூட்டத்தை புறக்கணித்தார் என்று கூறப்பட்டது. அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம்.. சென்னை வந்த அமித் ஷாவை ஏன் சந்திக்கவில்லை என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு காட்டமாக பதில் அளித்த எடப்பாடி, அதிமுக பாஜக என்பது வேறு வேறு கட்சிகள். அதிமுகதான் தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சி. பாஜக என்பது தேசிய கட்சி. அதிமுக என்பது பிரதான மாநில கட்சி. அப்படி இருக்கும் போது அமித் ஷா தமிழ்நாடு வரும் போதெல்லாம் அமித் ஷாவை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் ஒவ்வொருமுறை வரும்போதெல்லாம் போய் சந்திக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டு உள்ளார்.

மோடி

மோடி

இந்த நிலையில்தான் தான் சொன்னது தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டதாக எடப்பாடி பாஜக டெல்லி தரப்பிடம் விளக்கம் அளித்துள்ளார் என்கிறார்கள். நான் சாதாரணமாக சொன்னேன். அதை தவறாக புரிந்துகொண்டுள்ளனர் என்று விளக்கம் அளித்துள்ளார் என்கிறார்கள். இவர் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நிலையில்தான் அவருக்கு டெல்லி இந்த முறை அழைப்பு விட்டதாக கூறப்படுகிறது. 2வது பின்னணி, அதிமுக சார்பாக ஒருவருக்கு மட்டுமே அனுமதி. முதல்வர்கள் மற்றும், கட்சியின் தலைவர்களுக்கு மட்டுமே அழைப்பு சென்றுள்ளது. அதிமுகவில் தலைமை பிரச்சனை என்பதால், எதிர்கட்சித் தலைவர் என்பதால் எடப்பாடிக்கு இந்த அழைப்பு சென்றுள்ளது. ஆனால் எதிர்க்கட்சி தலைவர்கள் என்ற தகுதியை மட்டும் வைத்துக்கொண்டு வேறு யாரும் கலந்து கொள்ளாத காரணத்தால், அழைப்பிதழில், இடைக்கால பொதுச்செயலாளர் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

3 விஷயங்கள்

3 விஷயங்கள்

3வது பிண்ணனி, அதிமுகவில் இன்னும் ஒரு வருடம் மோதல் நிலவ பாஜக விரும்புகிறது. அவர்கள் சேருவதை பாஜக விரும்பவில்லை. இதன் காரணமாகவே பாஜக இப்போது எடப்பாடியை ஆதரிக்கிறது. கடந்த வாரம் இதே பாஜக ஓ பன்னீர்செல்வத்துடன் நெருக்கமாக இருந்தது. இப்படி மாறி மாறி ஆதரவை காட்டி, அதிமுகவை குழப்ப நிலையிலேயே வைக்க பாஜக விரும்புகிறது. அப்போதுதான் பாஜக தனியாக வளர முடியும் என்று நினைக்கிறது என்று டெல்லி தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+