கிளாம்பாக்கத்திற்கு ஷாக்.. நிதி ஒதுக்காத மத்திய அரசு.. மெட்ரோ வருவதில் சிக்கல்.. பணிகள் நிறுத்தம்
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வரும் நிலையில் அங்கே மெட்ரோவை விரிவு செய்வதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளன.
புதிய கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு மெட்ரோ இணைப்பு விரைவில் நிறைவேறாது என்று தகவல் வெளியாகி உள்ளது. அதிகாரிகளின் தகவல்படி, மத்திய அரசின் ஆதரவு இல்லாததால் விமான நிலையத்திலிருந்து கிளம்பாக்கம் வரை உத்தேசிக்கப்பட்ட மெட்ரோ தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இங்கே பூர்வாங்க பணிகளை செய்வது நிறுத்தப்பட்டு உள்ளது., தற்போது நடைபெற்று வரும் 2-ம் கட்ட மெட்ரோ திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு நீண்ட காலத்திற்கு முன்பே அதன் ஒப்புதலுக்கு அனுப்பியிருந்தாலும், அதற்கான நிதியை இன்னும் வெளியிடவில்லை. தற்போது மாநில அரசு சர்வதேச நிறுவனங்களின் கடனுடன் 2 ஆம் கட்ட நிதியுதவியின் முழு சுமையையும் ஏற்றுக்கொண்டுள்ளது.

அதாவது இப்போது கட்டப்படும் இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டம் எல்லாம் மாநில அரசின் நிதியில் இருந்து செய்யப்படுத்துவது ஆகும். அப்படி இருக்க கிளாம்பாக்கம் வரை நீட்டிக்க கண்டிப்பாக மத்திய அரசின் நிதி வேண்டாம். இதனால்தான் தற்போது இந்த பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளன.
2ம் கட்ட மெட்ரோ: சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 5-ல் (கோயம்பேடு முதல் ஆவடி வரை) மற்றும் வழித்தடம் 3-ல் (சிறுசேரி முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை) மெட்ரோ இரயில் நீட்டிப்புக்கான சாத்தியக்கூறு அறிக்கை தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் . ரமேஷ் சந்த் மீனாவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
( அடியோடு மாறுதே.. சென்னையில் இங்கெல்லாம் புதிதாக திறக்கப்படும் மெட்ரோ.. பூக்கும் பூந்தமல்லி! )
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 5-ல் கோயம்பேட்டில் இருந்து திருமங்கலம், முகப்பேர் வழியாக ஆவடி வரை மற்றும் வழித்தடம் 3-ல் சிறுசேரியில் இருந்து கேளம்பாக்கம் வழியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை விரிவான சாத்தியக்கூறு அறிக்கைகள் (Detailed Feasibility Report) தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. ரமேஷ் சந்த் மீனா, இ.ஆ.ப., அவர்களிடம், அரசு முதன்மை செயலாளரும், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனருமான .மு.அ.சித்திக், சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று (20.09.2023) சமர்பித்தார்.
இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குநர் திரு. தி.அர்ச்சுனன், (திட்டங்கள்), தலைமை பொது மேலாளர்கள் திரு. டி.லிவிங்ஸ்டோன் எலியாசர், (திட்டம் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), திருமதி. ரேகா பிரகாஷ், (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு) மற்றும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
வழித்தடம் 5-ல் கோயம்பேடு முதல் ஆவடி வரையிலான கட்டம் 2-இன் நீட்டிப்பு: சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 5-ல் கோயம்பேட்டில் இருந்து திருமங்கலம், முகப்பேர் வழியாக ஆவடி வரை 16.07 கி.மீ. நீளத்திற்கு தோராயமாக 15 உயர்மட்ட மெட்ரோ இரயில் நிலையங்கள் ரூ.6376.18 கோடி மதிப்பீட்டில் (தோராயமாக) மெட்ரோ இரயிலை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கை சமர்பிக்கப்பட்டு மெட்ரோ இரயிலை பரிந்துரைக்கிறது.
( சென்னை மெட்ரோ 2.0.. புதிதாக எங்கெல்லாம் மெட்ரோ ஸ்டேஷன்கள் வரப்போகிறது தெரியுமா? )
தகவல் தொழில்நுட்பப் பூங்கா, நில இருப்பு மற்றும் பட்டாபிராமத்தில் எதிர்கால வளர்ச்சி சாத்தியம் போன்ற சமீபத்திய முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு, ஆவடி முதல் பட்டாபிராம் வரையிலான விரிவாக்கத்தை விரிவான திட்ட அறிக்கை கட்டத்தில் ஆராயலாம் என சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. விரிவான திட்ட அறிக்கை கட்டத்தில் விரிவான சீரமைப்பு ஆய்வுக்குப் பிறகு, மொத்த மெட்ரோ இரயில் நிலையங்களின் எண்ணிக்கை இறுதி செய்யப்படும்.
எங்கெல்லாம் நிறுத்தம்: இதன் மூலம் சென்னை கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை மெட்ரோ ரயில் நீட்டிக்க வாய்ப்பு உள்ளது. பாடி குப்பம், கலெக்டர் நகர், மொகப்பேர் கிழக்கு/மேற்கு, வேவின், அம்பத்தூர் போன்ற அம்பத்தூர் எஸ்டேட் சாலையில் உள்ள முக்கியமான நகர்ப்புற பகுதிகள் இந்த மெட்ரோ லைனில் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இங்கே வர இருக்கும் நிறுத்தங்கள் குறித்து பார்க்கலாம்..
கோயம்பேடு-ஆவடி-பட்டாபிராம் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் நிலையங்கள்:
ஸ்டெட்ஃபோர்ட் மருத்துவமனை
பட்டாபிராம்
ஆவடி ரயில் நிலையம்
முருகப்பா பாலிடெக்னிக்
வைஷ்ணவி நகர்
திருமுல்லைவாயல்
அம்பத்தூர் ரயில் நிலையம்
டன்லப்
அம்பத்தூர் ஓ.டி
அம்பத்தூர் டெலிபோன் எக்சேஞ்ச்
அம்பத்தூர் எஸ்டேட் பேருந்து நிலையம்
கோல்டன் ஃப்ளாட்ஸ்
பூங்கா சாலை
வாவின்
பாடி புது நகர்
கோயம்பேடு வரை இந்த மெட்ரோ பாதைகள் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications