Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Why not DMK for Sengottaiyan: தவெகவில் செங்கோட்டையன்! திமுகவில் இணையாததற்கு காரணம் "அந்த இருவர்"தானா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், திமுகவை விட்டுவிட்டு எதற்காக தவெகவில் இணைகிறார் என்பதற்கான தகவல்கள் வெளியாகியுள்ளன. அன்வர் ராஜா, மைத்ரேயன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் அதிமுகவில் இருந்து நேராக திமுகவில் இணைந்த நிலையில் செங்கோட்டையன் மட்டும் புதிய கட்சியான தவெகவை தேர்வு செய்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் மோதல் போக்கு ஏற்பட்டதை அடுத்து செங்கோட்டையன், அதிமுக ஒருங்கிணைப்பு என்ற ஒரு ஆயுதத்தை கையில் எடுத்தார். இதனால் அவரது கட்சி பதவி பறிபோனது.

sengottaiyan dmk tvk

அது போல் தேவர் ஜெயந்தியில் சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோருடன் நட்பு பாராட்டினார். ஏற்கெனவே அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் பேசியதால் கட்சி விரோத செயல்களில் செங்கோட்டையன் ஈடுபட்டதாக கூறி அவரை அதிமுகவில் இருந்தே நீக்கினார் எடப்பாடி பழனிசாமி.

செங்கோட்டையன்

இதையடுத்து செங்கோட்டையன் தனி கட்சியை தொடங்குவார் அல்லது அதிமுக ஒருங்கிணைப்பு என்பதில் பிடிவாதமாக இருப்பார் என சொல்லப்பட்டது. இந்த நிலையில் கடந்த இரு தினங்களாக செங்கோட்டையன், தவெகவில் இணையவுள்ளார் என தகவல்கள் வெளியாகின.

அரசியல் களம் காணாத செங்கோட்டையன்

தேர்தல் அரசியலில் களம் காணாத தவெகவுடன் 50 ஆண்டு அரசியல் அனுபவம் உள்ள செங்கோட்டையன் சேர்வாரா என்ற சந்தேகம் பலருக்கு எழுந்தது. அதிமுகவில் அதிருப்தியில் இருந்த சேகர்பாபு, செந்தில் பாலாஜி, தங்கதமிழ்ச் செல்வன், தோப்பு வெங்கடாசலம், அன்வர் ராஜா, மைத்ரேயன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்துள்ளனர்.

திமுகவில் செங்கோட்டையன்?

எனவே செங்கோட்டையனும் திமுகவில் இணைவார் என சொல்லப்பட்டது. அதிலும் இன்று உதயநிதி பிறந்தநாள் என்பதால் இன்றைய தினம் திமுகவில்தான் இணைவார் என சொல்லப்பட்டது. ஆனால் நேற்று பட்டினம்பாக்கத்தில் உள்ள விஜய்யின் இல்லத்தில் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தியதில் அவர் தவெகவில் இணைகிறார் என்பது உறுதியானது.

41 பேர் இறப்பு

செங்கோட்டையன் தவெகவில் இணைவது அக்கட்சிக்கு பெரும் பலத்தை கொடுக்கும். மேலும் கொங்கு மண்டலத்தில் தவெகவின் செல்வாக்கையும் உயர்த்தும். அது போல் கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான விவகாரத்தில் விஜய் மீது ஏற்பட்ட அதிருப்தி, அப்பகுதி மக்களிடையே மறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தவெகவுக்கு செங்கோட்டையன் செல்வது ஏன்

திமுகவை விட்டுவிட்டு செங்கோட்டையன், தவெகவுக்கு செல்வது ஏன் என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து அரசியல் ஆலோசகர் ரவீந்திரன் துரைசாமி கூறுகையில், "ஆரம்பத்தில் இருந்தே எம்ஜிஆருடன் இருந்து வரும் செங்கோட்டையனுக்கு திமுகவுக்கு செல்வது பிடிக்கவில்லை.

எம்ஜிஆர் எதிர்ப்பு

மேலும் திமுகவுக்கு சென்றால், எம்ஜிஆர், ஜெயலலிதாவின் படங்களை பிரசுரிக்காததற்கு செங்கோட்டையன், எடப்பாடி மீது கொந்தளித்தார். ஆனால் தற்போது எம்ஜிஆர், ஜெயலலிதாவை தூற்றும் திமுகவுக்கு சென்றுள்ளார் என செங்கோட்டையனுக்கு எதிராக நரேட்டிவ்வை அதிமுக செட் செய்யக் கூடும்.

மேலும் எம்ஜிஆர் காலத்திலிருந்தே கொங்கு மண்டலத்தில் முத்துசாமிக்கும் செங்கோட்டையனுக்கும் நல்லுறவு இல்லை. இந்த நிலையில் தற்போது திமுகவுக்கு சென்றால் முத்துசாமியை மீறி தன்னால் வளர முடியாது என செங்கோட்டையன் கருதியிருக்கலாம்.

ஜூனியர் இருக்கும் இடத்திலா?

மேலும் அதிமுகவில் ஜூனியராக இருந்த செந்தில் பாலாஜி, தற்போது கோவை மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக உள்ளார். முதல்வர் ஸ்டாலினுக்கு வலது கரமாகவும் செயல்படுகிறார். எனவே அவர் இருக்கும் திமுகவுக்கு சென்றாலும் தனக்கான முக்கிய பதவி கிடைக்காது என்றும் அவர் கருதியிருக்கலாம்.

நல்ல பதவி

எனவேதான் செங்கோட்டையன் தவெகவை தேர்வு செய்துள்ளார். விஜய், ஆரம்பத்திலிருந்தே அண்ணா, எம்ஜிஆர் குறித்து பேசி வருகிறார். எனவே தவெக சென்றால் தன் மீது எந்த விமர்சனமும் வராது என அவர் கருதியிருக்கலாம். தவெகவில் எல்லாரும் இவரை விட வயதில் சின்னவர்கள் என்றாலும் புஸ்ஸி ஆனந்துக்கு மேல் ஏதாவது ஒரு பதவி கிடைக்கும் என அவர் நினைத்திருக்கலாம். இதெல்லாம் சேர்த்துதான் அவர் தவெகவுக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. மேலும் அதிமுகவில் அதிருப்தியில் இருப்போர் திமுகவுக்கு செல்ல மனமில்லாமல் அதிருப்தியுடனே பயணிக்கும் நபர்களுக்கு செங்கோட்டையன் ஒரு மாற்று வழியையும் காட்டியுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+