வீட்டில் இருந்துகொண்டே.. பார்க்க வரலையே.. ஸ்டன் ஆன எடப்பாடி.. நடைபயணத்தில் நடந்த ஷாக் சம்பவம்!
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வரும் பயணத்தில் நடந்த சம்பவம் ஒன்று பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு சட்டசபை தேர்தலை முன்னிட்டு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுச்சிப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். மேற்கு மண்டலத்தில் இருந்து இந்த பயணம் தொடங்கி உள்ளது.
இந்த பயணம் கிட்டத்தட்ட அதிமுக + பாஜக கூட்டணியை வலுப்படுத்தும் பயணமாக அமைந்துவிட்டது. இரண்டு கட்சிகளும் நெருக்கமாகும் அளவிற்கு பயணத்தில் பல முக்கியமான சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்து வருகின்றன. முன்னதாக பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுகையில், தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எனது அருமை நண்பர் எடப்பாடி பழனிசாமி , மக்களை காப்போம் - தமிழகத்தை மீட்போம் என்ற முழக்கத்துடன் தொடங்கிய "புரட்சித்தமிழரின் எழுச்சிப்பயணத்தில்"இன்று மேட்டுப்பாளையத்தில் கலந்துகொண்டேன்.

பெருந்திரளாக கூடியிருந்த பொதுமக்கள் திமுக அரசுக்கு முடிவுரை எழுதத் தயாராகி விட்டார்கள் என்பதை உணர்த்துவதாக அமைந்திருந்தது. இந்த நிகழ்வில் என்னுடன்,மத்திய இணை அமைச்சர் எல் முருகன், பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், தேசிய இணை பொறுப்பாளர் ரெட்டி சுதாகர்,கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ திருமதி. வானதி சீனிவாசன் ,பாஜக மாநில பொதுச்செயலாளர் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் காரியகர்த்தாக்கள் இணைந்து கலந்துகொண்டார்கள். தமிழக மக்களின் நலனுக்காக எடப்பாடி பழனிச்சாமி தொடங்கியுள்ள இந்த புரட்சிப்பயணம் மாபெரும் வெற்றிபெற வாழ்த்துகள், என்று கூறி உள்ளார்.
எடப்பாடி பழனிசாமி எழுச்சிப்பயணம்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வரும் பயணத்தில் நடந்த சம்பவம் ஒன்று பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பயணத்தில் அதிமுக டாப் மாஜி அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டு வருகின்றனர். கடம்பூர் ராஜு, முன்னாள் சபாநாயகர் தனபால் ஆர்.காமராஜ், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, வேலுமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வருகின்றனர்.
அதிமுகவினர் மட்டுமன்றி பாஜகவினரும் கூட இந்த நடிப்பயணத்தில் கலந்து கொண்டு வருகின்றனர். உதாரணமாக பாஜகவின் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எல்.முருகன் ஆகியோர் இந்த பயணத்தில் கலந்து கொண்ட வருகின்றனர்.
செங்கோட்டையன் மிஸ்ஸிங்
ஆனால் மாஜி அமைச்சர் செங்கோட்டையன் இந்த பயணத்தில் கலந்துகொள்ளவில்லை. இத்தனைக்கும், அவர் கோபிச்செட்டிபாளையத்தில்தான் இருக்கிறார். வீட்டில்தான் இருக்கிறார். மாலை மாலை சில நிகழ்வுகளுக்கு கூட செல்கிறார். ஆனால் 3 நாட்களாக ஒருமுறை கூட எடப்பாடி பழனிச்சாமியை சென்ட்ரஸ் செங்கோட்டையன் சந்திக்கவில்லை. அவரின் நடைபயணம் குறித்தும் கூட செங்கோட்டையன் இதுவரை வாய் திறக்காமல் இருக்கிறார். வீட்டில் இருந்துகொண்டே.. பார்க்க வரலையே என்று அதிமுகவினர் யோசிக்கும் அளவிற்கு செங்கோட்டையன் மௌனம் காத்து வருகிறார்.
எடப்பாடி அமித் ஷா வருகை
இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிச்சாமியின் இந்த பயணத்தில் அமித் ஷா கலந்து கொள்கிறாராம். உள்துறை அமைச்சர் அமித் ஷா அடுத்த மாதம் அல்லது இந்த மாதம் இறுதியில் எடப்பாடி பழனிச்சாமியின் இந்த பயணத்தில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எடப்பாடி பழனிச்சாமி பயணம் கவனம் பெற்றுள்ள நிலையில் கூட்டணிக்கும் இது சாதகமாக மாற தொடங்கி உள்ளது. இந்த நிலையில்தான் எடப்பாடி உடன் இந்த பயணத்தில் அமித் ஷாவும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications