Election Exclusive: திமுக பண்ற டெக்னிக்.. ரொம்ப ஆபத்தானது.. ராகுல் மீட்டில் புலம்பிய காங்கிரஸ் தலைகள்.. பின்னணி!
சென்னை: டெல்லியில் நடந்த காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டத்தில் திமுக நிலைப்பாடு குறித்து காங்கிரஸ் தலைவர்கள் சிலர் கடுமையாக புலம்பியதாக கூறப்படுகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், டெல்லியில் நேற்று காங்கிரஸ் கட்சியின் மேலிடக் கூட்டம் மிக முக்கியமான கட்டத்தை எட்டியது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி மற்றும் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக-காங்கிரஸ் இடையிலான பத்தாண்டு கால உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது. திமுகவுடன் கூட்டணியைத் தொடர்வதா அல்லது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் (TVK) கைகோர்ப்பதா என்பது குறித்து விவாதிக்க, காங்கிரஸ் மேலிடம் டெல்லியில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
காங்கிரஸ் தலைகள் பேசியது என்ன?
இதில் பேசிய காங்கிரஸ் தலைகள் சிலர் பின்வரும் கருத்துக்களை கூறி உள்ளனர்,
1. நம்முடைய தலைவர்கள் சிலர் திமுகவை விமர்சனம் செய்ததால் திமுக தரப்பு அப்செட்டில் உள்ளது.
2. இதனால் கூட்டணிக்கு பேச்சுவார்த்தை குழு கூட போடாமல் அலைய விடுகிறார்கள்.
3. எங்களிடம் வந்து நில்லுங்கள் என்ற தொணியில் அலைய விடுகிறார்கள். இதை எப்படி ஏற்க முடியும்.
4. தேர்தல் அறிவித்த பின் கமிட்டி போட்டால்.. 2-3 வாரங்கள்தான் இருக்கும்.. அதற்கு பின் கூட்டணி அமைத்தால்.. வெறும் கடைசி இரண்டு வாரம் பிரச்சாரம் செய்யலாம். ஆனால் திமுக அப்படி ஒரு சூழலை ஏற்படுத்த பார்க்கிறது.
5. திமுக பண்ற டெக்னிக்.. ரொம்ப ஆபத்தானது. நமக்கு நெருக்கடி கொடுத்து வேறு வழி இல்லாமல் கொடுக்கிற சீட்டை வாங்கிக்க சொல்ல வைக்க போகிறார்கள்.
6. கடைசி வரை இழுத்தால் நமக்கும் போவதற்கு வேறு இடம் கிடைக்காது. அதனால் திமுக நேரம் தாழ்த்த பார்க்கிறது என்று டெல்லியில் காங்கிரஸ் தலைகள் புலம்பி இருக்கிறார்கள்.
காங்கிரஸ் குரலே மாறிவிட்டது
இதையடுத்தே டெல்லியில் நடந்த காங்கிரஸ் தலைவர்கள் மீட்டிங்கிற்கு பின் அப்படியே காங்கிரஸ் குரலே மாறி உள்ளது. பெரிதாக திமுகவை அட்டாக் செய்து பேசாமல் இருந்த இப்போது விரக்தியில் பேச தொடங்கி உள்ளது. செல்வப்பெருந்தகை மீட்டிங்கிற்கு பின் பேசுகையில், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் கடைசி நேரத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்ததால் நிறைய பிரச்சனை வந்தது. நிறைய தர்மசங்கடம் ஏற்பட்டது. இன்னொரு பக்கம் கூட்டணி சரியாக அமைக்க முடியாமல் போனது.
தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சார கூட்டங்களை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். காங்கிரஸ் தலைவர்கள்.. ராகுல் காந்தி உட்பட இங்கே வர ரெடியாக இருக்கிறார்கள். ஆனால் திமுக ரெடியா? நாங்கள் ரெடி.. அவர்கள் ரெடியா? சரியான நேரத்தில் கூட்டணி அமைத்தால்தான் பணிகளை செய்ய முடியும். பேச்சுவார்த்தை குழு அமைக்காததால் திமுக மீது எல்லோருக்கும் வருத்தம்தான் உள்ளது என்று கூறி உள்ளார்.
காங்கிரஸ் ஜோடங்கர்
காங்கிரஸ் ஜோடங்கர் பேசுகையில், திமுக உடனே பேச்சுவார்த்தை குழுவை அமைக்க வேண்டும். தொண்டர்கள் கோபத்தில், வருத்தத்தில் உள்ளனர். திமுக வேகமாக செயல்பட வேண்டும். கூட்டணியை உறுதி செய்ய வேண்டும் என்று, கூறி உள்ளார். இப்படி டெல்லியில் நடந்த காங்கிரஸ் தலைவர்கள் மீட்டிங்கிற்கு பின் அப்படியே காங்கிரஸ் குரலே மாறி உள்ளது.
ராகுல் காந்தியுடன் ஆலோசனை நடத்திய தகவல்களை நாளையே முதல்வர் ஸ்டாலினிடம் கூற உள்ளதாக கூறிய செல்வப்பெருந்தகை, திமுக உடனடியாக கூட்டணி பேச்சுவார்த்தை குழுவை அமைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications