ஒரே கல்லில் 2 மாங்காய் அடித்த எடப்பாடி.. "அது பாஜக, என்னங்க இப்டி பண்ணிட்டீங்க".. சீக்ரெட்டே இதுதான்

எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டணி தொடரும் என சொல்ல என்ன காரணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜகவுடன் தேசிய அரசியலில் இணைந்தே செயல்படுவோம் என்று முன்னாள் முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி 2 நாளைக்கு முன்பு தெரிவித்தார்.. இதற்கான காரணங்கள் லேசாக கசிந்து வருகிறது.

மற்ற தேர்தல்களை போலவேதான் இந்த முறையும் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையில் கறார் காட்டியது.. கடந்த சட்டமன்ற தேர்தலில் 70 சீட் வந்தாகணும், நாங்க தனித்து நின்றாலே 60 சீட்களில் வெற்றி பெறுவோம், கோட்டையில் காவி கொடி பறக்கும் என்றும் பேட்டி தந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஆனால், அதிமுகவை தவிர்த்து விட்டு, பாஜகவால் தனித்து களம் காண முடியவில்லை.. இந்த முறை 4 சீட் வெற்றி பெற்றதற்கு காரணமே அதிமுகவுடன் கூட்டணி வைத்ததுதான் என்பதை பெரும்பாலானோர் மறுக்க முடியாது.

 ஷாக்

ஷாக்

வழக்கம்போல, இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் பேச்சுவார்த்தையை அதிமுக தொடங்கியது.. வழக்கம்போலவே இத்தனை இடங்கள், இன்னின்ன இடங்கள் வேண்டும் என்று லிஸ்ட் போட்டும் தந்தது.. இந்த சமயத்தில்தான் நயினார் நாகேந்திரனின் பேச்சு அதிமுக மேலிடத்தை எரிச்சல் கிளப்பிவிட்டது.. இறுதியில் பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாமல், பாஜக தனித்து போட்டி என்று அறிவித்துவிட்டது..

 நயினார்

நயினார்

இந்த கூட்டணி முறிவுக்கு நயினார் பேசியதுதான் ஒரு காரணமாக பிரதானமாக சொல்லப்பட்டு வருகிறது. இனி எப்போது தேர்தல் வந்தாலும், அதிமுக தனித்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் கடந்த வாரமே முடிவு செய்து மேலிடத்துக்கு சொல்லி விட்டார்களாம். இதனிடையே, செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி பேசும்போது சொன்னதாவது:

 ஆதரவாளர்கள்

ஆதரவாளர்கள்

"உள்ளாட்சி தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் அதிக தொகுதிகள் போட்டியிட்டு, அதிக இடங்களை வெல்ல வேண்டும் என்றுதான் நினைப்பார்கள்.. அதனால் பாஜக தனித்து போட்டியிடுகிறது.. என்றார்.. எனினும் அதிமுகவின் மற்ற தலைவர்கள் இதை கேட்டு ஷாக் ஆகிவிட்டார்களாம்.. முக்கியமாக எடப்பாடியின் ஆதரவாளர்களான கேபி முனுசாமி, சிவி சண்முகம் உள்ளிட்டோர் எடப்பாடிக்கு போனை போட்டுள்ளனர்.

நிர்வாகிகள்

நிர்வாகிகள்

"ஏங்க இப்படி சொல்லிட்டீங்க? நமக்கு இதைவிட்டா வேற சான்ஸ் இல்லை, இப்படியே வரப்போகிற தேர்தலிலும் பாஜகவை விட்டு தனித்து போட்டியிடுவதுதான் சரி.. அதுதான் அதிமுக கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் விரும்புகிறார்கள் என்று சொன்னார்களாம். அதற்கு எடப்பாடி, "இது உள்ளாட்சி தேர்தல்தானே.. எப்படியும் குறைவான வாக்குகளைதான் வாங்குவார்கள்... அவர்கள் பெறும் அந்த வாக்குகளை அடிப்படையாக வைத்து, வரப்போகும் எம்பி தேர்தலில் சீட் தந்துவிடலாம்.. இதற்கு எதற்கு கூட்டணி முறிவு? பாஜக ஆட்சி 2 வருடம் உள்ள நிலையில், எதையும் அவசரமாக கையாள வேண்டாம்.. குறைவான சீட்டுகளே ஒதுக்க வேண்டி வரும், மேலும் கூட்டணியும் முறியாது" என்று சமாதானம் செய்தாராம்.

பாஜக

பாஜக

இதனிடையே, அதிமுகவும், பாஜகவும் தனித்தனியாக தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், இவர்களுக்கான வாக்கு சதவீதத்தில் மாறுபாடுகள் ஏதேனும் ஏற்படுமா என்பது குறித்து சில அரசியல் நோக்கர்களிடம் பேசினோம்.. அவர்கள் சொல்லும்போது, "இந்த முறை அதிக அளவு பாஜக இடங்களை கேட்டுவிட்டார்கள்.. அதுதான் முதல் பிரச்சனை.. கொஞ்சம் பொறுமையாகவும் விட்டுக் கொடுத்தும் போயிருந்தால், பாஜகவுக்கு ஓரளவு இடங்கள் கிடைத்திருக்கலாம்..

 திமுக

திமுக

ஆனால், அதிமுக தொண்டர்கள்தான் குஷியில் உள்ளனர்.. தனித்து போட்டியிடலாம் என்று அவர்கள்தான் இத்தனை காலமும் சொல்லி கொண்டே இருந்த நிலையில், இந்த முடிவை வரவேற்றுள்ளனர்.. அதேபோல அதிமுக - பாஜக கூட்டணி முறிவால் திமுக தரப்பும் குஷியாக இருக்கிறது.. காரணம், சிறுபான்மையினர் மட்டுமல்லாமல் பிராமணர் அல்லாத படித்த, மற்றும் பெரும்பான்மையான இந்து இளைஞர்களிடமும் பாஜக எதிர்ப்பு மனநிலை என்பது ஆழமாக உள்ளது.. எனவே இவர்கள் எல்லாம் பாஜக - அதிமுக இந்த 2 கட்சிகளுக்குமே ஓட்டு போட மாட்டார்கள் என்பதால் திமுகவுக்கே வாய்ப்பாக அமையும்" என்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+