சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விமானத்தில் வந்தது.. ராஜீவ் நினைவிடத்தில் 3 மாம்பழங்களை வைத்த ராகுல்.. ஏன்? கலங்கடிக்கும் பின்னணி

Google Oneindia Tamil News

சென்னை: மறைந்த முன்னாள் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அவரின் மகன் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மூன்று மாம்பழங்களை வைத்து வழிபாடு செய்தார். அவர் ஏன் இப்படி மாம்பழங்களை வைத்து வழிபாடு நடத்தினார் என்ற குழப்பம் அங்கு இருந்த தொண்டர்கள் இடையே எழுந்தது.

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தலைமையில் இன்று பாரத் ஜோடோ யாத்திரை தொடங்க உள்ளது. இன்று பிற்பகல் விமானம் மூலம் ராகுல் காந்தி சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்கிறார். பின்னர் அங்கிருந்து காரில் கன்னியாகுமரி சென்று யாத்திரையை தொடங்குகிறார்..

யாத்திரையை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் இன்று ராகுல் காந்தி மரியாதை செய்தார். பின்னர் ராகுல் காந்தி அங்கேயே அமர்ந்து தியானம் செய்தார்.

வெறுப்பு அரசியலுக்காக என் தந்தையை இழந்தேன்.. தந்தை ராஜீவ் நினைவிடத்தில் ராகுல் காந்தி உருக்கம்! வெறுப்பு அரசியலுக்காக என் தந்தையை இழந்தேன்.. தந்தை ராஜீவ் நினைவிடத்தில் ராகுல் காந்தி உருக்கம்!

நெகிழ்ச்சி

நெகிழ்ச்சி

இந்த நிகழ்ச்சில் ராகுல் காந்தி மிகவும் உருக்கமாக காணப்பட்டார். முதலில் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி சுமார் 2 நிமிடம் நின்று அஞ்சலி செலுத்தினார். நினைவிடம் முழுக்க மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அங்கு மல்லிகை மலர்கள் ராகுல் காந்தியிடம் அஞ்சலி செலுத்த கொடுக்கப்பட்டது. இந்த மலர்களை நினைவிடத்தில் தூவி ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினார். அதன்பின் நினைவிடத்திற்கு எதிரே இருந்த பகுதியில் அமைதியாக அமர்ந்து தியானம் செய்தார்.

ராகுல்

ராகுல்

.அதன்பின்பாக ராஜீவ் காந்தி படுகொலையில் படுகொலையில் உயிர்நீத்த நபர்களின் குடும்பத்தினருடன் ராகுல் காந்தி இன்று சந்திப்பு நடத்தினார். அவர்களின் குறைகளை ராகுல் காந்தி கேட்டறிந்தார். ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் இருந்தனர். தமிழ்நாடு தலைவர்கள் பலரும் அவருடன் இருந்தனர். அதன்பின் அங்கே ராகுல் காந்தி சார்பாக மரக்கன்று நடப்பட்டது. ராகுல் காந்தி சார்பாக அங்கு அரசமரம் நடப்பட்டது

தீர்த்தம்

தீர்த்தம்

இந்த நிகழ்ச்சியில் ராஜீவ் காந்திக்கு இசை அஞ்சலி செலுத்தப்பட்டது. இசையஞ்சலியை வீணை காயத்ரி என்ற கலைஞர் நடத்தினார். நிகழ்ச்சிக்கு பின்பாக ராகுல் காந்தி இவரிடம் நன்றி தெரிவித்தார். அதேபோல் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் பல்வேறு புனித நீர்கள் இன்று தெளிக்கப்பட்டது. கோதாவரி, யமுனா, புனித மெக்காவில் இருந்து ஜம்ஜம் நீர், காவிரியில் இருந்து கொண்டு வரப்பட்ட நீர், நர்மதா நீர், கங்கை நீர், இயேசு ஞானஸ்தானம் செய்த ஜோர்டன் நீர் எல்லாம் தெளிக்கப்பட்டது.

 மாம்பழம்

மாம்பழம்

இந்த நிகழ்ச்சியில் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மூன்று மாம்பழங்களை வைத்தார். இது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. ஏன் மாம்பழத்தை ராகுல் காந்தி இங்கே வைக்கிறார் என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது. இது ராஜீவ்காந்தி விரும்பி சாப்பிடக்கூடிய பழம் ஆகும். அதிலும் ஆந்திராவை சேர்ந்த மாம்பழ வகை ராஜீவ் காந்திக்கு பிடிக்கும். ராஜீவ் காந்தி பலியான அன்று இந்த பழத்தை கடைசியாக சாப்பிட்டு இருக்கிறார். இந்த நினைவாக ஆந்திராவில் இருந்து விமானத்தில் கொண்டு வரப்பட்டு அந்த பழத்தை ராஜீவ் நினைவிடத்தில் ராகுல் காந்தி வைத்து வணங்கினார்.

English summary
Why does Rahul Gandhi offer Mangoes in Rajiv Gandhi Memorial ahead of Congress' Bharat Jodo Yatra? மறைந்த முன்னாள் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அவரின் மகன் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மூன்று மாம்பழங்களை வைத்து வழிபாடு செய்தார்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X