"ராபிட் வேகம்".. கண்கட்டி வித்தை காட்டும் பைபர்ஜாய் புயல்.. சென்னை வானிலையில் இன்று மெகா ட்விஸ்ட்?
சென்னை: அதி தீவிர புயலாக உருவெடுத்த பைபர்ஜாய் புயல் மணிக்கு 9 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. புயல் நகரும் அரபிக்கடல் பகுதியில் காற்றின் வேகம் 165 முதல் 175 kmph என்று அளவில் உள்ளது.
195 கிமீ வேகம் வரை அரபிக்கடலில் காற்று வீச வாய்ப்புகள் உள்ளன. மும்பைக்கு மேற்கு - தென் மேற்கு பகுதியில் 580 கிமீ தூரத்தில் புயல் உள்ளது.

போர்பந்தருக்கு தென்-தென்மேற்கு 480 கி.மீ, துவாரகாவிலிருந்து தென்-தென்மேற்கு 530 கி.மீ, நலியாவிலிருந்து 610 கி.மீ தென்-தென்மேற்கு, கராச்சிக்கு தெற்கே 780 கி.மீ தூரத்தில் புயல் உள்ளது. இந்த புயல் மிக வேகமாக ராபிட் முறையில் தீவிரமடைந்துள்ளது டக்டே சூறாவளிக்குப் பிறகு அரபிக்கடலில் (அனைத்து மாதங்களும் உட்பட) வலுவான சூறாவளியாக இந்த பைபர்ஜாய் புயல் உள்ளது.
மேலும், வட இந்தியப் பெருங்கடல் வரலாற்றில் இது 2 வது முறையாகும், அரேபிய கடல் மற்றும் வங்காள விரிகுடா இரண்டும் ஒரே நேரத்தில் பருவமழைக்கு முந்தைய காலத்தில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட தீவிர புயலை பெறுவது இதுவே 2வது முறையாகும். இதற்கு முன் 2019 ஆம் ஆண்டில் மட்டுமே இதுபோன்ற நிகழ்வு நடந்தது.
பைபர்ஜோய் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையிலிருந்து (55.65 கிமீ) மிக தீவிர சூறாவளியாக (121 கிமீபிஹெச்) வெறும் 24 மணி நேரத்தில் வேகமாக தீவிரமடைந்துள்ளது. அதாவது 24 மணி நேரத்தில் காற்றின் வேகம் மணிக்கு 65 கிமீ வேகத்தில் அதிகரித்தது, இதைதான் ராபிட் முறை வேகம் என்று கூறுவார்கள்.
பைபர்ஜாய் புயல் குஜராத்தின் மான்ட்வி-பாகிஸ்தானின் கராச்சி இடையே கரையை கடக்க உள்ளது. வரும் 15ஆம் தேதி அதி தீவிர புயலாக இது கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
புயல் வலிமை அடைந்தது எப்படி? : மத்திய கிழக்கு அரபிக்கடலில் உருவாகி உள்ளது பைபர்ஜாய் புயல். இந்த பைபர் ஜாய் புயல்.. தற்போது தீவிர புயலாக உள்ளது. இந்த புயல் வலிமை அடைந்து கொண்டே இருக்கிறது. குஜராத்தில் இந்த புயல் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 15ம் தேதி பாகிஸ்தான், கட்ச் கடற்கரை அருகே இது கரையை கடக்கும்.
அதற்கு முன் குஜராத்தில் தீவிரமான மழையை இது கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைபர்ஜாய் புயல் தென்இந்திய கடல் பகுதிகளுக்கு அருகே வர வாய்ப்பு இல்லை. அரபிக்கடலில் தீவிர புயலாக இருக்கும் பைபர்ஜாய் புயல் அதி தீவிர புயலாக வாய்ப்பு உள்ளது.
வெயில்: குஜராத்தில் புயல் அடித்தாலும் தமிழ்நாட்டில் இன்றும் வெயில் நீடிக்கும். சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான வெயில் நிலவும். அதே சமயம் இன்றும் நாளையும் சென்னையின் சில பகுதிகளில் மழை பெய்வதற்கான நல்ல சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. மழைக்காலம் இன்னும் வலிமை ஆகவில்லை.

தீபகற்ப பகுதிகளில் மழை காலத்திற்கான சூழ்நிலை வலிமை இன்றி காணப்படுகிறது. இருந்தாலும் வட தமிழ்நாட்டில் மழை பெய்வதற்கான சூழ்நிலைகள் நிலவி வருகின்றன. இந்த பைபர்ஜாய் புயல் மிக தீவிர புயலாக மாறும். 2019ல் உருவான வாயு புயல் போலவே இதுவும் இருக்கும். வாயு புயல் முறையாக கரையை கடக்கவில்லை. இந்த பைபர்ஜாய் புயல் குஜராத் கடலோர பகுதிகளில் மழையை கொடுக்கும்.
மாலை நேரங்களில் வேண்டுமானால் சென்னையிலும், வட தமிழ்நாட்டிலும் மழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளன.












Click it and Unblock the Notifications