அடியோடு மாறுதே.. சென்னையில் இங்கெல்லாம் புதிதாக திறக்கப்படும் மெட்ரோ.. பூக்கும் பூந்தமல்லி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் 2024-ம் வருடம் திறக்கப்பட உள்ள புதிய மெட்ரோ ரூட் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி கோடம்பாக்கத்தில் உள்ள பவர்ஹவுஸ் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரையிலான 16 கி.மீ., லைன் கட்டுமானப் பணிகள் 2024-ம் ஆண்டு முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பயணிகள் 2025 ஜனவரி அல்லது பிப்ரவரியில் இருந்து கோடம்பாக்கத்திலிருந்து பூந்தமல்லிக்கு மெட்ரோ ரயிலில் பயணிக்க முடியும்.

Power house to Poonamallee; Chennai to get its new metro stations in this route in before the end of 2024

இந்த பாதையில் உள்ள 18 நிலையங்களில் 13 ரயில் நிலையங்களின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கான்கோர்ஸ் மற்றும் டிக்கெட் கவுண்டர் அமைப்பதில் பணியாளர்கள் மும்முரமாக உள்ளனர். கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரையிலான 26 கிமீ மெட்ரோவின் ஒரு பகுதியாக இந்த 16 கிமீ மெட்ரோ ரூட் உள்ளது. 116.1 கிமீ தூரத்திற்கு வர இருக்கும் கட்டம்-2 திட்டம் இரண்டு கட்டங்களாக 2025 மற்றும் 2028 க்கு இடையில் கட்டங்களில் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மெட்ரோ நிலையங்களை அமைக்கும் பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன. பவர் ஹவுஸ், வடபழனி, சாலி கிராமம், அவிச்சி பள்ளி, ஆழ்வார்திருநகர், வளர்சவாக்கம், காரப்பாக்கம், ஆலப்பாக்கம், போரூர், சென்னை பைபாஸ், ராமச்சந்திரா ஹாஸ்ப்பிட்டல், ஐய்யப்பன்தாங்கல், காட்டுப்பாக்கம், குமணன்சாவடி, கரையான் சாவடி, முள்ளைத்தோட்டம், பூந்தமல்லி பஸ் டெர்மினல் வரை, பூந்தமல்லி பைபாஸ் வரை இந்த ரூட் அமைக்கப்பட உள்ளது.

2025 தொடக்கத்தில் இந்த மெட்ரோ முழுமையாக சேவையை தொடங்கும். பாதை கட்டுமானம் முடிய உள்ள நிலையில் ஸ்டேஷன் கட்டுமானம் விரைவில் தொடங்கும். 2024 டிசம்பருக்குள் அனைத்து பணிகளும் முடிய உள்ளன.

2ம் கட்ட மெட்ரோ: சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ 3 வழித்தடங்களில் கொண்டு வரப்பட உள்ளது. 118.9 கிமீ தூரத்திற்கு இந்த மெட்ரோ பாதை கொண்டு வரப்பட உள்ளது. முதல் கட்டத்திற்கு ஆலந்தூர் எப்படி மையமாக இருந்ததோ இரண்டாம் கட்டத்திற்கு ஓஎம்ஆர் மையமாக இருக்கும். இந்த நிலையில்தான் ஓஎம்ஆர் சாலையில் அமைக்கப்படும் மெட்ரோ 2 பணிகள் முடிந்து 2027ல் இங்கே போக்குவரத்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 2027க்குள் சிறுசேரி முதல் பெருங்குடியில் உள்ள நேரு நகர் வரை மெட்ரோ இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Power house to Poonamallee; Chennai to get its new metro stations in this route in before the end of 2024

இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதில் 20-கிமீ நீளம் கொண்ட மாதவரம் முதல் சிப்காட் வரை - 45.4 கிமீ பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இங்கு நேரு நகர், கந்தன்சாவடி, பெருங்குடி, தொரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், பிடிசி காலனி, ஒக்கியம்பேட்டை, காரப்பாக்கம், ஒக்கியம் தொரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், சோழிங்கநல்லூர் ஏரி I மெட்ரோ, சோழிங்கநல்லூர் ஏரி II மெட்ரோ, செம்மஞ்சேரி 1 மெட்ரோ, செம்மஞ்சேரி 2 மெட்ரோ, காந்தி நகர், நாவலூர் மெட்ரோ, சிறுசேரி, சிறுசேரி SIPCOT I மெட்ரோ மற்றும் சிறுசேரி SIPCOT II மெட்ரோ ஆகிய நிலையங்கள் இந்த பாதையில் அமைக்கப்படும். மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 44.6 கிமீ நீளம் (காரிடார் 5) மற்றும் லைட் ஹவுஸ்-பூந்தமல்லி வரையிலான 26.1 கிமீ ஆகியவை இரண்டாம் கட்ட திட்டத்தில் உள்ள மற்ற இரண்டு வழித்தடங்களாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+