வீட்டை விட்டு வெளியே வராத எடப்பாடி பழனிசாமி.. கவனிச்சீங்களா? பேசவே இல்லை.. அப்படி என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக அதிமுக கூட்டணி முறிந்த பின் இன்னும் , எடப்பாடி பழனிசாமி வெளியே வரவில்லை. அதனால்தான் அவர் செய்தியாளர்களை சந்திக்கவில்லை, என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

2024 தேர்தலுக்கான தமிழ்நாடு அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டில் ஒரு பக்கம் அதிமுக - பாஜக கூட்டணி முறிந்துவிட்டது. 2024 லோக்சபா தேர்தலுக்கு புதிய கூட்டணி அமைப்போம் என்றும் அதிமுக கூறிவிட்டது. விரைவில் கூட்டணிக்கான பணிகளை தொடங்குவோம் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.

Why is Edappadi Palanisamy not coming out of his home after breaking BJP AIADMK alliance?

இந்த கூட்டணி முறிவிற்கு அண்ணாமலையின் பேச்சுதான் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அண்ணாமலையின் பேச்சு, எடப்பாடியின் மௌனம், கூட்டணி முறிவு குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், பாஜக வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி நிலைப்பாடு எடுத்துள்ளார். பாஜக வேண்டும் என்ற நிலைப்பாட்டை மணியான சிலர் கட்சியில் எடுத்துள்ளனர். பாஜக உடன் இருந்தால் வழக்கு இருக்காது. நமக்கு பிரச்சனை இருக்காது. 2024ல் ஆட்சியில் பாஜக வந்தால்.. மத்திய ஆட்சியில் நாம் இருக்க முடியும். அதோடு கொங்கு மண்டலத்தில் பாஜக வாக்கும் நமக்கு கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். பாஜக தனியாக ஓபிஎஸ், டிடிவி தினகரன் உடன் கூட்டணி வைத்தால் எடப்பாடிக்கு சிக்கல் ஆகும். அதோடு ஓ பன்னீர்செல்வம் வழக்கில் மேல்முறையீடு செய்துள்ளார்.

ஓ பன்னீர்செல்வம் வழக்கு: இன்னொரு பக்கம் தேர்தல் ஆணையத்திடம் ஓ பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்தால் அதுவும் பிரச்சனை ஆகும். உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் ஓ பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்து சட்ட ரீதியாக வென்றால் எடப்பாடிக்கு சிக்கல். இப்படி பல சிக்கல் இருக்கவும் கூட எடப்பாடி பழனிசாமி கூட்டணியை முறித்துள்ளார். அப்படி அவர் கூட்டணியை முறிக்கும் அளவிற்கு என்ன நடந்தது? அவ்வளவு தைரியமாக அவர் கூட்டணியை முறிக்க என்ன நடந்தது?

அண்ணாமலையை கூட லேட்டாக தூக்கலாம். கூட்டணி இடஒதுக்கீடு பிரச்னையை சரி செய்யலாம். இப்படி இருக்க எடப்பாடி பழனிச்சாமி ஏன் கூட்டணியை உடைக்க வேண்டும். இப்போதே அவர் ஏன் கூட்டணியை உடைக்க வேண்டும். இவ்வளவு பிரச்சனை இருப்பதால் எடப்பாடி மீண்டும் பாஜகவில் சேரும் வாய்ப்புகள் உள்ளன. அதனால்தான் எடப்பாடி பழனிசாமி வெளியே வரவில்லை. அதனால்தான் அவர் செய்தியாளர்களை சந்திக்கவில்லை.

Why is Edappadi Palanisamy not coming out of his home after breaking BJP AIADMK alliance?

என்ன நடக்குது?: எடப்பாடி பழனிச்சாமி இதை பற்றி பேசவில்லை. அதனால் இன்னும் கூட்டணி உடைந்தது என்பதை சில பாஜகவினர் சொல்ல மறுக்கின்றனர். எடப்பாடி பழனிசாமி இன்னும் வலிமையான தலைவர் கிடையாது. அவர் எந்த தேர்தலிலும் அதிமுகவை வெற்றிபெற வைக்கவில்லை. அப்படி இருக்க எடப்பாடி பழனிசாமி பாஜகவை உதறி தள்ளுவாரா என்பது சந்தேகம்தான். எடப்பாடி பழனிசாமியே இப்போதுதான் வளர்ந்து கொண்டு இருக்கிறார்.

2024ல், 2026ல் அவர் தனியாக நின்று ரிஸ்க் எடுப்பாரா என்பது சந்தேகம்தான் அதனால் அவர் என்ன செய்ய போகிறார். அவர் எப்படிப்பட்ட முடிவை எடுப்பார் என்பதை பார்க்க வேண்டும், என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+