சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சாந்தினி கசமுசா.. மணிகண்டன் வழக்கில் "அவரை"யும் விசாரியுங்க.. புகழேந்தி திடீர் கோரிக்கை

மணிகண்டன் விவகாரத்தில் மாஜிக்களையும் விசாரிக்க புகழேந்தி கோரியுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: மணிகண்டனை சம்பந்தப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர்களையும், எடப்பாடி பழனிசாமியையும் விசாரிக்க வேண்டும் என்று புகழேந்தி தெரிவித்துள்ளது பரபரப்பை கிளப்பி வருகிறது.

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைதாகி உள்ளார்.. இவரிடம் விசாரணை நடந்து வருகிறது.. சாந்தினி யாரென்றே தனக்கு தெரியாது என்று அடித்து சொன்னவர், இப்போது ஓரளவு உண்மையை கக்கி வருகிறார்.

"நாங்க 2 பேரும் சம்மதத்துடன்தான் குடும்பம் நடத்தினோம்... சாந்தினியை கட்டாயப்படுத்தி குடும்பம் நடத்தவில்லை என்று ஒருவழியாக ஒப்புக் கொண்டுள்ளார்.. ஆனால், அபார்ஷன் பற்றி கேட்டதற்கு வாயே திறக்கவில்லையாம்.. நிர்வாண படங்களை சாந்தினிக்கு அனுப்பினீங்களாமே என்று கேட்டதற்கும் வாய் திறக்கவில்லையாம்.

 படுக்கை அறை

படுக்கை அறை

இதற்கு பிறகுதான் மணிகணிடனின் 2 செல்போன்களை போலீசார் ஆய்வு செய்துள்ளனர்.. சாந்தினி பற்றின க்ளூ ஏதாவது கிடைக்கும் என்று அதில் தேடினர்.. ஒன்றும் கிடைக்கவில்லை.. பிறகு சைபர் கிரைம் போலீசுக்கு செல்போனை தந்து உதவி கேட்டனர்.. அப்போதுதான், சாந்தினியுடன் ஒன்றாக படுக்கை அறையில் நிர்வாண நிலையில் எடுக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வீடியோக்கள், போட்டோக்கள் இருப்பது போலீசுக்கு தெரியவந்திருக்கிறது.

 சிட்டிங் எம்எல்ஏ

சிட்டிங் எம்எல்ஏ

இப்படி நித்தம் ஒரு தகவல் மணிகண்டன் விவகாரத்தில் வந்து கொண்டிருக்கும்போதுதான், மணிகண்டனின் அரசியல் சார்பான செய்திகளும் கசிந்து வருகின்றன.. போலீசார் கடந்த 10 நாட்களாக மணிகண்டனை வலைவீசி தேடி கொண்டிருந்தால், ஒரு சிட்டிங் எம்எல்ஏ தன்னுடைய வீட்டிலேயே மாஜிக்கு அடைக்கலம் தந்துள்ளார்.. இத்தனைக்கும் அவர் அதிமுக சேராத எம்எல்ஏ ஆவார்.

 பிரச்சனை

பிரச்சனை

இந்நிலையில்தான், புகழேந்தி ஒரு பிரச்சனையை கிளப்பி உள்ளார்.. பாலியல் புகாரில் கைதான மணிகண்டனை அதிமுகவில் இருந்து இப்போது வரை நீக்காதது ஏன் என்று கேட்டுள்ளார்.. இதை பற்றி செய்தியாளர்களிடம் புகழேந்தி சொல்லும்போது, "மணிகண்டன் முதலில் சாந்தினியின் புகாருக்கு மறுப்பு தெரிவித்தார்... பிறகு சாந்தினி பணம் பறிக்கும் கும்பலை சேர்ந்தவர் என்றார்... பிறகு 5 லட்சம் ரூபாய் சாந்தினிக்கு பணம் கொடுத்ததாக சொன்னார்.. பிறகு சாந்தினி அபார்ட்மென்ட்டில் 5 வருடங்கள் வாழ்ந்ததாக சொன்னார்..

 விசாரியுங்கள்

விசாரியுங்கள்

இப்படி தொடர் குற்றச்சாட்டுக்கு ஆளானவரை அதிமுக தலைமை ஏன் இன்னும் கட்சியிலிருந்து நீக்கவில்லை.. இதுவே அம்மா மட்டும் இருந்திருந்தால் இந்நேரம் ஒரே செகண்ட்டில் கட்சியை விட்டு மணிகண்டனை தூக்கியிருப்பார். ஆனால் தற்போதைய அதிமுக தலைமை மணிகண்டனுக்கு ஏன் துணை போகிறது? தேவைப்பட்டால் இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர்கள், எடப்பாடி பழனிசாமியையும் அழைத்து விசாரிக்கத்தான் வேண்டும்" என்றார். புகழேந்தி இப்படி சொன்னது கட்சிக்குள் வெடித்து கிளம்பி உள்ளது..

English summary
Why Ex Minister Manikandan hasnt been removed from ADMK, asks Pugazhendhi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X