3 வரியில் அறிக்கை வெளியிட்டது இருக்கட்டும்! விஜய்க்கு இதுவாது தெரியுமா? தவெக அறிக்கையில் பெரிய ஓட்டை
சென்னை: இந்தியாவில் சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமலுக்கு கொண்டு வருவோம் என்று மத்திய பாஜக அரசு கூறி உள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கை விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று மாலை திடீரென சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமலுக்கு கொண்டு வருவதற்கான அறிவிக்கையை வெளியிட்டது ஒன்றிய அரசு. 2019ம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இச்சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களவைத் தேர்தல் நெருங்கும் வேளையில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

2014 டிசம்பருக்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் புலம்பெயர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள்,. சமணர்கள், பெளத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வழிசெய்கிறது எனினும், மேற்கண்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் குடியேறிய இஸ்லாமியர்களுக்கு இத்தகுதி தரப்படவில்லை
எதிர்ப்பு ஏன்?: குடியுரிமை பெறுவதற்கு மதம் ஒரு காரணியாக முன்வைக்கப்படுவதால் இச்சட்டத்திற்கு எதிர்ப்பும் உள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் அகதிகளாக வசித்துவரும் இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது
எனினும், அசாம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் வங்கதேசத்தில் இருந்து குடியேறிய இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கவும் எதிர்ப்பு நிலவுகிறது. தங்களது மாநிலத்தில் வங்காளிகள் ஆதிக்கம் அதிகரிக்கும் என அவர்கள் கூறுகின்றனர்
விஜய் எதிர்ப்பு; இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில்., சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்திச் செயல்படுத்தப்படும் இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 (CAA) போன்ற எந்தச் சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல. தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும். என்று குறிப்பிட்டு இருந்தார்.
அறிக்கையில் குழப்பம்: 3 வரியில் அவர் இந்த அறிக்கையை வெளியிட்டது கூட ஒரு விதத்தில் ஓகே என்று சொல்லலாம். ஆனால்.. இந்த அறிக்கையில் எந்த அரசு இந்த சட்டத்தை கொண்டு வந்தது.. யார் கொண்டு வந்தார்கள்.. என்று கூட இல்லை. ஏன் கண்டனம் என்கிற வார்த்தை கூட இல்லாமல் கண்டன அறிக்கையை வெளியிட்டு உள்ளனர்.
மத்திய அரசு: முக்கியமாக இந்த சட்டத்தை கொண்டு வந்த மத்திய அரசை விஜய் ஒரு வார்த்தையில் கூட எதிர்க்கவில்லை . மாறாக இந்த சட்டத்தை நிறைவேற்ற கூடாது என்று மாநில அரசுக்கு விஜய் கோரிக்கை விடுத்துள்ளது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சட்டத்திற்கு எதிராக ஏற்கனவே திமுக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்துவிட்டனர். அதேபோல் முதல்வர் ஸ்டாலின் இந்த சட்டத்தை தொடர்ந்து எதிர்த்து வருகிறார். தமிழ்நாட்டில் இதை அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறி வருகிறார். அப்படி இருக்க.. மத்திய அரசை விமர்சிக்காமல் மாநில அரசை விஜய் விமர்சனம் செய்வது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
விஜய் இன்னும் தீவிரமாக ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டு இருக்கலாம்.. அல்லது இதை பற்றி படித்துவிட்டு பேசி இருக்கலாம். பொத்தாம் பொதுவாக இப்படி அறிக்கை வெளியிடுவது சரியா என்று நெட்டிசன்கள் விமர்சனங்களை வைத்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications