சுப வீ தலைமையில் குழு.. பாலின சமத்துவமே இல்லை.. சமூக நீதி சாத்தியம் எப்படி .. எழும் விமர்சனங்கள்
சென்னை : சுப வீரபாண்டியன் தலைமையிலான சமூக நீதி கண்காணிப்பு குழுவில் உறுப்பினராக ஒரு பெண் கூட இல்லை. பாலின சமத்துவமே இல்லாத குழு எப்படி சமூக நீதியை கண்காணிக்கும் என விமர்சனங்கள் எழுந்துள்ளது.
சமூகநீதி அளவுகோலானது சட்டப்படி முழுமையாகச் செயல்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பதற்காக 'சமூகநீதிக் கண்காணிப்புக் குழு' அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்து இருந்தார்.
சமூகநீதி அரசாணையின் நூற்றாண்டு நாளினையொட்டி அவர் வெளியிட்டிருந்த அறிவிப்பில், தமிழக அரசு அமைக்கப்போகும் சமூகநீதிக் கண்காணிப்புக் குழு, கல்வி, வேலைவாய்ப்பு, பதவிகள், பதவி உயர்வுகள், நியமனங்கள் ஆகியவற்றில் சமூகநீதி அளவுகோல், முறையாக முழுமையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணித்து வழிகாட்டும், செயல்படுத்தும் பணிகளை மேற்கொள்வதோடு, இவை சரியாக நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்குப் பரிந்துரை செய்யும் என்று கூறியிருந்தார்.

சொன்னதை செய்தார்
மேலும் சமூக நீதி கண்காணிப்பு குழுவில் அரசு அலுவலர்கள், கல்வியாளர்கள், சட்ட வல்லுநர்கள் இடம் பெறுவார்கள் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, லைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்து, 'சமூகநீதிக் கண்காணிப்புக் குழுவினை' அமைத்து, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டார்.

யார் யார் உறுப்பினர்கள்
இந்த குழுவில் தலைவராக பேராசிரியர் சுப. வீரபாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் உறுப்பினர்களாக . முனைவர் கே. தனவேல், ஐஏஎஸ் (ஓய்வு) , பேராசிரியர் முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ், கவிஞர் மனுஷ்யபுத்திரன், ஏ.ஜெய்சன், பேராசிரியர் முனைவர் ஆர். ராஜேந்திரன் , கோ. கருணாநிதி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பரிந்துரைகள் வழங்கும்
இந்த சமூகநீதி கண்காணிப்புக் குழுவானது, சமூகநீதி அளவுகோல், முறையாக முழுமையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணித்து, அவை முழுமையாக பின்பற்றப்படாவிட்டால், உரிய நடவடிக்கையை மேற்கொள்ள அரசுக்கு அவ்வப்போது தமது பரிந்துரைகளை வழங்கும். இக்குழுவில் சமூகச் சீர்திருத்தத் துறை முதன்மைச் செயலாளர் உறுப்பினர்-செயலாளராக அங்கம் வகிப்பார் என்று முதல்வர் ஸ்டாலின் நேற்று கூறியிருந்தார்.

சமூக நீதி சத்தியமா
சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களில் ஒரு பெண் கூட நியமிக்கப்படாதது விமர்னசத்தை ஏற்படுத்தி உள்ளது. சமூக ஆர்வலர்கள், அரசியல் விமர்சகர்கள், சில பத்திரிக்கையாளர்கள் வெளிப்படையாக இதை தங்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு கேள்வி எழுப்பி உள்ளனர். சுப வீரபாண்டியன் தலைமையிலான சமூக நீதி கண்காணிப்பு குழுவில் உறுப்பினராக ஒரு பெண் கூட இல்லை. பாலின சமத்துவமே இல்லாத குழு எப்படி சமூக நீதியை கண்காணிக்கும் என்று கேட்டுள்ளனர்.

பாலின சமத்துவம் இல்லை
சமூக ஆர்வலர் ஒருவர் கூறும் போது, ஞசாதி ஒழிப்பு, பகுத்தறிவு, பிற்படுத்தப்பட்டோர் நலன், அடித்தட்டு மக்களுக்கான கல்வி உரிமை, அடித்தட்டு மக்களின் பொருளாதார மேம்பாடு இவை எல்லாவற்றையும் தீரமானிப்பதாக சமூக நீதி உள்ளது. மக்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான வாய்ப்புகள் கிடைக்காமல் போவதை கண்காணித்து சீரமைக்க சமூக நீதி கண்காணிப்பு குழு நிச்சயம் அவசியம். முதல்வர் ஸ்டாலினின் முயற்சி பாராட்டுக்குரியது. ஆனால் அதில் பெண்கள் ஒருவர் கூட இடம் பெறவில்லை. அதாவது பாலின சமத்துவமே இல்லை. பாலின சமத்துவம் இல்லாத இந்த குழு எப்படி சமூக நீதியை கண்காணிக்கும் என்ற ஐயம் எழுந்துள்ளது" என்று கூறியுள்ளார்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications