8 பேர் பலி + வீணான உணவு + கனிமொழி.. அதிமுக மாநாட்டில் ஏகப்பட்ட சர்ச்சை.. நடுவில் எடப்பாடி.. போச்சே
சென்னை; மதுரையில் நடைபெற்ற பிரம்மாண்ட அதிமுக மாநாடு தற்போது பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகி இருக்கிறது. அங்கே நடைபெற்ற பல சம்பவங்கள் கடுமையான விமர்சனங்களை, விவாதங்களை சந்தித்து உள்ளது.
மதுரையில் அதிமுகவின் எழுச்சி மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆன பின் நடந்த மிகப்பெரிய மாநாடு ஆகும் இது.

பொதுவாக எடப்பாடி பழனிச்சாமி என்றால் கோவை, கொங்கு என்ற பிம்பம் உண்டு. அதேபோல் கவுண்டர்களுக்கான கட்சி என்ற பிம்பமும் வந்துவிட்டது. அதை உடைக்கும் வகையில் மதுரையிலும், முக்குலத்தோரை அழைத்தும் மிக பிரம்மாண்ட மாநாட்டை நடத்தி காட்டி இருக்கிறார் எடப்பாடி.
அதிமுகவினர் இடையே புதிய உற்சாகத்தை இந்த மாநாடு கொடுத்து உள்ளது. லோக்சபா தேர்தலுக்கு மிகப்பெரிய தொடக்கமாக இந்த மாநாடு அமைந்து உள்ளது. சுணங்கி போன தொண்டர்கள் எழுச்சி பெறுவதற்கு இந்த மாநாடு சிறப்பாக வழி ஏற்படுத்தியும் கொடுத்து உள்ளது.
அதிமுகவில் இவ்வளவு விவாதங்களை ஏற்படுத்தி இருக்கும் இந்த மாநாடு வேறு சில காரணங்களுக்காக கடுமையான விமர்சனங்களை, விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

கனிமொழி சர்ச்சை; இந்த மாநாட்டில் தலைவர்கள் மேடையில் இருக்கும் நேரத்தில் பாடல் பாடிய ஒருவர் கனிமொழியை கடுமையாக விமர்சனம் செய்து பேசினர். கனிமொழியை மிக கடுமையான வார்த்தைகளில் , அச்சில் ஏற்ற முடியாத வகையில் கடுமையாக பேசினார்.
ஆனால் அதிமுகவினர் இந்த ஆபாசமான வார்த்தைகளை கேட்டு, எதுவும் சொல்லாமல், அவரின் பாடலை ரசித்தனர். இந்த வீடியோ வெளியாகி தற்போது இணையத்தை உலுக்கி உள்ளது. எடப்பாடி இதை பற்றி வாய் திறக்காதது கடும் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
8 பேர் மரணம்: அதேபோல் இந்த அதிமுக மாநாட்டில் 8 பேர் பலியாகி உள்ளனர். இவர்கள் கூட்ட நெரிசல், மது, விபத்து என்று பல்வேறு காரணங்களால் பலியாகி உள்ளனர். ஆனால் இந்த செய்தி வெளியே வராமல் விழா கமிட்டியினர் முடிந்த அளவு அதை மறைத்து உள்ளனர்.
நேற்று எடப்பாடி பழனிசாமி இவர்களுக்கு நிவாரணம் வழங்குவதாக அறிவித்தார். அதன்பின்புதான் இந்த விஷயம் வெளியேவே தெரிந்தது. அதுவரை இந்த விஷயம் பற்றி ஊடகத்திற்கு கூட செய்திகள் கசியவில்லை.

உணவு வீணானது: மதுரை ரிங்ரோடு பகுதியில் இந்த கூட்டம். நடந்தது. கிட்டத்தட்ட 63 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
2 லட்சம் பேர் கலந்து கொள்ளும் விதமாக இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகள் நடந்தது. கூட்டத்திற்கு வரும் மக்கள் பலர் நேற்றே இதற்காக மதுரை வந்து சேர்ந்தனர். மதுரையில் காலை எடப்பாடி பழனிசாமி கொடி ஏற்றி கூட்டத்தை தொடங்கி வைத்தார். கூட்டத்தில் 3 லட்சம் பேருக்கு உணவு தயாரிக்கப்பட்டது.
புளி சாதம் தயாரிக்கப்பட்டதால் உணவு வீணாய் போனது. 1 லட்சம் பேர் மட்டுமே கூட்டத்திற்கு வந்ததால் நேற்று 2 லட்சம் பேருக்கான உணவு தரையில் கொட்டப்பட்டது. இந்த சம்பவம் இணையத்தை உலுக்கி உள்ளது. இந்த பல்வேறு விஷயங்களால் தற்போது மதுரையில் நடைபெற்ற பிரம்மாண்ட அதிமுக மாநாடு தற்போது பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகி இருக்கிறது.
-
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்!












Click it and Unblock the Notifications