ராத்திரியில் "பறந்த" லெட்டர்.. செந்தில் பாலாஜியை சுற்றிவளைக்கும் டீம்.. கிலியை கிளப்பும் ஆளுநர்.. பலே
சென்னை: அவசர அவசரமாக டெல்லிக்கு கிளம்பி சென்ற ஆளுநர் ரவியின், அடுத்தக்கட்ட "மூவ்" மிகப்பெரிய எதிர்பார்ப்பை தமிழகத்தில் ஏற்படுத்தி வருகிறது. இதை திமுகவும் மிகவும் கூர்மையாக உற்றுநோக்கி வருகிறது.
செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர தமிழக அரசு விரும்பியது.. ஆனால், இதற்கு ஆளுநர் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், "இலாகா இல்லாத அமைச்சராக" செந்தில் பாலாஜி தொடர்வார் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில்தான், திடீரென செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக இரவோடு இரவாக, ஆளுநர் ரவி அறிவிப்பை ஒன்றை வெளியிட்டிருந்தார்.. இது மிகுந்த பரபரப்பை அரசியல் களத்தில் ஏற்படுத்தியிருந்தது..
எப்போதுமே, கவர்னரிடமிருந்து ஒரு உத்தரவு போடப்பட்டு விட்டால், கவர்னரே நினைத்தாலும் அதை திரும்ப பெற முடியாது. அதனால் தான் நிறுத்தி வைப்பதாக சொல்லப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சியினர் தரப்பில் இருந்து கடும் கண்டனம் எழுந்தது... குறிப்பாக சட்டரீதியான விமர்சனங்கள் இதற்கு குவிந்தன..
ஆனால், நாலாபக்கமும் விமர்சனம் எழுந்தநிலையில், செந்தில் பாலாஜியை நீக்கிய உத்தரவை நள்ளிரவில் ஆளுநர் ரவி நிறுத்தி வைத்துள்ளார். எப்போதுமே, கவர்னரிடமிருந்து ஒரு உத்தரவு போடப்பட்டு விட்டால், கவர்னரே நினைத்தாலும் அதை திரும்ப பெற முடியாது. அதனால் தான் நிறுத்தி வைப்பதாக சொல்லப்பட்டது.
இதையடுத்து, "செந்தில் பாலாஜி விவகாரத்தில் இப்படி தன்னிச்சையாக செயல்பட ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று ஒரு தரப்பும், ஆளுநருக்கு முழு அதிகாரம் இருக்கிறது என்று இன்னொரு தரப்பும் விவாதங்களும் சோஷியல் மீடியாவை அதிர வைத்து வருகின்றன..
மூத்த வழக்கறிஞர்கள்: இதனிடையே, கவர்னரின் செயல்களுக்கு எதிராக வழக்கு போடலாமா? என்று குற்றவியல் வழக்கறிஞர்களிடம் விவாதித்துள்ளாராம் முதல்வர் ஸ்டாலின். அரசின் நிர்வாகம் சார்ந்த விவகாரங்களில் கவர்னருக்கு எதிராக வழக்குப் போட முடியாது, வேண்டுமானால் கவர்னரின் செயலாளரை கோர்ட்டுக்கு அழைக்க முடியும் என முதல்கட்டமாக சில தகவல்களை முதல்வருக்கு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனராம்.
புயல்: அதேசமயம், கவர்னருக்கு எதிரான விவகாரங்கள் ஏதேனும் சுப்ரீம் கோர்ட்டுக்கு போயிருக்கிறதா? அதில் ஏதேனும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருக்கிறதா?என்பதை மூத்த வழக்கறிஞர்கள் ஆராய்ந்து வருகின்றனர். திமுக தரப்பு இப்படி சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது என்றால், தமிழக ஆளுநரோ வேறு சில அதிரடிகளை மேற்கொண்டுள்ளார்.
இந்த விவகாரங்கள் பரபரக்கும்போதே, அட்டர்னி ஜெனரலின் ஆலோசனையை பெற்று அதன் அடிப்படையில் செயல்படுமாறு ஆளுநருக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தியிருந்தார்..
ஒப்புதல் கடிதம்: ஆளுநரும் அதற்கான முயற்சியில் இறங்கினார்... அந்த நேரத்தில்தான், ஆளுநருக்கு தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி கடிதம் எழுதியிருந்தார்... அதில் நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு விரைவாக ஒப்புதல் அளிக்கும்படியும், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளில் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு அனுமதியளிக்கும்படியும் கேட்டிருந்தார்.
ஆனால், இதற்கான கோப்புகள் வரவில்லை என்று ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை மறுத்த சட்ட அமைச்சர் ரகுபதி, ஆளுநர் மாளிகையில் கோப்புகளை பெற்றுக்கொண்டு ஒப்புதல் அளித்தற்கான ஆதாரங்களை வெளியிட்டார்... இந்த பரபரப்பான சூழலில்தான், 5 நாள் பயணமாக கடந்த ஜூலை 7-ம் தேதி டெல்லிக்கு புறப்பட்டு சென்றார் ஆளுநர்...
ஆலோசனைகள்: மறுநாளே, ஜூலை 8ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.. அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவிநீக்க விவகாரத்தை எடுத்து சொல்லியிருப்பதாகவும், அதற்கு அமித்ஷா, சில ஆலோசனைகளை ஆளுநருக்கு தந்ததாகவும் சொல்கிறார்கள்..
இதற்கு பிறகு, மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரான ஆர்.வெங்கட்ரமணி ஆகியோரையும் சந்தித்து, செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்குவது தொடர்பாக ஆளுநர் ஆலோசனை நடத்தியிருக்கிறார் என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தினர்.. மத்திய உள்துறை அமைச்சகம் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்ததாக சொல்கிறார்கள்..
அடுத்து என்ன: ஆக, செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கியே தீர வேண்டும் என்று மிக தீவிரமாக செயல்பட்டுவருகிறார் தமிழ்நாடு ஆளுநர் ரவி. ஆனால், செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கவே முடியாது என்று வலுவாக அடித்து சொல்கிறார் தமிழ்நாடு முதல்வர்... இருதரப்புமே தங்கள் கருத்துக்களில் உறுதியாக உள்ள நிலையில், செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியின் பரபரப்பு, அடுத்தக்கட்டத்துக்கு டெல்லிவரை நகர்ந்துள்ளது. அடுத்து என்ன நடக்க போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.!!
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications