என்ன வாய்க்கு வந்ததெல்லாம் பேசுறீங்க.. ஓ இதுதான் நயன்தாராவிற்கு தனுஷின் பதிலடியா? டிரெண்டான ரீல்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் தனுஷ் குறித்து நடிகை நயன்தாரா வைத்த புகார்கள், நயன்தாரா வெளியிட்ட அறிக்கைகள் பெரிய அளவில் விவாதப்பொருளாகி உள்ளன. இரண்டு தரப்பும் மாறி மாறி மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதுவரை நயன்தாரா புகாருக்கு தனுஷ் நேரடியாக பதிலடி கொடுக்கவில்லை. அறிக்கை எதையும் கொடுக்கவில்லை.

இப்படிப்பட்ட நிலையில்தான் தனுஷ் பதிலடி என்று கூறி நிறைய பொய்யான அறிக்கைகள், கடிதங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதிலும் தனுஷ் - நயன்தாரா நடித்த படங்களின் வீடியோக்கள் மீண்டும் டிரெண்டாக தொடங்கி உள்ளன. அந்த வகையில் யாரடி நீ மோகினி படத்தில் தனுஷ் நயன்தாராவை பார்த்து என்ன வாய்க்கு வந்ததெல்லாம் பேசுறீங்க என்று கேட்கும் காட்சிகளை தனுஷ் ஆதரவாளர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். இதுதான் தனுஷ் தர வேண்டிய பதிலடி என்று கூறி டிரெண்ட் செய்து வருகின்றனர்.

nayanthara dhanush

இந்த விவகாரம் தற்போது தனுஷ் - நயன்தாரா ரசிகர்களுக்கு இடையிலான மோதலாக மாறி உள்ளது. அருவெறுக்கத்தக்கும் வகையில் இரண்டு பேரின் ரசிகர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டு உள்ளது.

நயன்தாரா கடிதம்: முன்னதாக நயன்தாரா வெளியிட்ட அறிக்கையில், பல தவறான விஷயங்களைச் சரிசெய்வதற்காக இந்த திறந்த கடிதத்தை நான் எழுதி உள்ளேன். உங்கள் தந்தை மற்றும் சிறந்த இயக்குனரான உங்கள் சகோதரரின் ஆதரவுடனும், ஆசியுடனும் ஒரு பிரபல நடிகராக நீங்கள் வலம் வருகிறீர்கள். உங்களை போல அல்லாமல் சினிமா என்பது என்னைப் போன்றவர்களுக்கு வாழ்வதற்கான போராட்டம். சினிமாதொழில்துறையில் எந்த தொடர்பும் இல்லாத சுயமாக வந்த பெண் நான். நான் இன்று வகிக்கும் இந்த பதவிக்கு நான் போராட வேண்டியிருந்தது. அது சாதாரணமாக வரவில்லை.

நான் வெளியிடப்போகும் நெட்ஃபிக்ஸ் ஆவணப்படத்தின் ரிலீஸ் எனது ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் மட்டுமல்லாது பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது. நாங்கள் அனுபவித்த அனைத்து சிரமங்களையும் கடந்து இந்த ஆவணப்படத்தை வெளியிட உள்ளோம். மிகப்பெரிய குழு இதற்காக பணிகளை செய்துள்ளது. இது என்னை பற்றிய, என் வாழ்க்கையை பற்றிய , என் திருமணத்தை பற்றிய, நான் சினிமாவில் வேலை பார்த்தவர்கள் பற்றிய ஆவணப்படம்.

ஆனால் என் வாழ்வில் முக்கியமான படமான.. நானும் ரவுடிதான் படத்தின் கிளிப் ஒன்றையும், பாடலையும் வைக்க முடியாமல் நான் போராடிக்கொண்டு இருக்கிறேன். இதற்காக கடந்த 2 வருடமாக உங்களிடம் என்ஓசி வாங்க முடியாமல் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறேன். இதனால் அந்த படத்தில் உள்ள பாடல் ஒன்றை கூட பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளேன். அந்த படத்தில் வேலை பார்த்த சில புகைப்படங்களை கூட பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது.ஆனால் இந்த காட்சிகள், பாடல்கள், புகைப்படங்களை நீங்கள் எங்களுக்கு கொடுக்காமல் போனது என் இதயத்தை நொறுக்குகிறது.

நீங்கள் பிஸ்னஸ் தேவைகள் மற்றும் பண தேவைகள் காரணமாக இப்படி செய்துள்ளீர்கள் என்று எனக்கு தெரியும். ஆனால் எங்கள் உங்களுக்கு வன்மம் காரணமாகவே நீங்கள் இப்படி செய்துள்ளீர்கள் என்பது தெரியும். உங்களின் இந்த வன்மம் மனதை வதைக்கிறது.நான் பர்சனலாக எடுத்த.. எங்கள் போனில் எடுத்த சில புகைப்படங்கள் வீடியோக்களை கூட பயன்படுத்த அனுமதிக்காமல் நீங்கள் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதற்காக நீங்கள் 10 கோடி ரூபாய் கொடுத்ததும் கூட எங்கள் மனதை உருக்கி உள்ளது. உங்களின் மோசமான குணத்தை காட்டுகிறது. நீங்கள் எவ்வளவு தரம் தாழ்ந்துவிட்டீர்கள் என்பதை இது காட்டுகிறது. எங்கள் மீது உங்களுக்கு உள்ள கோபம்தான் இதற்கு காரணம். 3 நொடி வீடியோவிற்கு 10 கோடி ரூபாய் கேட்பதில் என்ன நியாயம். எங்கள் உங்களுக்கு வன்மம் காரணமாகவே நீங்கள் இப்படி செய்துள்ளீர்கள் என்பது தெரியும். உங்களின் இந்த வன்மம் மனதை வதைக்கிறது.

நீங்கள் உங்களுடைய அடுத்த ஆடியோ லாஞ்சில் கதைகளை சொல்லி கட்டுக்கதையாக பேசுவீர்கள் என்று தெரியும். சினிமாவிற்கு வெளியே தனிப்பட்ட வகையில் இவ்வளவு வன்மத்தோடு நீங்கள் செயல்படும் விதம் அதிர்ச்சி அளிக்கிறது, என்று நயன்தாரா குறிப்பிட்டு உள்ளார்.

மோதல் உச்சம்: நடிகர் தனுஷ் குறித்து நடிகை நயன்தாரா வைத்த புகார்கள்.. நேற்று நயன்தாரா வெளியிட்ட அறிக்கைகள் பெரிய அளவில் விவாதப்பொருளாகி உள்ளன. இந்த விவகாரம் தற்போது தனுஷ் - நயன்தாரா ரசிகர்களுக்கு இடையிலான மோதலாக மாறி உள்ளது. அருவெறுக்கத்தக்கும் வகையில் இரண்டு பேரின் ரசிகர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+