கொத்தாக அள்ளப்போகும் அறிவாலயம்! ஓபிஎஸ் மட்டும் நீக்கப்பட்டால்! திமுகவிற்குதான் சாதகம்! ஏன் தெரியுமா?
சென்னை: அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் ஓரம்கட்டப்பட்டாலோ, நீக்கப்பட்டாலோ முக்குலத்தோர் வாக்குகள் வெகுவாக அதிமுகவில் இருந்து வெளியேறும் சூழ்நிலை ஏற்படும் என்று அரசியல் வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Recommended Video
அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சத்தில் இருக்கிறது. இன்று அதிமுக தலைமைக்கழக கூட்டம் சென்னை அதிமுக அலுவலகத்தில் நடக்கிறது. இன்று நடக்கும் அதிமுக தலைமை குழு கூட்டத்தில் ஓ பன்னீர்செல்வத்தின் பதவி பறிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
அதோடு அவர் கட்சியில் இருந்து நீக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. எடப்பாடி பதவி வகிக்கும் கழக தலைமை நிர்வாக செயலாளர் பெயரில் இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஓரம்கட்டப்படும் ஓபிஎஸ்
அதிமுகவில் இப்படி தொடர்ந்து ஓபிஎஸ் ஓரம்கட்டப்பட்டு வருவது தென் மண்டல நிர்வாகிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எங்கள் சமுதாய தலைவரை அவமதித்துவிட்டனர், அவரை ஓரம்கட்டுவது கூட சரி.. ஆனால் அசிங்கப்படுவதை ஏற்க முடியாது என்று முக்குலத்தோர் பிரிவினர் புலம்பி வருகிறார்கள். சாதி ரீதியாக அதிமுகவில் முக்குலத்தோர் ஓரம்கட்டப்படுவதாக அப்பிரிவினர் அதிருப்தி அடைந்து உள்ளனர். ஜெயலலிதா - சசிகலா இருந்த போது முக்குலத்தோருக்கு பெரிய ஆதரவு இருந்தது.

அதிர்ச்சியில் முக்குலத்தோர்
முக்குலத்தோர் நிர்வாகிகளை தென் மண்டலத்திலும், டெல்டாவில் அதிமுகவினர் மதித்தனர். ஆனால் இப்போது அப்படி இல்லை. அதிமுக வெறும் கொங்கு மண்டல கட்சியாகவும், கவுண்டர்களின் கட்சியாகும் மாறிவிட்டது. ஓபிஎஸ்ஸை கட்சியில் இருந்து நீக்கினால்.. அதிமுகவிற்கு முக்குலத்தோர் பிரிவினர் ஆதரவு தர மாட்டோம். ஓபிஎஸ் அவமதிக்கப்பட்டால் அதிமுகவை ஆதரிப்பதை நாங்கள் மறுபரிசீலனை செய்வோம் என்று முக்குலத்தோர் பிரிவினர் எச்சரிக்கை விடுக்க தொடங்கி உள்ளனராம்.

தென் மண்டலத்தில் சரிவு
கடந்த சட்டசபை, லோக்சபா தேர்தலிலேயே அதிமுக தென் மண்டலத்தில் மோசமான பின்னடைவை சந்தித்தது. எப்போதும் தென் மண்டலத்தில் வலுவாக இருக்கும் அதிமுக கடந்த இரண்டு தேர்தலிலும் தென் மண்டலத்தில் மோசமாக தோல்வி அடைந்தது. முக்குலத்தோர் தலைவர்கள் ஓரம்கட்டப்பட்டது, சசிகலா, டிடிவி ஓரம்கட்டப்பட்டது, வன்னியர் இடஒதுக்கீடு என்று பல காரணங்களால் முக்குலத்தோர் வாக்குகள் திமுகவிற்கு சென்றது. இது திமுகவின் வெற்றிக்கும் காரணமாக அமைந்தது.

பிரியும் வாக்குகள்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் இதுவே நடந்தது. கொங்கு மண்டலத்தில் மட்டும் அதிமுக குறிப்பிட்ட இடங்களை வென்றது. இந்த நிலையில் தற்போது ஓபிஎஸ் கட்சியில் ஓரம்கட்டப்பட்டாலோ, நீக்கப்பட்டாலோ முக்குலத்தோர் வாக்குகள் மேலும் அதிமுகவில் இருந்து வெளியேறும். டிடிவி தரப்பு, ஓபிஎஸ் ஆதரவு, சசி ஆதரவு என்று முக்குலத்தோர் வாக்குகள் வெகுவாக பிரியும். அப்படி நடக்கும் பட்சத்தில் அதிமுக மிகப்பெரிய பின்னடைவை சந்திக்கும்.

திமுகவிற்கு சாதகம்
இது மீண்டும் திமுகவிற்கு சாதகமாகவே முடியும். தென் மண்டலத்தில் மீண்டும் திமுக எளிதாக வெற்றிபெற வாய்ப்பு அளிக்கும். முக்குலத்தோரை அவமதித்துவிட்டனர் என்று கூறி அப்பிரிவு மக்கள் அப்படியே திமுக பக்கம் தாவ வாய்ப்பு உள்ளது. திமுகவில் பல முக்குலத்தோர் தலைவர் வலுவாகி வருகின்றன. தூத்துக்குடியில் கனிமொழியும் வலுவாக இருக்கிறார். இதனால் தென் மண்டலம் திமுகவின் கோட்டையாக உருவெடுக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

ஏற்கனவே கொங்கில் செந்தில் பாலாஜி
அதிமுக உட்கட்சி மோதல் திமுகவிற்குத்தான் சாதகமாக முடியும். இது போக ஏற்கனவே கொங்கு மண்டலத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவை வேகமாக வளர்த்து வருகிறார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மொத்தமாக கொங்கு மண்டலத்தை கைப்பற்றி திமுக அசத்தியது. கோவை, கரூரை திமுக பிடிக்க செந்தில் பாலாஜி காரணமாக இருந்தார். கொங்கு மண்டலத்திலேயே திணறும் அதிமுக, தற்போது தென் மண்டலத்தையும் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications