டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபுவை நியமிக்க மறுக்கும் ஆளுநர்.. பின்னணியில் இந்த காரணமா?
சென்னை: டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபுவை நியமனம் செய்ய கோரும் தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்க மறுப்பது ஏன் தெரியுமா?
தமிழக அரசு தேர்வாணையம்.. டிஎன்பிஎஸ்சி இந்த ஆணையத்தின் மூலம்தான் பெரும்பாலான அரசு பதவிகளுக்கு நியமனம் செய்யப்படுகின்றன. வருவாய் கோட்டாட்சியர் பணி முதல் அலுவலக உதவியாளர் வரை தேர்வு நடத்தி நியமனம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் இந்த டிஎன்பிஎஸ்சி தலைவர், 13 உறுப்பினர்களை கொண்ட ஒரு தேர்வாணையம் ஆகும். இந்த தேர்வாணையத்தில் தலைவர் பதவி தற்போது காலியாக உள்ளது. அது போல் தற்போது 3 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர்.
அந்த 3 உறுப்பினர்களில் ஒருவரான முனியநாதன் (ஓய்வு) ஐஏஎஸ் பொறுப்புத் தலைவராக வகித்து வருவதால் 2 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளன. இந்த நிலையில்தான் டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபுவையும் 10 உறுப்பினர்களையும் நியமனம் செய்து அதற்கான பரிந்துரையை தமிழக அரசு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பியிருந்தது.
இதை ஒரு மாதமாக கிடப்பில் போட்டிருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென இந்த கோப்புகளை திருப்பி அனுப்பிவிட்டார். இது பெரும் சர்ச்சையை எழுப்பியது. நியமன அறிவிப்பை எப்படி வெளியிட்டீர்கள் என கேட்டுள்ளார். டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனத்தில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள் உள்ளன.
அப்படி வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்றப்படவில்லை என ஆளுநர் கூறியிருந்தார். டிஎன்பிஎஸ் தலைவர் நியமனம் தொடர்பாக செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிடப்பட்டதாக என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி , டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனத்தில் பின்பற்றப்பட்ட நடவடிக்கை குறித்து விவரங்களையும் கேட்டிருந்தார்.
இந்த நிலையில் தமிழக அரசு பரிந்துரைத்தும் சைலேந்திர பாபு நியமனத்தை ஆளுநர் ஏன் திருப்பி அனுப்பினார் என்பது குறித்து தகவல்கள் வெளியாகியிருந்தன. அதாவது டிஎன்பிஎஸ்சி தலைவரின் வயது வரம்பு என்பது 62 வயதாகும். ஆனால் சைலேந்திர பாபுவுக்கு தற்போது 61 வயது 2 மாதங்கள் ஆகியுள்ளன. எனவே டிஎன்பிஎஸ்சி தலைவராக அவரை நியமித்தால் அவரது பணிக்காலம் 10 மாதங்கள் வரை மட்டுமே நீடிக்கும். எனவே மீண்டும் அந்த பதவிக்கு தலைவரை நியமிக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்பதால்தான் நியமிக்கும் போதே 62 வயதுக்கு குறைந்த ஒருவரை நியமிக்குமாறு ஆளுநர் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications