2 நாளா எதுவுமே சொல்லலையே! ஆட்டி வைத்த எடப்பாடி.. அதிர்ந்து நின்ற பாஜக! விரைவில் 2ல் ஒன்று நடந்துடும்
சென்னை: அதிமுக பொன்னையன் பாஜக பற்றி கூறிய கருத்துக்கு எடப்பாடி பழனிச்சாமி எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதி காப்பது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு அரசியல் உலகில் கடந்த இரண்டு நாட்களாக பொன்னையன் சொன்ன கருத்துதான் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது. பாஜகவை நேரடியாக சீண்டி பொன்னையன் பேசியது, பாஜக தரப்பை பதற வைத்துள்ளது.
பாஜக தன்னை எதிர்க்கட்சி போல காட்ட நினைக்கிறது என்று சரமாரி குற்றச்சாட்டுகளை அதிமுக அமைப்புச்செயலாளர் பொன்னையன் அதிமுக ஐடி விங் கூட்டத்தில் பேசி இருந்தார்.

பாஜக எதிர்ப்பு
பாஜக தன்னை எதிர்க்கட்சி போன்று மக்கள் முன்னிலையில் முன்னிறுத்துகிறது. அதற்கான பிம்பத்தை பாஜக ஏற்படுத்துகிறது. அதை நம்முடைய ஐடி விங் நிர்வாகிகள் முறியடிக்க வேண்டும். இதற்காக நம்முடைய ஐடி விங் செயல்பட வேண்டும். தமிழ்நாட்டில் பா.ஜ.க ஆட்சிக்கு வர நினைத்தால் மக்கள் ஏற்க மாட்டார்கள். தமிழ்நாடு இன, மொழி, திராவிட உணர்வு உள்ள மாநிலம். இங்கு பா.ஜ.க வின் பருப்பு வேகாது, என்று பொன்னையன் குறிப்பிட்டார்.

அதிமுக பாஜக
இந்த நிலையில் பொன்னையன் கருத்துக்கு பாஜகவினர் கடுமையாக எதிர்ப்புகளை தெரிவித்தனர். பாஜக துணை தலைவர் வி பி துரைசாமி.. பொன்னையனுக்கு எம்பி பதவி கிடைக்கவில்லை. அதனால் அவர் விரக்தியில் பேசுகிறார் என்று கூறினார். அதேபோல் பாஜக எச். ராஜா, பாஜக வேகமாக வளர்ந்து வருகிறது. பாஜக வளர்ச்சியால் பொன்னையன் இப்படி பேசுகிறார். அவர் தான் வளரவில்லை என்ற விரக்தியில் இருக்கிறார் என்று குறிப்பிட்டு இருந்தார்.

அண்ணாமலை
பொதுவாக பாஜக தொடர்பாக அதிமுக தலைவர்கள் ஏதாவது சர்ச்சைக்குரிய வகையில் பேசினால் உடனே.. அதிமுக டாப் தலைகள் அதற்கு மறுப்பு தெரிவிப்பார்கள். ஒன்று அப்படி பேசிய நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்குவார்கள். அல்லது அது அவரின் சொந்த கருத்து என்று கூறுவார்கள். ஆனால் எடப்பாடி இதுவரை பொன்னையன் கருத்தை மறுக்கவில்லை. பொன்னையன் சொந்த கருத்து சொல்லி இருக்கிறார் என்று எடப்பாடி சமாதானம் செய்யவில்லை.

இரண்டு நாள் ஆச்சு
மாறாக எடப்பாடி 2 நாளாக அமைதி காத்து வருகிறார். இந்த பெருத்த அமைதிதான் பாஜகவிற்கு குழப்பத்திற்கு உள்ளாக்கி இருக்கிறதாம், எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரிந்துதான் இப்படி பொன்னையன் பேசினாரா.. அவரின் கிரீன் சிக்னலோடுதான் பொன்னையன் இப்படி பேசினாரா., ஏன் இன்னும் எடப்பாடி எதுவும் சொல்லாமல் இருக்கிறார்.. என்ற குழப்பத்தில் பாஜக தரப்பு ஆழ்ந்து இருக்கிறதாம். அதாவது பொன்னையனை பேச விட்டு, அதிமுக ஆழம் பார்க்கிறது என்று கமலாலய வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர்.

பாஜக வளர்ச்சி
பாஜகவின் திடீர் வளர்ச்சியை அதிமுக தங்களின் இருப்பிற்கு வந்த ஆபத்தாக பார்க்கிறது. இதன் காரணமாக அதிமுக இப்படி பொன்னையனை விட்டு பேச தொடங்கி உள்ளது. பாஜக வளர்ந்து கொண்டே செல்வதை அதிமுக கண்டிப்பாக விரும்பாது. அதனால் பொன்னையன் முதல் ஆளாக பேசி உள்ளார். பொன்னையனா ஐடி விங் கூட்டத்தில் இப்படி பேசுகிறார் என்றால் அது கண்டிப்பாக இரட்டை தலைமையின் கிரீன் சிக்னல் இல்லாமல் நடந்து இருக்காது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

ஆழம்
அடுத்து இதில் எடப்பாடி இரண்டு முடிவுகளை எடுக்க வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எப்போதும் போல இது பொன்னையன் கருத்து. அவரின் தனிப்பட்ட கருத்து என்று கூறி எடப்பாடி பிரச்னையை தீர்க்க வாய்ப்பு உள்ளது. இதனால் பாஜக - அதிமுக இடையிலான உறவு தொடர்ந்து சுமுகமாக இருக்கும். அல்லது எடப்பாடி எதுவும் சொல்லாமல் அப்படியே அமைதி காத்து பாஜகவை அலற விட வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்... எடப்பாடி என்ன செய்வார் என்று பார்க்கலாம்!
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி!












Click it and Unblock the Notifications