Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிறித்துவராக மாறிய ஆதி திராவிடர்களுக்கு இட ஒதுக்கீடு ஏன்? ஸ்டாலினின் மாஸ் கோரிக்கைக்கு காரணம் என்ன

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆதி திராவிடர்களாக இருந்து கிறிஸ்துவர்களாக மாறியவர்களுக்கு தொடர்ந்து ஆதி திராவிடர் பிரிவில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இன்று தனித்தீர்மானம் கொண்டு வர உள்ளார். இந்த தீர்மானத்திற்கு பின் முக்கியமான காரணம் ஒன்று உள்ளது.

இந்தியாவில் பல்வேறு பிரிவுகளுக்கு ஜாதி வாரியாக இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. உதாரணமாக ஆதி திராவிடர்கள், பழங்குடியினர் ஆகியோருக்கு குறிப்பிட்ட இடஒதுக்கீடு ஒரு பக்கம் வழங்கப்பட்டு வருகிறது.

பிற்படுத்தப்பட்டோருக்கு ஒரு குறிப்பிட்ட சதவிகித இடஒதுக்கீடு மாநில அளவில் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில்தான் இந்தியாவிலேயே அதிகபட்ச இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

Why does Tamil Nadu CM Stalin want Reservations for Christian Dalits/ STs?

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 69 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் உயர் சாதியினருக்கான பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு வழக்கில், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தேசிய அளவில் நிலவி வந்த 50 சதவிகித இடஒதுக்கீடு கட்டுப்பாட்டிற்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டது.. தேசிய அளவில் மாநில அரசு மத்திய அரசு சேர்த்து மொத்தம் 50 சதவிகிதம் மட்டுமே அதிகபட்சமாக இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

அதற்கு மேல் இடஒதுக்கீடு வழங்க கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமே இதற்கு விதி விலக்கு உள்ளது. சிறப்பு அதிகாரம் மூலம் தமிழ்நாடு மட்டும் 69 சதவிகிதம் இடஒதுக்கீடு கொண்டு உள்ளது. இந்த நிலையில்தான் 50 சதவிகிதம் இடஒதுக்கீடு கட்டுப்பாடு என்பது கட்டாயம் அல்ல. அரசியலமைப்பு ரீதியாக இதை மீறவே கூடாது என்ற விதி எதுவும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு வழக்கில் குறிப்பிட்டது.

Why does Tamil Nadu CM Stalin want Reservations for Christian Dalits/ STs?

இந்த நிலையில்தான் தற்போது முதல்வர் ஸ்டாலின், ஆதி திராவிடர்களாக இருந்து கிறிஸ்துவர்களாக மாறியவர்களுக்கு தொடர்ந்து ஆதி திராவிடர் பிரிவில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டசபையில் இன்று தனித்தீர்மானம் கொண்டு வர உள்ளார்

ஆதி திராவிடர்கள் எஸ்டி பிரிவில் இடஒதுக்கீடு பெற்று வருகிறார்கள். ஆனால் இவர்கள் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினால் அவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் கீழ் (Backward Caste) சான்றிதழ் அளிக்கப்படும்.

இதனால் இவர்களுக்கு எஸ்டி ரீதியாக கிடைக்கும் இடஒதுக்கீடு சலுகைகள் எதுவும் வழங்கப்படாது. இதையடுத்தே முதல்வர் ஸ்டாலின் இன்று மத்திய அரசு வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வர உள்ளார்.

அதுதான் ஜாதி வேண்டாம் என்று இவர்கள் கிறிஸ்துவத்திற்கு மாறிவிட்டார்களே.. பின்னர் ஏன் அவர்களுக்கு தொடர்ந்து ஜாதி ரீதியிலான இடஒதுக்கீடு என்று சிலர் கேட்கலாம். ஆனால் முதல்வர் ஸ்டாலின் இந்த தீர்மானத்திற்கு பின் முக்கியமான சில காரணங்கள் உள்ளன.

Why does Tamil Nadu CM Stalin want Reservations for Christian Dalits/ STs?

1. இடஒதுக்கீடு என்பது ஜாதி ஒழிப்பு, வறுமை ஒழிப்பு திட்டம் அல்ல. அது சம வாய்ப்பை ஏற்படுத்தும் திட்டம் ஆகும்.

2. ஒருவர் ஆதி திராவிடர் பிரிவில் பிறந்து.. அவரின் குடும்பம் பல நூறு ஆண்டுகளாக சம வாய்ப்பை பெறாமல் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த நபர்தான் குடும்பத்தில் முதல் முறை கல்லூரி செல்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.. அவருக்கு சம வாய்ப்பை கொடுக்க இடஒதுக்கீடு அவசியம்.

3. ஒருவேளை அந்த நபர் கிறிஸ்துவராக மாறிவிட்டாலும் கூட.. அவரின் குடும்பம் அத்தனை நூறு ஆண்டுகளாக அனுபவித்த சமூக சிக்கல்கள் மதம் மாறியதும் முடிவிற்கு வந்து விடாது. அதுதான் ஜாதி வேண்டாம் என்று இவர்கள் கிறிஸ்துவத்திற்கு மாறிவிட்டார்களே.. பின்னர் ஏன் அவர்களுக்கு தொடர்ந்து ஜாதி ரீதியிலான இடஒதுக்கீடு என்று கேட்க முடியாது.

4. ஏனென்றால் மதம் மாறினாலும்.. அவர்கள் இன்னும் பல நூறு ஆண்டுகள் பின்னோக்கி இருக்கிறார்கள். அவர்களை மொத்தமாக மேலே கொண்டு வந்தால்தான் சமூக நீதி ஏற்படும்.

5. ஒருநாளில் மதம் மாறுவதால் அவர்கள் அத்தனை காலம் அனுப்பிவைத்த இன்னல்கள் இல்லாமல் ஆகிவிடாது. அதை சரி செய்ய அவர்களுக்கு சம வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என்பதாலேயே இந்த இடஒதுக்கீடு அங்கே கொண்டு வரப்பட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்ற உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+