"அறிவாலயம்" ரூட்டை பிடித்த ராமதாஸ்.. 2 நாளைக்கு ஒரு முறை.. என்னாவா இருக்கும்? இது வேற லெவலா இருக்கே?

முதல்வர் ஸ்டாலினை ராமதாஸ் மறைமுகமாக பாராட்டி வருகிறார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக பக்கம் மெல்ல "சாய்ந்து" கொண்டிருக்கிறது பாமக.. 2 நாளைக்கு ஒருமுறை ஸ்டாலின் அரசை மறைமுகமாக பாராட்டி கொண்டுமிருக்கிறார் டாக்டர் ராமதாஸ்.. என்னவா இருக்கும்?

இன்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 2 ட்வீட்களை பதிவிட்டுள்ளார்.. இரண்டுமே தொற்றினை பற்றியதுதான்..

முதல் ட்வீட்டில், "தமிழ்நாட்டில் தினசரி கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 5000-க்கும் கீழ் குறைந்தாலும் தினசரி சோதனைகளின் எண்ணிக்கை 1.60 லட்சத்திற்கும் கீழ் குறையாமல் தொடர்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு இது சரியான நடவடிக்கை!" என்று பதிவிட்டுள்ளார்.

ட்வீட்கள்

ட்வீட்கள்

இரண்டாவது ட்விட்டில், "தமிழ்நாட்டில் கொரோனா சோதனைகளின் எண்ணிக்கை இதே அளவில் தொடர வேண்டும். கொரோனா பரவல் தீவிரமடைகிறதா? என்பதை கண்காணிப்பதற்கான சிறந்த வழிமுறை சோதனைகள் தான். அவை குறைக்கப்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்!" என்று பதிவிட்டுள்ளார்.

 அன்புமணி

அன்புமணி

கடந்த 2 வருஷமாகவே கொரோனா தொற்றினை ஒழிக்கவும், குறைக்கவும், ராமதாஸும்சரி, அன்புமணியும்சரி, இரண்டு டாக்டர்களுமே நிறைய ஆலோசனைகளை அரசுக்கு சொல்லி கொண்டிருக்கிறார்கள்.. மக்களுக்கும் அறிவுறுத்தி வருகிறார்கள்.. அந்த வகையில் இந்த ட்வீட்களையும் லிஸ்ட்டில் சேர்த்துவிடலாம்.

 அணுகுமுறை

அணுகுமுறை

அதேசமயம், அரசியல் ரீதியாக பாமகவின் அணுகுமுறையில் கொஞ்ச நாட்களாகவே மாறுபாடு தென்பட்டு வருகிறது.. முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றதுமே இந்த அறிகுறி தென்பட துவங்கியது எனலாம்.. காரணம், தேர்தலில் வெற்றி பெற்ற பாமக எம்எல்ஏக்கள், முதல்வர் ஸ்டாலினின் ரூமுக்குள் வலிய சென்று தங்கள் பாராட்டை சொல்லினார்கள்..

விமர்சனம்

விமர்சனம்

இந்த 5 வருடமாக திமுகவை அதிகமாக விமர்சித்தது பாமகதான்.. ஆனால், இப்போது பாமக தலைவர்கள் ராமதாஸ் முதல் அன்புமணி வரை திமுக கொண்டு வரும் அனைத்து அறிவிப்புகள், திட்டங்களுக்கு அறிக்கை விட்டு வரவேற்றும் வருகிறார்கள்.. அப்படித்தான் இன்றும் டாக்டர் ராமதாஸ் 2 ட்வீட்களை பதிவிட்டு தமிழக அரசை தொடர்ந்து பாராட்டியபடி இருக்கிறார்...

அதிமுக

அதிமுக

கடந்த அதிமுக ஆட்சியில், கொரோனா டெஸ்ட்கள் குறைக்கப்பட்டதாக ஒரு புகார் வந்தது... இப்போது அப்படி இல்லை என்பதைதான் ராமதாஸ் இன்றைய ட்வீட்கள் மூலம் மறைமுகமாக சொல்கிறார்... இது நிச்சயம் அமைச்சர் மா.சுவுக்கு கிடைத்த பாஸ் மார்க்.. அவருக்கே அனைத்துவிதமான பாராட்டும் போய் சேர வேண்டும் என்பதை மறுப்பதற்கில்லை.

சட்டசபை

சட்டசபை

ஆனால், இன்றைய தினம் இன்னொரு குற்றச்சாட்டு பாமக மீது கிளம்பி உள்ளது.. நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தில் பாமக தரப்பு வாயே திறக்க காணோம்.. திமுகவை எந்த குறையும் சொல்லி விமர்சனமும் செய்யவில்லை.. கேள்விளையும் கேட்கவில்லை.. புதிதாக சபைக்குள் நுழைந்துள்ள வானதி முதல் பாஜகவினர் பல கேள்விகளை கேட்டும், திமுகவை துளைத்து கொண்டும் இருந்த நிலையில், அதே கூட்டணியில் உள்ள பாமக மவுனம் காத்தது, பெருத்த சந்தேகத்தை கிளப்பி கொண்டிருக்கிறது.

 கருத்துக்கள்

கருத்துக்கள்

ஒருபக்கம் மவுனம், இன்னொரு பக்கம் பாராட்டு என பாமக வேறு ஒரு புது ரூட்டை பிடித்துள்ளது.. ஆனால், இது எதற்கான ரூட், யாருக்கான ரூட், என்றுதான் பிடிபடவில்லை.. இந்த 2 மாதமாக ராமதாஸ், திமுகவை மறைமுகமாக பாராட்டி கொண்டிருப்பதற்கு சோஷியல் மீடியாவிலும் எதிர்ப்பும் ஆதரவுமான கருத்துக்கள் எழுகின்றன..

 விமர்சனம்

விமர்சனம்

"நல்லது செய்தால் ஒருத்தரை பாராட்டக்கூடாதா? அப்படி பாராட்டுவது அரசியல் நாகரீகம்.. இதைதான் ராமதாஸ் செய்து வருகிறார்.. டாஸ்மாக் திறந்திருக்காங்களே, அதை வரவேற்றாரா? இல்லையே.. இழுத்து மூட சொல்லி கொண்டுதானே இருக்கிறார்.. கெட்டதை விமர்சிப்பதும், நல்லதை ஆதரிப்பதும்தான் டாக்டர் ஐயாவின் குணம் என்கிறார்கள் ஒரு தரப்பினர்.

கூட்டணி

கூட்டணி

இன்னொரு தரப்பினரோ, "அய்யா, நீங்க பாஜக கூட்டணியில் இருக்கிறீர்கள் என்பதையே அடிக்கடி மறந்துடறீங்க.. கொஞ்சம் ஓவரா தான் புகழறீங்க.." என்று பாமகவின் கூட்டணியை நினைவூட்டிக் கொண்டிருக்கிறார்கள்.. ஆக, ராமதாஸின் ட்விட்டர் களம், அரசியல் களத்தை விட அனலடித்து கொண்டிருக்கிறது..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+