கையெழுத்தாகும் டீலிங்! எடப்பாடிக்கு லெப்ட் ஹேண்டாக மாறும் விஜய்! திடீரென ஆதரவாக மாறியது ஏன்? பின்னணி
சென்னை: கடந்த சில வாரங்களுக்கு முன் மதுரை மாநாட்டிலும், அதன்பின் நடந்த சுற்றுப்பயணங்களிலும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். ஜெயலலிதாவின் கட்சி பாஜகவிதான் அடகு வைக்கப்பட்டுவிட்டதாக விமர்சனம் செய்து இருந்தார்.
இப்போது அதே விஜய் அதிமுகவின் உதவியை நாடி இருக்கிறார். அதோடு இல்லாமல் .. ஆந்திர பிரதேசத்தில் எப்படி சந்திராபாபு நாயுடுவுக்கு பவன் கல்யாண் வலது கை போல இருக்கிறாரோ அதே போல்தான் தமிழ்நாட்டில் விஜய் எடப்பாடிக்கு வலது கை போல உருவெடுப்பார் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள். இதற்கான ஆலோசனைகள் ஏற்கனவே செய்யப்பட்டுவிட்டதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய்க்கு ஆதரவாக வந்த எடப்பாடி
நேற்று தர்மபுரியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "கரூரில் செப்டம்பர் 27 ஆம் நடந்த சம்பவத்தை நீங்களும் பார்த்திருப்பீர்கள். இந்த ஆட்சியாளர்கள் உரிய முறையில் பாதுகாப்பு கொடுத்திருந்தால் அந்த உயிர்களை பாதுகாத்திருக்கலாம். முறையான, சரியான பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் பெண்கள், குழந்தைகள் உட்பட 41 பேர் இறந்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் யார்? இது மக்கள் கேட்கும் குரல்.
ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சிகளுக்கு ஒரு நீதியா? நாட்டு மக்களைக் காப்பாற்றும் பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. போராட்டம், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், பேரணி இதுக்கெல்லாம் பாதுகாப்புக் கொடுப்பது அரசின் கடமை. முதல்வரின் கையில்தான் காவல்துறை இருக்கிறது. சரியான முறையில் முதல்வர் உத்தரவிட்டிருந்தால், காவல் துறை சரியான முறையில் செயல்பட்டிருந்தால் பாதுகாப்புக் கொடுக்கப்பட்டிருந்தால், 41 உயிர்களை இழந்திருக்க வேண்டியதில்லை.
இன்னும் ஆழமாகப் பேசமுடியும். ஆனால் இந்த அரசாங்கம் ஒரு நபர் கமிஷன் அமைத்துள்ளது. விசாரணை தொடங்கிவிட்டது. அதனால் மேலோட்டமாகத்தான் பேச முடியும். இவ்வளவு பிரச்சனை நடந்துவிட்டது. தமிழகத்தை தலைகுனிய விடமாட்டேன் என்று முதல்வர் ஸ்டாலின் சொன்னார். ஆனால் இன்று தலைகுனிந்து நிற்கும் காட்சியைப் பார்க்கிறோம். நாடே அதிர்ந்துவிட்டது.
இதுவரை எத்தனையோ அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம் நடத்தியிருக்கிறது. எந்த ஒரு பொதுக்கூட்டத்திலும் இல்லாத அளவுக்கு 41 உயிர்கள் பறி போயுள்ளது என்று சொன்னால், இந்த அரசாங்கம் தான் பொறுப்பேற்க வேண்டும். ஆட்சி உங்கள் கையில் இருக்கிறது, ஆட்சியாளர்களைத்தான் கேட்க முடியும். யார் யார் மீதோ பழி சுமத்தி தப்பிக்கக் கூடாது. ஓர் அரசு எப்படி செயல்பட வேண்டும் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். இனியாவது பொதுக்கூட்டத்துக்கு முறையான பாதுகாப்பு தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
விஜய்க்கு எடப்பாடி சப்போர்ட்
நான் 163 தொகுதிகளில் மக்களை சந்தித்தேன், 5 முதல் 6 மாவட்டத்தில் தான் காவல்துறை பாதுகாப்பு கொடுத்தனர், மற்ற இடங்களில் நம்முடைய அதிமுக தொண்டர்கள், கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் தான் பாதுகாப்பு கொடுத்தனர். ஆளுங்கட்சி முதல்வர் கூட்டம் நடத்தினால், ஆளே இல்லாத பகுதியில்கூட காவலர்களை நிறுத்தி பாதுகாப்பு கொடுக்கிறீர்கள். அதை நான் வேண்டாம் என்று சொல்லவில்லை.
ஆனால் ஆளே இல்லாத இடத்தில் பாதுகாப்புக் கொடுக்கும் முதலமைச்சர், ஆயிரக்கணக்கான பேர் இருக்கும் இடத்தில் ஏன் பாதுகாப்பு கொடுக்கவில்லை என்று மக்கள் கேட்கும் கேள்விக்கு முதல்வர் பதில் சொல்லியாக வேண்டும். இதற்கெல்லாம் பதில் சொல்வதற்கு மக்கள் 2026 தேர்தலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். உங்களுக்குத் தகுந்த பதிலடி வழங்குவார்கள்.
அதுமட்டுமல்ல, ஸ்டாலின் மாடல் அரசு உயர் அதிகாரிகளை, செய்தியாளர்களை சந்தித்து இந்த ஆட்சியின் திட்டங்களைச் சொல்ல வேண்டும் என்று பணித்து, இந்த 10 நாட்களாக இந்த ஆட்சியில் என்னென்ன திட்டங்கள் என்று சொல்லி வருகிறார்கள். அது சொல்லலாம், ஆனால் கரூரில் நடந்த சம்பவத்தை எப்படி அரசு செயலாளர் சொல்ல முடியும்?
ஒருநபர் கமிஷன் அமைத்துவிட்டு அரசு செயலாளர்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம். உங்கள் துறையின் பணிகளை மட்டும் நீங்கள் செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு அவர் எப்போது அங்கு சென்றார். இவர் ஏன் கையைக் காட்டவில்லை என்பதெல்லாம் உங்களுடைய பேச்சாக இருக்கக்கூடாது. இதெல்லாம் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு தோண்டியெடுத்து தவறான செயலில் ஈடுபடுகின்ற அதிகாரிகளை விடமாட்டேன். என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? என்று கடுமையாக விமர்சனங்களை வைத்தார்.
பின்னணி என்ன?
இந்த நிலையில்தான் எடப்பாடி - விஜய் இடையே கூட்டணி பேச்சுவார்த்தைகள் திரைமறைவில் நடந்து வருவதாக அரசியல் வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன. அதாவது விஜயிடம் ஏற்கனவே எடப்பாடி பேசிவிட்டார் என்றும் கூறப்படுகிறது. இப்போது விஜயை நாமும் சேர்ந்து அழுத்தினால் அவர் பெரிய சக்தியாக சக்தியாக வளர்ந்துடுவார். அது நமது எதிர்காலத்திற்கு சிக்கல். இப்போது அவருக்கு ஆதரவு கொடுத்தால் அவர் நம்முடன் இருப்பார். இது நமக்கு ஆதரவாக முடியும் என்று விஜய் நினைக்கிறாராம்.
அதோடு விஜய் அரசியல் முடிய கூடாது என்று நினைக்கிறாராம். விஜய் அரசியலில் இருக்க வேண்டும். நமக்கு கூட்டணி வைக்கவும் வலுவான முகம் தேவை. விஜயகாந்த் இருந்திருந்தால் செய்ய வேண்டியதை விஜயை வைத்து செய்யலாம்.
ஆனால் அவர் நம்மை விடவும் அதிகமும் வளர கூடாது. தேர்தல் நேரத்தில் கூட்டணி கேட்டிருந்தால் 100+ இடங்களை கேட்டிருப்பார். இப்போது சிக்கல் இல்லை. அவர் பேரம் பேசும் இடத்தில் இல்லை. அவருடன் இப்போது வலுவான நபர்கள் இல்லை. இப்போது அவருக்கு உதவியாக நாம் நிற்கலாம். 30-40 இடங்கள்தான் கொடுப்போம் என்று கூறி அவரை சம்மதிக்க வைக்கலாம். அவரை நாம்தான் வழிகாட்ட வேண்டும். வேறு தலைவர்கள் அவருக்கு இல்லை என்று எடப்பாடி நினைக்கிறாராம்.
அந்த கட்சியை தங்கள் பக்கம் இழுக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக காய் நகர்த்தி வருகிறாராம். விரைவில் விஜயுடன் எடப்பாடி பழனிசாமி போனில் பேச வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications