செங்கல்பட்டு இரட்டை கொலை: என்கவுன்ட்டர் நடந்தது ஏன்?.. போலீஸ் பரபரப்பு விளக்கம்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு காவல் நிலையம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்த இரு ரவுடிகள் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது எப்படி என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
செங்கல்பட்டு மாவட்டம் சின்னநத்தத்தை சேர்ந்தவர் கார்த்திக் என்ற அப்பு கார்த்திக் (38). இவர் மீது இரு கொலை வழக்கு உள்பட 13 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஒரு வழக்கு தொடர்பாக செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் நேற்று முன் தினம் கையெழுத்திட சென்றார்.
காவல் நிலையம் அருகேயுள்ள டீக்கடைக்கு சென்ற கார்த்திக் மீது இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் இரு நாட்டு வெடிகுண்டுகளை வீசியது. இதில் பலத்த காயமடைந்த கார்த்திக் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பலியானார்.

செங்கல்பட்டு
அதே கும்பல் கார்த்திக்கின் உறவினரான செங்கல்பட்டு மேட்டுத் தெருவை சேர்ந்த மகேஷை வீடு புகுந்து அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. இருவரையும் பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து எஸ் பி அரவிந்தன் உத்தரவிட்டார். இதையடுத்து செங்கல்பட்டு நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மாதவன், ஜெசிகா ஆகிய இருவரை கைது செய்தனர்.

நாட்டு வெடிகுண்டு வீசிய விவகாரம்
இந்த நிலையில் நாட்டு வெடிகுண்டு வீசிய விவகாரத்தில் அந்த கும்பல் செங்கல்பட்டை அடுத்த இருங்குன்றப்பள்ளி மலை பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று காலை அங்கு சென்றனர். அவர்களை பார்த்ததும் ரவுடிகள் அங்கிருந்து தப்பிச் செல்வதற்காக போலீஸார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். பின்னர் போலீஸாரை கத்தியாலும் வெட்ட துணிந்தனர்.

ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு
இதையடுத்து இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் துப்பாக்கியால் ரவுடி கும்பலை நோக்கி சுட்டார். இதில் செங்கல்பட்டை சேர்ந்த தினேஷ், பிஸ்கெட் மொய்தீன் ஆகியோர் அதே இடத்திலேயே இறந்தனர். காயமடைந்த போலீஸார் செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து வடக்கு மண்டல ஐஜி சந்தோஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில் கார்த்திக், மகேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடிகளான தினேஷ், பிஸ்கட் மொய்தீன் ஆகியோரை பிடிக்கச் சென்ற போலீஸார் மீது ரவுடி கும்பல் தாக்குதல் நடத்தியது.

தற்காப்புக்காக என்கவுன்ட்டர்
இதில் அவர்களை தற்காப்புக்காக இன்ஸ்பெக்டர் என்கவுன்ட்டர் செய்தார். பிடிபட்ட மாதவனிடம் விசாரணை நடத்தி வருகிறோம். கார்த்திக்கின் நண்பர் ஹரிகிருஷ்ணனுக்கு தினேஷின் தங்கை பவித்ராவுக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது. இதை தினேஷ் கண்டித்துள்ளார். இந்த விவகாரத்தில் ஹரிகிருஷ்ணனுக்கு ஆதரவாக கார்த்திக்கும் மகேஷும் இருந்துள்ளனர். இதனால் முன்விரோதம் ஏற்பட்டு தாக்கியதாக 2018 இல் ஒரு வழக்கு உள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்தது.

ரவுடிகளுக்கு வெடிகுண்டு விற்பனை
திருப்போரூரை சேர்ந்த அசோக்குமார் என்ற ரவுடியின் மனைவி ஜெசிகா ரவுடிகளுக்கு நாட்டு வெடிகுண்டு விற்பனை செய்து வருகிறார். அசோக்குமார் நண்பரான மொய்தீனுக்கும் அவர்தான் நாட்டு வெடிகுண்டுகளை வழங்கியதாக தெரிகிறது. கடந்த ஆண்டு அசோக்குமாரின் பிறந்தநாள் விழாவிலும் மொய்தீன பங்கேற்றுள்ளார். இதன் அடிப்படையில் ஜெசிகா கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்தார்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications