பட்டென "அந்த" முடிவை எடுத்த எடப்பாடி பழனிசாமி.. ஒரே கல்லில் 3 மாங்காய்.. சசிகலா பிளான் சக்சஸ் போலயே?
எடப்பாடி பழனிசாமி சசிகலா விஷயத்தில் அமைதி காப்பது ஏன் என்று தெரியவில்லை
சென்னை: கோர்ட் தீர்ப்பு வெளிவந்து இத்தனை நாட்கள் ஆன நிலையில், பொதுச்செயலாளர் என்ற விஷயத்தில் எடப்பாடி பழனிசாமி, நிதானமாக காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.
வழக்கமாக எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளும் எந்தவிதமான யூகங்களும் சமீபகாலமாக கையில் எடுக்கப்படவில்லை.
குறிப்பாக இந்த முறை உட்கட்சி தேர்தலில் எடப்பாடியின் பாலிட்டிக்ஸ் வேற லெவலில் பேசும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. எப்போதுமே கட்சிக்குள் தன்னுடைய செல்வாக்கை அதிகப்படுத்தி கொள்ள எடப்பாடி ரொம்பவே மெனக்கெடுவார்..

கொங்கு மண்டலம்
கொங்குவில் தன் செல்வாக்கு அதிகம் இருந்தாலும், மற்ற மாவட்டங்களிலும் தனக்கு சாதகமான நிர்வாகிகளையே பொறுப்பில் நியமித்து விடுவார்.. இதற்கு காரணம், முக்கிய தேர்தல் சமயத்தில், இந்த நிர்வாகிகள்தான் தன்னை கைவிட்டுவிடாமல், ஆதரவாக அவர்கள் செயல்படுவார்கள் என்ற காரணத்தினால்தான்.. இதுஒருவகையில் ஓபிஎஸ்ஸுக்கும் செக் வைக்கும் வகையில் இருந்துவிடும்.. எனவே, இந்த முறை உட்கட்சி தேர்தலிலும் மாவட்டம் முழுவதும் தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு போஸ்டிங் தருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இளங்கோவன்
அப்படி எதுவுமே இந்த முறை நடக்கவில்லை.. இப்போதுள்ளவர்கள் அப்படி அப்படியே பொறுப்பில் தொடர்வார்கள் என்பதுடன், ஒருசில இடங்களில் மட்டுமே மாறுதல் செய்யப்பட்டுள்ளது.. அதில், புறநகர் மாவட்ட செயலாளர் பதவியை தன்னுடைய நெருங்கிய நண்பரான இளங்கோவனுக்கு தந்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.. கீழ்மட்ட அளவிலான தேர்தல் முடிவடைந்த நிலையில், மாவட்ட செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளராக எடப்பாடி பழனிசாமி மீண்டும் மனு தாக்கல் செய்தார்...

போஸ்டிங்
இதுவரை யாருக்காகவும் விட்டுத்தராத அந்த போஸ்டிங்கை இளங்கோவனுக்கு எடப்பாடி விட்டுத்தந்தது ஆச்சரியமாக பார்க்கப்பட்டது. இதற்கு 2 காரணங்கள் சொல்லப்படுகிறது.. ஒன்று, எடப்பாடி பழனிசாமி எப்படியும் ஒற்றை தலைமையை நோக்கி எடப்பாடி சென்றுவிடுவார்.. அதனால், புறநகர் மாவட்ட செயலாளர் பதவி தனக்கு தான் என்று எதிர்பார்த்திருந்தார் இளங்கோவன்.. இந்த விஷயம் தெரிந்தே, நண்பனின் விருப்பத்திற்கேற்ப போஸ்டிங் தந்தார் என்கிறார்கள்.

கொலை வழக்கு
மற்றொன்று, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தீவிரமடைந்துள்ள நிலையில், இதன் விசாரணை வளையத்திற்குள் இளங்கோவனும் வரப்போவதாக ஒரு தகவல் வட்டமடிப்பதால், புறநகர் மாவட்ட அதிமுக செயலாளராக இளங்கோவன் நியமிக்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள்... இதனிடையே இன்னொரு தகவலும் சுற்றி கொண்டிருக்கிறது..

அப்பீல்
பொதுச்செயலாளர் வழக்கில் சசிகலாவுக்கு எதிர்மறை தீர்ப்பு வந்த நிலையில், அவ்ர எப்படியும் அரசியலில் இருந்து ஒதுங்கிவிடுவார், அல்லது தன் எழுச்சியை குறைத்து கொள்வார் என்று எடப்பாடி எதிர்பார்த்தாராம்.. கோர்ட் தீர்ப்பு வந்தபிறகுதான் சசிகலாவின் வேகமாகவே கூடிவிட்டதாம்.. மேல்முறையீடு செய்ய போவதாக சொல்லி இருக்கிறார்.. இதைதவிர, தமிழகத்தை பாதிக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு நேரடியாகவே களத்திற்கு சென்று குரல் கொடுத்து வருவது எடப்பாடிக்கு ஷாக்கை தந்துவருகிறதாம்..

காய் நகர்த்தல்
அதாவது இப்தார் நோன்பில் சசிகலா கலந்துகொண்டது, வேளாங்கண்ணிக்கு சென்றது, தஞ்சை தேர்திருவிழாவில் பலியான குடும்பங்களுக்கு நேரில் ஆறுதல் என பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறார்.. எனவே, இந்த நேரத்தில் பொதுச்செயலாளர் விஷயத்தை மிக தீவிரமாக கையில் எடுக்க வேண்டாம், கொஞ்சம் அடக்கி வாசிக்கலாம் என்று எடப்பாடி யோசித்து காய் நகர்த்தி வருகிறாராம்.. அதற்காகவே, ஒருபக்கம் சசிகலா விஷயத்தில் பொறுமை காப்பதுடன், உட்கட்சி தேர்தல் விஷயத்திலும் கவனத்துடன் செயல்பட்டு, இளங்கோவனுக்கும் போஸ்டிங் தந்துள்ளார் எடப்பாடி என்கிறார்கள்..!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications