பட படவென பட்டாசு வெடிக்குது.. தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பது ஏன்? பின்னால் இப்படி ஒரு காரணமா?
சென்னை: தீபாவளி பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலையில் கங்கா ஸ்தானம் செய்து புத்தாடை உடுத்தி பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர் பொதுமக்கள். இந்த நிலையில் தீபாவளி பண்டிகை அன்று ஏன் பட்டாசு வெடிக்கப்படுகிறது என்ற கேள்வி பலருக்கும் எழலாம். இதற்கு பின்னர் ஒரு ஆன்மீக காரணம் இருக்கிறது..
தீபாவளி என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆர்வத்துடன் எதிர்பார்ப்பது பட்டாசு வெடிப்பதை தான். ஒவ்வொருவரும் வண்ணமயமான பட்டாசுகளை வெடித்து மகிழ்வது தீபாவளியின் பாரம்பரிய நிகழ்வுகளில் ஒன்றாகும்.
ஆனால், இதற்குப் பின்னால் ஒரு ஆழமான ஆன்மிக அர்த்தம் இருப்பதை பலர் கவனிக்கவில்லை. காமம், குரோதம், கோபம், மோகம், மாச்சரியம் போன்ற தீய குணங்கள் மனிதர்களில் இருந்து நீங்க வேண்டும் என்பதற்காகவே தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கப்படுகிறது என நம்பப்படுகிறது.

பட்டாசு வெடிப்பது, அந்த தீய குணங்களைத் தூள் தூளாக்கும் ஒரு சின்னமாக கருதப்படுகிறது. அதேபோல் தீபாவளி அன்று புத்தாடை அணிதல், எண்ணெய் தேய்த்து குளிக்கும் கங்கா ஸ்நானம், தீப ஒளி வழிபாடு போன்றவை அனைத்தும் நமது முன்னோர்கள் பின்பற்றிய பாரம்பரிய மரபுகள். அந்த வரிசையில் பட்டாசு வெடிப்பதும் மகிழ்ச்சி மற்றும் ஆன்மிக சின்னமாகக் கருதப்படுகிறது. இந்நாளில் சிலர் சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து கவலை தெரிவித்து, பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என கூறுகின்றனர்.
மறுபுறம், சிலர் "ஆண்டு முழுவதும் வாகனங்கள், தொழிற்சாலைகள் மூலம் மாசுபாடு ஏற்படுவது குறித்து யாரும் பேசவில்லை; ஆனால் ஒரு நாள் வெடிக்கும் பட்டாசுகளுக்கே குற்றம் சாட்டுவது சரியல்ல" என வாதிடுகின்றனர். எது எப்படியிருந்தாலும், அரசு சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கும் வகையில் பட்டாசு வெடிக்கும் நேரத்தை கட்டுப்படுத்தியுள்ளது.
தமிழக அரசின் அறிவிப்பின்படி, இந்த ஆண்டு தீபாவளி நாளில் காலை 6 மணி முதல் 7 மணி வரை மற்றும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நேரக் கட்டுப்பாடுடன் தீபாவளி கொண்டாடுவதன் மூலம் பாரம்பரிய மகிழ்ச்சியும் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் ஒன்றாக நிலைநாட்ட முடியும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications