தயவு செய்து "இந்த" தப்பை மட்டும் செய்யாதீர்கள்! கை எடுத்து கும்பிடாத குறையாக சொன்ன ஆனந்த் சீனிவாசன்
சென்னை: ஏழை மற்றும் மிடில் கிளாஸ் மக்களுக்குத் தேவையான டிப்ஸ்களை தொடர்ந்து வழங்குபவர் ஆனந்த் சீனிவாசன். சுற்றிச் சுற்றி அவர் சொல்வது சில விஷயங்கள் தான். கடன் வாங்க வேண்டாம், அதீத செலவுகள் கூடாது, சீக்கிரம் சேமிக்க வேண்டும் என்பதே அவரது கருத்துகளாக இருக்கும். இதற்கிடையே சமீபத்தில் அவர் கையெடுத்துக் கும்பிடாத குறையாக ஒரு விஷயம் குறித்து எச்சரித்துப் பேசியிருக்கிறார். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்
நமது நாட்டில் வேலைக்குச் செல்ல ஆரம்பித்த உடனேயே பெரும்பாலானோர் எதிர்கொள்ளும் கேள்வி வீடு வாங்கியாச்சா என்பது தான். சொந்த வீடு என்பது இந்தியாவில் ஒரு எமோஷனாகவே பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே வேலைக்குப் போக ஆரம்பித்த உடனேயே சொந்த வீடு குறித்தே பலரும் கேட்க ஆரம்பிப்பார்கள். இதனால் பலரும் கடனை வாங்கியாவது சொந்தமாக ஒரு வீட்டை வாங்கிவிடுவார்கள்.

ஆனந்த் சீனிவாசன்
அப்போது சந்தோஷமாக இருந்தாலும் அதன் பிறகு காலம் முழுக்க 20, 30 ஆண்டுகள் ஹோம் லோன் இஎம்ஐயை கட்ட வேண்டி இருக்கும். அதற்காகவே கூடுதலாக ஓட வேண்டி இருக்கும். இதற்கிடையே பிரபல பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் இது தொடர்பாக சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார்.
தயவு செய்து வேண்டாம்
இது தொடர்பாக ஆனந்த் சீனிவாசன் தனது யூடியூப் பக்கத்தில், "ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தைக் குறைத்தாலும் இன்னும் பெரும்பாலான வங்கிகள் தங்கள் வட்டி விகிதத்தைக் குறைக்கவில்லை. இன்றும் கூட பல வங்கிகளில் 7.5%ல் தான் கடன் வழங்குகிறார்கள். ரிசர்வ் வங்கி 1.5% குறைத்துள்ள நிலையில், குறைந்தபட்சம் வங்கிகள் 6.5%ல் ஆவது கடன் தர வேண்டும். ஆனால், அப்படிச் செய்வதில்லை. சிட்டியில் இப்போதைக்கு வீடு விலை ஏற போவதில்லை. எனவே, தயவு செய்து கடன் வாங்கி வீடு வாங்க வேண்டாம். வாடகைக்குப் போவது எவ்வளவோ மேல்!" என்றார்.
ஹோம் லோன் எவ்வளவு கட்டினாலும் முடிவதில்லை எனப் பலரும் புலம்புவார்கள். இதனால் அதைச் சீக்கிரம் முடிக்கக் கையில் ஒரு ரூ.10,000 அல்லது ரூ.20,000 இருந்தால் அதை முன்கூட்டியே கட்ட பலரும் முயல்வார்கள். ஆனால், அப்படி நாம் நினைத்தவுடன் எல்லாம் முன்கூட்டியே கட்ட முடியாது. அதற்கும் கூட சில பல கட்டுப்பாடுகளை வங்கிகள் விதிக்கும்.
ஐடியா ஈஸி
இது தொடர்பாகப் பேசிய ஆனந்த் சீனிவாசன், "இதில் என்னோட ஐடியா ரொம்ப எளிது. ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாயை தனியாகச் சேர்த்து இந்த வீட்டுக் கடனுக்குக் கூடுதலாகச் செலுத்த வேண்டும். மாதத்திற்குக் கணிசமான தொகையை இதற்கு எடுத்து வைக்க வேண்டும். ஆனால், இதில் சிக்கல் என்னவென்றால் கடந்த 5, 6 ஆண்டுகளாக நாட்டில் பெரும்பாலான துறைகளில் ஊதிய உயர்வு என எதுவும் இல்லை. ஊதிய உயர்வு விலைவாசி உயர்வை விடக் குறைவாகவே இருக்கிறது.
இந்த இடைப்பட்ட காலத்தில் வட்டியும் இஎம்ஐ தொகையும் அதிகரித்துவிட்டது. இஎம்ஐ தொகையை அதிகரிக்க விரும்பாதவர்களுக்குச் செலுத்த வேண்டிய காலம் அதிகரித்துவிட்டது. இதன் காரணமாக மக்கள் கடன் வலையில் மாட்டிக் கொண்டார்கள்" என்றார்.
என்ன செய்ய வேண்டும்
கையில் இதுபோல ஒரு லட்ச ரூபாயோ அல்லது 2 லட்ச ரூபாயோ இருந்தால் அதைக் கடனுக்குக் கட்டுவதற்குப் பதிலாக வேறு ஒன்றில் முதலீடு செய்யலாம். அப்படி முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும். அதை வைத்து கடனை அடைக்கலாம் எனச் சிலர் சொல்லியும் நாம் கேட்டிருப்போம்.
இதற்கு ஆனந்த் சீனிவாசன், "இது தவறான ஒரு அட்வைஸ். மார்கெட்டில் எவ்வளவு லாபம் வரும் என்பது யாருக்கும் தெரியாது. தங்கத்தில் கூட உறுதியாக இவ்வளவு லாபம் வரும் என்பதைச் சொல்ல முடியாது. எனவே, ஆண்டுக்கு உங்களால் ரூ.2 லட்சம் வரை கூடுதலாகச் சேர்க்க முடிகிறது என்றால் சீக்கிரம் லோனை முடிப்பதே சிறந்ததாக இருக்கும்" என்கிறார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications