இவ்ளோ பேசுற எடப்பாடி பழனிச்சாமி எங்கப்பா.. "ஒரு பிடி பிடித்த" சேகர்பாபு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பெருமழை பாதிப்பு என்று விமர்சிக்கும் எடப்பாடி பழனிசாமி, கடந்த 4 நாட்களாக எங்கே இருந்தார் என்று அமைச்சர் சேகர்பாபு கேள்வி எழுப்பினார்.

கடந்த 4 நாட்களாக சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கினாலும், அடுத்த சில மணி நேரத்தில் மழைநீர் வடிகாலில் சென்றது.

இருந்த போதும் வடசென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது. பெரம்பூர், வியாசர்பாடி, பட்டாளம், புளியந்தோப்பு, கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகள் கனமழையால் அதிகம் பாதிப்புக்குள்ளானது.

அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை

அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை

இந்நிலையில் மழை வெள்ள பாதிப்பு தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியாராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து வட சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் சேகர்பாபு நேரில் பார்வையிட்டு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

அதிமுகவின் நிர்வாக சீர்கேடு

அதிமுகவின் நிர்வாக சீர்கேடு

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, சென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீர் 95 % வெளியேற்றப்பட்டுள்ளது. அங்குள்ள கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார். சுகாதாரப்பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும் வகையில் மருத்துவ முகாம்கள் அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் நிர்வாக சீர்கேடு காரணமாக கடந்த ஆண்டு தண்ணீர் தேங்கியது.

வடசென்னையில் பாதிப்பு

வடசென்னையில் பாதிப்பு

தற்போது தண்ணீர் நின்ற அனைத்து இடங்களிலும் ஒரு சொட்டு கூட இந்தாண்டு தண்ணீர் நிற்கவில்லை என்று தெரிவித்தார். வட சென்னை பகுதியல் அதிகளவு தண்ணீர் தேங்கியுள்ளது தொடர்பான கேள்விக்கு, வட சென்னை தாழ்வான பகுதி என்பதாலும், மக்கள் அதிகளவில் இருப்பதாலும் மழைநீர் தேங்குவதற்கு காரணமாக அமைந்துள்ளது. கொசஸ்தலை ஆறு சீரமைக்கும் பணியை திமுக அரசு தொடங்கியுள்ளது. 40 சதவிகித பணிகள் நிறைவடைந்துள்ளது. அது முடிவுக்கு வந்ததும், வடசென்னையில் மழைநீர் தேங்காமல் இருக்கும் என்று தெரிவித்தார்.

எங்கே போனார் இபிஎஸ்?

எங்கே போனார் இபிஎஸ்?

தொடர்ந்து மழைநீர் வடிகால் பணிகள் பற்றிய எடப்பாடி பழனிசாமி விமர்சனம் பற்றிய கேள்விக்கு, 2016ம் ஆண்டு பெருமழையின் போதும், 2020ம் ஆண்டு பெய்த கனமழையின் போதும் அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலினின் கால்பதிக்காத இடங்களில்லை. பெருமழை பாதிப்பு என்று குறை கூறும் எடப்பாடி பழனிசாமி, கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்த போது எங்காவது வந்தாரா, நிவாரண பணிகளை மேற்கொண்டாரா? 10 ஆண்டு காலமாக மாநகராட்சியை சீரழித்துவிட்டார்கள்.

உருப்படியான திட்டம் இல்லை

உருப்படியான திட்டம் இல்லை

எடப்பாடி பழனிசாமி சென்னை மழை பாதிப்பு தொடர்பாக எந்த குறை கூறினாலும் எங்களின் பணி தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். மத்திய அரசுக்கு பயந்து, பயந்து ஆட்சியை நடத்தி உருப்படியாக எந்த திட்டத்தையும் கொண்டு வராமல் அதிமுக செயல்பட்டது. உள்ளாட்சித்துறை அமைச்சராக, மேயராக மு.க.ஸ்டாலின் சரியாக செயல்படாததால் தான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறி இருந்தார். அடுத்த 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்து அதிமுக தான். அப்போது ஒழுங்காக செயல்பட்டிருந்தால், இப்போது எந்த பிரச்சினையும் இருந்திருக்காது என்று ஆவேசமாக பதில் அளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+