சிரித்த முகம்.. அரவணைக்கும் பக்குவம்.. எடப்பாடி தொகுதியில் பழனிச்சாமி சூப்பர் வெற்றி!
சென்னை: சிரித்த முகம், அனைவரையும் அரவணைத்து செல்லும் பக்குவம் ஆகியவற்றை கொண்ட எடப்பாடி பழனிச்சாமி அவரது தொகுதியில் 92 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தில் போட்டியிட்ட 27 அமைச்சர்களில் 11 பேர் பின்னடைவை சந்தித்து வருவதாக செய்திகள் கூறுகின்றன.
போடியில் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வத்திற்கும் அவரை எதிர்த்து போட்டியிடும் திமுகவின் தங்கதமிழ்ச் செல்வனுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

திமுக
அதிமுக வேட்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி இதுவரை தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் 30,169 வாக்குகளை பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுகவின் சம்பத் குமார் 10,266 வாக்குகளை பெற்றுள்ளார்.

கோபம்
92 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றுள்ளார்.எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, செய்தியாளர்கள் கேள்விகளுக்கு கோபப்படாமல் பதில் அளிப்பார்.

கூவத்தூர்
ஜெயலலிதா இறந்தபிறகு கூவத்தூரில் சட்டசபை எம்எல்ஏக்கள் குழுவின் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது முதல் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பது வரை அனைத்திலும் பல சோதனைகளை கடந்தார். பின்னர் தினகரன் ஆதரவு எம்எல்ஏ, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மாற்ற வேண்டும் என ஆளுநரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதை சமாளிப்பதிலும் வெற்றி கண்டார்.

அரவணைப்பு
இவர் ஆட்சி செய்த 5 ஆண்டுகளைக் காட்டிலும் கடந்த 1 மாதமாக இவர் ஆற்றிய தேர்தல் களப்பணியும் இவருக்கு இத்தனை வாக்குகள் கிடைக்க காரணமாகும். மேலும் அதிமுக நிர்வாகிகளை அரவணைத்து செல்வதிலும் இவருக்கு நிகர் இவரே. இவருக்கு கொடுத்த ஏகோபித்த ஆதரவை பார்த்தால் மக்கள் செல்வாக்கு இவருக்கு இன்னும் உள்ளதாகவே தெரிகிறது. இவர் வெற்றி பெறுவாரா என்பது பொறுத்திருந்து பார்ப்போம்.
-
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!












Click it and Unblock the Notifications