"பருப்பு வேகாது".. பீகாரில் நடந்தது தெரியும்ல? பாஜகவிடம் கொதித்த ரத்தத்தின் ரத்தங்கள்! பார்த்தீங்களா
சென்னை: தமிழ்நாட்டில் அதிமுகவை ஓவர் டேக் செய்து பாஜக இரண்டாவது பெரிய கட்சியாக வளருவதை அதிமுக டாப் தலைகள் யாரும் விரும்பவில்லை என்று அதிமுக நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள். பாஜகவின் சமீபத்திய போராட்டங்கள், மூவ்கள் காரணமாக அதிமுக தரப்பு அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
பாஜகவின் வளர்ச்சி பற்றி அதிமுகவின் அமைப்பு செயலாளர் பொன்னையன் தெரிவித்த கருத்துக்கள்தான் தற்போது தமிழ்நாடு அரசியலில் வைரல் டாப்பிக். நேற்று அதிமுக ஐடி விங் கூட்டத்தில் பேசிய பொன்னையன்.. பாஜக தன்னை எதிர்க்கட்சி போல காட்ட நினைக்கிறது.
அதற்கான பிம்பத்தை பாஜக ஏற்படுத்துகிறது. அதை நம்முடைய ஐடி விங் நிர்வாகிகள் முறியடிக்க வேண்டும், என்று பொன்னையன் குறிப்பிட்டார்.

பொன்னையன் கருத்து
அதோடு தமிழ்நாட்டில் பா.ஜ.க ஆட்சிக்கு வர நினைத்தால் மக்கள் ஏற்க மாட்டார்கள் தமிழ்நாட்டில் இன, மொழி, திராவிட உணர்வு உள்ள மாநிலம். இங்கு பா.ஜ.க வின் பருப்பு வேகாது. பா.ஜ.க.தான் தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சி என்ற மாயை உருவாக்கப்படுகிறது. அது உண்மையில்லை என்றும் பொன்னையன் (தந்தி டிவி ஊடகத்திடம்) கருத்து தெரிவித்து இருக்கிறார். இப்படி பொன்னையன் கடுமையாக அதிமுகவை எதிர்த்து இருப்பது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

பாஜக வளர்ச்சி
சரி பொன்னையன் இப்படி திடீரென பேச என்ன காரணம் என்று அதிமுக தரப்பில் விசாரித்ததில் அவர்கள் பல்வேறு விஷயங்களை அடுக்கினார்கள். முக்கியமாக பாஜக எங்களுடன் கூட்டணி வைத்து வளர ஆசைப்படுவது சரிதான். ஆனால் எங்களை விட பெரிதாக அவர்கள் வளர விரும்புவதை நாங்கள் அனுமதிக்க முடியாது. மற்ற மாநிலங்களில் இது நடந்து இருக்கிறது என்று பீகாரில் நடந்ததை எடுத்துக்காட்டாக கூறி விமர்சனம் செய்கிறார்கள்.

பீகார்
பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன்தான் பாஜக கூட்டணி வைத்தது. இப்போது கூட்டணியில் முக்கிய முடிவுகளை பாஜகதான் எடுக்கிறது. இதனால் நிதிஷ் குமார் கடுப்பில் இருக்கிறார். அவர் பாஜக கூட்டணியில் உள்ள ஜெடியூ அமைச்சர் ஆர்சிபி சிங்கிற்கு மீண்டும் ராஜ்ய சபா வாய்ப்பு கூட கொடுக்கவில்லை. அந்த அளவிற்கு நிதிஷ் குமார் பாஜக மீது கடுப்பில் இருக்கிறார். நிதிஷுக்கு இப்போது கூட்டணியில் வாய்ஸ் இல்லை.

நிதிஷ் குமார்
அது போலதான் தமிழ்நாட்டில் நடந்து விட கூடாது.பாஜக தனியாக வளர பார்ப்பதில் தவறில்லை. எங்கள் இடத்தை பிடிக்க முயல கூடாது என்று அதிமுக நினைக்கிறதாம். அதிமுக நிர்வாகிகள் நேற்று நடந்த ஐடி விங் கூட்டத்திலும் இதே விஷயங்களை குறிப்பிட்டு இருக்கிறார்கள். மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக வளர்ந்த விதத்தை குறிப்பிட்டு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள் எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.

சமீபத்திய ஸ்டன்ட்
ஆனால் பாஜக தரப்போ.. அதிமுக முந்தைய ஆளும் கட்சி என்பதால் கட்சி நிர்வாகிகள் பலருக்கு எதிராக பல்வேறு வழக்குகள் உள்ளன. மாஜி அமைச்சர்கள் பல வழக்குகளில் சிக்கி உள்ளனர். இதனால் அவர்களை சில விஷயங்களில் அரசை தைரியமாக எதிர்க்க முடியவில்லை. ஆனால் பாஜக மீது இப்படி வழக்குகள் இல்லை. இதனால் பாஜக தைரியமாக திமுகவை எதிர்த்து வருகிறது. இதில் என்ன தவறு இருக்கிறது. நாங்கள் வளர நினைக்க கூடாத என்று கமலாலயம் தலைகள் கேட்கிறார்கள்.
-
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்!












Click it and Unblock the Notifications