ஜெயலலிதா மாதிரி இல்லை.. எடப்பாடி பழனிசாமி செய்த "அந்த" தவறு.. அடடா.. அதிமுகவில் இதை கவனிச்சீங்களா?
சென்னை: அதிமுகவில் கட்சியில் நின்றவுடன் இடம் கொடுத்துள்ளனர், ஜெயலலிதா மாதிரி எடப்பாடி சீட் கொடுக்கவில்லை என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் லோக்சபா சூடு கூடி உள்ளது. திமுக கூட்டணி - அதிமுக கூட்டணி - பாஜக கூட்டணி - நாம் தமிழர் என்று நான்கு முனை போட்டி தேர்தலில் நிலவுகிறது.

லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் கட்சிகள் பெரும்பாலும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டனர். தேர்தல் பணிகள், பிரச்சாரங்கள் தொடங்கிவிட்டன. இந்த நிலையில்தான் ஜெயலலிதா மாதிரி எடப்பாடி சீட் கொடுக்கவில்லை. கட்சியில் ஒருவர் எப்படி பணிகளை செய்கிறார் என்பதை ஜெயலலிதா பார்ப்பார். அவர் அதை பார்த்துவிட்டு இடம் கொடுப்பார். ஆனால் எடப்பாடி கட்சிக்கு வந்ததும் இடம் கொடுத்துவிட்டார் என்று ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார் .
ஒன்இந்தியாவிற்கு ரவீந்திரன் துரைசாமி அளித்த பேட்டியில், நெல்லையில் கடுமையாக போட்டி இருக்கும். நெல்லையில் நயினார் நாகேந்திரனுக்கும் அதிமுகவினருக்கும் நெருக்கம் உண்டு. இதனால் அங்கே போட்டி வித்தியாசமாக இருக்கும். அங்கே ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் உள்ளனர். முக்குலத்தோர் அதிமுகவினருக்கு எதிராக உள்ளனர். அதேபோல் பன்னீர்செல்வம் அதிமுக வாக்குகளை பிரிப்பார். டிடிவி தினகரன் பிரிப்பார். இந்த வாக்குகள் நெல்லையில் நயினார் நாகேந்திரனுக்கு வரும்.
இதனால் அங்கே முடிவுகள் மாறும். நெல்லையில் கடுமையாக போட்டி இருக்கும். அதேபோல் நாம் தமிழர் சீமான் கடுமையாக வாக்குகளை பிரிப்பார். நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அதிமுகவிற்கு சூழ்நிலை சாதகமாக இல்லை. இதெல்லாம் அதிமுகவிற்கு பல மைனஸ்களாக இருக்கின்றன. அதிமுக இப்பவும் பெரிய கட்சிதான். அவர்களை குறை சொல்ல மாட்டோம். அதிமுகவின் பலகீனம் அவர்களின் வேட்பாளர்கள்தான்.
கட்சியில் நின்றவுடன் இடம் கொடுத்துள்ளனர். ஜெயலலிதா மாதிரி எடப்பாடி சீட் கொடுக்கவில்லை. கட்சியில் ஒருவர் எப்படி பணிகளை செய்கிறார் என்பதை ஜெயலலிதா பார்ப்பார். அவர் அதை பார்த்துவிட்டு இடம் கொடுப்பார். ஆனால் எடப்பாடி கட்சிக்கு வந்ததும் இடம் கொடுத்துவிட்டார். அங்குதான் தவறு செய்துவிட்டார். ஜெயலலிதா அப்படி செய்ய மாட்டார்.
கொங்கு வேளாளர்கள்தான் எடப்பாடி பழனிசாமியை காப்பாற்றினார்கள். எடப்பாடி பழனிசாமியை கொங்கு வேளாளர்கள் கவுண்டர்கள் ஆட்சி கவிழாமல் காப்பாற்றினார்கள். அப்படி இருக்க இந்த முறை எடப்பாடிக்கு அவர்கள் ஆதரவு இருக்கும். ஆனாலும் அண்ணாமலைக்கு கொங்கு வேளாளர்கள் அதிக ஆதரவு கொடுப்பார்கள்.
இதனால் கொங்கு மண்டலம் சுவாரசியமாக இருக்க போகிறது. சட்டசபையை மையமாக வைத்து இந்த தேர்தல் நடக்கவில்லை. நாடாளுமன்றத்தை மையமாக வைத்தே இந்த தேர்தல் நடக்கும். கோவை குண்டுவெடிப்பு, நாடாளுமன்ற பிரச்சனைகள், பிரதமர் வேட்பாளர் போன்ற விஷயங்கள் இந்த தேர்தலில் பெரிய அளவில் கவனம் பெறும். இது எடப்பாடி அதிமுக, ஜெயலலிதா அதிமுக இல்லை. எடப்பாடி அதிமுக என்பதால் கொங்கு வேளாளர்கள் அண்ணாமலை பக்கம் நிற்கின்றனர்.
அவரை தங்கள் கம்யூனிட்டியின் அடையாளமாக பார்க்கின்றனர். இதனால் எடப்பாடியின் சமுதாய மக்களே அவருக்கு ஆதரவு தருவது குறையும். முக்கியமாக இளைஞர்கள் ஆதரவு எடப்பாடிக்கு குறைவாக இருக்கும். மூத்தவர்கள் வேண்டும் என்றால் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தருவார்கள் என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications