“பாத்துக்கலாம்”.. குறுக்கே வந்த ஸ்டாலின்! சுமையை ஏற்ற அரசு - மின் கட்டணம் உயர்த்தப்படாததன் பின்னணி
சென்னை: மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசு பரிந்துரைத்தும் தமிழ்நாட்டில் வீடுகளுக்கு மின் கட்டணம் உயர்த்தப்படாததன் பின்னணியில் முதலமைச்சர் ஸ்டாலின் இருந்துள்ளார். அப்படி என்ன நடந்தது விரிவாக பார்ப்போம்.
கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசு ஒரு ஆணையை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி மின் எரிபொருள் மற்றும் கொள்முதல் விலை உயர்வினை உடனுக்குடன் நுகர்வோரிடமிருந்து வசூல் செய்வது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. இந்த விலை உயர்வினை மின் கட்டணத்தை உயர்த்தி நுகர்வோர்களிடமிருந்து மாதந்தோறும் பெற வேண்டும் என கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய அரசு மற்றொரு ஆணையையும் வெளியிட்டதாக தமிழ்நாடு அரசு கூறுகிறது.

அந்த ஆணையின் அடிப்படையில், இந்த விலை ஏற்றத்தால் ஏற்படக்கூடிய சுமையைக் கட்டுப்படுத்தும் வகையில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 2022-23 நிதியாண்டு முதல் 2026- 27 வரை 5 ஆண்டுகளுக்கான கட்டண உயர்வை பல்லாண்டு மின் கட்டண முறையான (MYT) வகையில் கடந்த 2022 செப்டம்பர் மாதம் வழங்கியது.
அந்த உத்தரவில் 2022 - 23 நிதியாண்டுக்கான உயர்த்தப்பட்ட கட்டணமும் அறிவிக்கப்பட்டது. அடுத்த 4 ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் வகையில் கட்டண உயர்வு முறையும் அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்துக்கான நுகர்வோர் விலை குறியீட்டு எண்ணை முந்தைய ஆண்டு ஏப்ரல் மாத விலைக் குறியீட்டு எண்ணுடன் ஒப்பீடு செய்து, கணக்கிடப்படும் நுகர்வோர் பணவீக்க உயர்வு அல்லது 6%, இவற்றில் எது குறைவோ அந்த அளவில் மின்கட்டண உயர்வை நடைமுறைபடுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது.
2023 ஜூலை மாதத்தைப் பொறுத்தவரையில், 2022 ஏப்ரல் மற்றும் 2023 ஏப்ரல் ஆகியவற்றின் நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்களின்படி கணக்கிட்டால், 4.7 சதவீதம் என்ற அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும். இதனை ஆய்வு செய்த முதலமைச்சர் முக ஸ்டாலின், ஆணையத்தின் உத்தரவை செயல்படுத்தும் போது பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
முதலமைச்சரின் அறிவுறுத்தலை ஏற்று கட்டண உயர்வு விகிதம் மறுஆய்வு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், 2022 ஏப்ரல் மாதத்தின் விலைக் குறியீட்டு எண்ணிற்கு பதிலாக சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் விலை குறியீட்டு எண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு இருக்கிறது. எனவே கட்டண உயர்வின் அளவு 4.7 சதவீதத்தில் இருந்து 2.18 சதவீதமாக குறைக்கப்பட்டு இருப்பதாக அரசு விளக்கி இருக்கிறது.
2.18 சதவீதம் மின் கட்டண குறைந்த உயர்வும் பொதுமக்களுக்கு சுமையாக இருக்கும் என்ற காரணத்தால், வீடுகளுக்கான மின் இணைப்புக்கு விதிக்கப்பட்ட 2.18 சதவீத கட்டண உயர்வையும் தமிழ்நாடு அரசே ஏற்று, மின் வாரியத்திற்கு மானியமாக வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்கள். இதன் காரணமாக வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித கட்டண உயர்வும் இருக்காது என்று தமிழ்நாடு அரசு அறிவித்து இருக்கிறது.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications