மோடியின் மாஸ்டர்பிளான்.. ஓய்வூதியத்தில் வர இருக்கும் மிகப்பெரிய மாற்றம்.. EPFO வெளியிட்ட அறிவிப்பு
சென்னை: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) உயர் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை ஜூலை 11 வரை நீட்டித்துள்ளது.
மத்திய அரசின் EPFO அமைப்புதான் ஊழியர்களின் பென்சன் கணக்குகளை நிர்வகித்து வருகிறது. ஊழியர்களுக்கு எப்படி பென்சன் கொடுக்க வேண்டும் என்பதற்கான விதிகளை வகுப்பது இவர்கள்தான்.
இந்த நிலையில் இந்த விதிகளில் இவர்கள் முக்கிய மாற்றங்களை செய்ய உள்ளார்களாம். தற்போது பயன்படுத்தப்படும் பாரம்பரிய விதியை மாற்ற இவர்கள் ஆலோசனை செய்து வருகின்றனர். இதற்கு இடையில்

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) உயர் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை ஜூலை 11 வரை நீட்டித்துள்ளது, இது இரண்டு மாதங்களுக்குள் இரண்டாவது முறையாக இப்படி காலக்கெடு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த முறை காலக்கெடுவை நீட்டிப்பதில் சில வித்தியாசங்கள் உள்ளன. அதன்படி நிறுவனங்களுக்கு செப்டம்பர் 30 வரை மூன்று மாதங்கள் கூடுதல் அவகாசம் மற்றும் ஊழியர்களுக்கு ஜூலை 11 வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் (இபிஎஸ்) கீழ் அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு ஜூன் 26ஆம் தேதியுடன் முடிவடைய இருந்தது. அது தற்போது நீட்டிக்கப்பட்டு உள்ளது. கூடுதல் உயர் ஓய்வூதிய விருப்பத்திற்காக, இதுவரை 16.06 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக EPFO அறிக்கை தெரிவித்துள்ளது.
மாற்றம்: இது போக இப்போது இருக்கும் விதிப்படி ஒருவர் வாங்கும் வருமானத்தில் கடந்த 60 மாதங்கள் பெற்ற சராசரி வருமானத்தாய் அவர்களின் பென்சன் சர்வீஸ் மூலம் பெருக்கி அதை 70 ஆல் வகுக்கும் முறை உள்ளது.ஆனால் இதை மாற்ற உள்ளனர். புதிய விதிப்படி வெறும் 60 மாத வருமானத்தின் சராசரியை மட்டும் கணக்கிடாமல் மொத்தமாக அவர்கள் வேலை பார்த்த அனைத்து வருடத்தின் சராசரி சம்பளம் எடுக்கப்படும்.
உதாரணமாக இப்போது இருக்கும் முறைப்படி கடந்த 60 மாதங்களில் உங்கள் வரும் 80 ஆயிரம் மற்றும் பென்சன் 32 வருடங்கள் என்று வைத்துக்கொள்வோம். 80,000 ஐ 32 ஆல் பெருக்கி 70 ஆல் வகுக்க வேண்டும். பென்சன் தொகை 36,571 ரூபாய் வரும்.புதிய முறைப்படி வெறும் 60 மாத வருமானத்தின் சராசரியை மட்டும் கணக்கிடாமல் மொத்தமாக அவர்கள் வேலை பார்த்த அனைத்து வருடத்தின் சராசரி சம்பளம் எடுக்கப்படும். இதனால் தொடக்க காலங்களில் நீங்கள் வாங்கிய 30, 40 ஆயிரம் வருமானத்தையும் வைத்து சராசரி கணக்கீடு செய்வார்கள்.

அப்படி செய்யும் பட்சத்தில் உங்களின் பென்சன் தொகை கணிசமாக குறையும். இந்த புதிய பென்சன் கணக்கீட்டு முறையைத்தான் கொண்டு வர மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் இபிஎப்ஓ ஆலோசனை செய்து வருகிறதாம்.இது இன்னும் அமலுக்கு வரவில்லை. தற்போதைக்கு பரிசீலனையில்தான் உள்ளது.
மோடி பிளான்: இது போக மத்திய அரசு பணியாளர்களுக்கு பிரதமர் மோடி முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2023ம் வருடம் தெலுங்கானா, திரிபுரா உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல்கள் நடக்க உள்ளன. கர்நாடக தேர்தல் காரணமாக வரப்போகும் இந்த தேர்தல்களில் வெற்றிபெறுவதற்கான தீவிரமான பணிகளை பாஜக அரசு செய்ய தொடங்கிவிட்டது.
இந்த தேர்தல்களை முன்னிட்டு, பல்வேறு முக்கிய அறிவிப்புகள், நலத்திட்டங்கள் மத்திய பாஜக அரசு மூலம் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான ஜாக்பாட் அறிவிப்புகள் சிலவற்றை மத்திய பாஜக அரசு வரும் நாட்களில் வெளியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான முக்கியமான ஒரு அறிவிப்பை மத்திய பாஜக அரசு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மத்திய அரசு ஊழியர்களின் வருமானம் பெரிய அளவில் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.அதன்படி, மீண்டும் அகவிலைப்படி உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் கூட தமிழ்நாட்டில் வேலை பார்க்கும் மாநில அரசு பணியாளர்களுக்கு 1-7-2022 முதல் அகவிலைப்படி 31 விழுக்காட்டில் இருந்து 34 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.அதன்படியே மத்திய அரசு ஊழியர்களுக்கும் மார்ச் மாதம் 23ம் தேதி அகவிலைப்படி 4 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டது.
அதுவரை 38% ஆக இருந்தது 42 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது. 7வது ஊதியக்குழுவின் படி ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்த்தப்படும். அந்த வகையில் ஜனவரி - ஜூன் மற்றும் ஜூலை - டிசம்பர் என்று இரண்டு கட்டமாக இந்த உயர்வு செய்யப்படும்.அடுத்த கட்ட அகவிலைப்படி உயர்வு பெரும்பாலும் இன்னும் 2 மாதங்களில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெரும்பாலும் முன்கூட்டியே.. அதாவது ஜூன் மாத இறுதியிலேயே இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கம் உயர்ந்து கொண்டே இருக்கும். பணவீக்கம் காரணமாக பொருட்களின் விலை உயரும். இந்த விலை உயர்வை சமாளிக்க மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்த்தப்படும்.
இதைத்தான் அகவிலைப்படி உயர்வு என்பார்கள். வருடத்திற்கு இரண்டு முறை இப்படி அகவிலைப்படி உயர்த்தப்படும். ஜனவரி - ஜூன் மற்றும் ஜூலை - டிசம்பர் என்று இரண்டு கட்டமாக இந்த உயர்வு செய்யப்படும். இந்த அகவிலைப்படி பொதுவாக 3 - 6 சதவிகிதம் உயர்த்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications