ஜனநாயகன் விவகாரம்.. விஜய்யை பாஜக அடிப்பது ஏன்.. சீமானின் வியூகம் என்ன.. திருச்சி சூர்யா பேட்டி
சென்னை: திருச்சி சூர்யா ஒன் இந்தியா யூடியூப் சேனலுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது தற்கால அரசியல் சூழல்கள், விஜய்யின் அடுத்த கட்ட நகர்வு, பாஜகவின் வியூகம், அதிமுகவின் நகர்வுகள், திமுகவின் திட்டங்கள் குறித்து பேசினார். பேட்டியின்போது திருச்சி சூர்யா பேசும் போது, பாஜக விஜய்க்கு அழுத்தம் தருவதாகவும், இனி அடுத்தடுத்து கூட்டணிக்காக வெடிகுண்டு வீசும் என்றும், எப்படி அதிமுக உடன் டிடிவி தினகரன் கூட்டணி அமைத்தாரோ, அதுபோல் அமைக்க வைக்க பாஜக விரும்புவதாகவும் கூறினார்.
திருச்சி சூர்யா ஒன் இந்தியா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், "ஜனநாயகன் விவகாரத்தில் விஜய்யை பிஜேபி அடிக்கிறது என்று ஒரு சாதாரண சாமானிய மனிதனுக்கு தெரிகிறது. அவன் பேசுகிறான்.. ஆனால் விஜய் வாயை திறக்கவே இல்லை.. பாஜக பிரச்சனையை ஏற்படுத்திக் கொண்டே தான் இருக்கும்..
வாரத்திற்கு ஒரு வெடிகுண்டு
வாரத்திற்கு ஒரு வெடிகுண்டு வீசுவார்கள் என்கிறார்கள்.. இன்னமும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பத்திரிக்கையாளர் சந்திப்பில், சில அரசியல் கட்சிகள் வரப்போவதாக கூறி வருகிறார். அவர் கூற வருவது விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தை தான்..

பாஜக அதிமுகவிற்கு பெரிய அடி விழும்
விஜய் தனியாக நின்றால், பாஜக அதிமுகவிற்கு பெரிய அடி விழும் என்பதால் அவர்கள் அதனை ஏற்க மாட்டார்கள் என்றார். அப்போது நெறியாளர், தன்னை நம்பி வந்த ரசிகர்களை விட்டுவிட்டு விஜய் செல்வாரா என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு பதில் அளித்த திருச்சி சூர்யா, கரூர் சம்பவத்திற்கு பின்னர் வீட்டிற்கு போய்விட்டார் என்றார்.
சீமான் விஜய் ஒப்பீடு
சீமான், விஜய் குறித்த கேள்விக்கு, விஜய்யை பொறுத்தவரை மூன்று விஷயம்.. ஒன்று பேச்சுக்கு மயங்குவது..இன்னொன்று ஆளும் கட்சியையோ அல்லது தவறு நடக்கும் இடத்திலோ விமர்சனங்களை வைப்பது. அடுத்ததாக இளைஞர்களை ஈர்ப்பது தான் இந்த மூன்று விஜய்யிடம் இருக்கிறது...
விஜய்க்கு ஆதரவு அதிகம்
நாளைக்கு சீமானா விஜயா என்று கேட்டால், விஜய்யை தான் இளைஞர்கள் ஆதரிப்பாளர்கள்.சீமானிடம் மட்டும்தான் கொள்கை இருக்கிறதா.. விஜய்யிடம் கொள்கை இல்லையா... சீமானிடம் இருக்கும் 8 சதவீதம் வாக்குகள், நாளை அப்படியே விஜய்க்கு போய்விடும் என்பதால் தான் விஜய்யை சீமான் கடுமையாக விமர்சனம் செய்கிறார் என்றார்.
தட்டில் காசு எவ்வளவு
அப்போது நெறியாளர் சீமான் தன்னைபோல் தனியாக நின்று வாக்குகள் வாங்கி ஜெயித்துகாட்ட சொல்லுங்கள் என்கிறாரே என்றார். அதற்கு திருச்சி சூர்யா, நான் குடும்பத்துடன் பங்களாவில் இருக்கிறார். இன்னொருவர் வெளியில் உட்கார்ந்து பிச்சை எடுக்கிறார்.. பிச்சை எடுப்பவர்.. நீ வீட்டை விட்டு, சோத்தை விட்டு விட்டு, என்னோடு பிச்சை எடு, என் தட்டி வந்து எவ்வளவுகாசு விழுகிறது பார் என்று கேட்பது போல் இருக்கிறது.
சீமானை பொறுத்தவரை கார்ப்பரேட்.. அவரிடம் அஜெண்டா பிக்செய்து பணம் கொடுத்தால் அவர்களுக்கு எதிராக செயல்படுவார்.. விஜய்யை அடிக்க வேண்டும் என்று திமுக பணம் கொடுத்தால், சீமான் விஜய்யை அடிப்பார்.. நாளையே எடப்பாடி வந்து, திமுகவிடம் பணம் வாங்கி விஜய்யை அடி, நான் பணம் தருகிறேன்நீ திமுகவை அடி என்றால் அடிப்பார்.. அதேபோல் பாஜகவின் பின்னால் நின்று ஏதாவது செய்ய சொன்னால் செய்வார்.. சீமான் சினிமாவில் இந்த அளவிற்கு சம்பாதித்து இருக்க முடியாது.
சீமான் வீட்டு வாடகை
சீமானின் வீட்டு வாடகை ஐந்து லட்சம் இருக்கும். அவரிடம் வேலை செய்யும் தனியார் செக்யூரிட்டிகள் 20 பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு லட்சம் சம்பளம் தருகிறார். அந்த வகையில் 20 லட்சம் சம்பளமே போடுகிறார். விஜய் உண்மையில் சினிமா உச்சம், அதனைவிட்டு வந்திருக்கிறார்.
சீமான் அரசியல்
150 கோடி சம்பளத்தைவிட்டு வருகிறார். ஆனால் பொங்கலுக்கும் புளியோதரைக்கும் படம் எடுத்தவர் சீமான்.50, 100க்கு படம் எடுத்தவருக்கு கோடிகளில் கொட்டுகிறது என்றால், வாய் தான் காரணம்" இவ்வாறு கூறினார். பாஜக விஜய்க்கு அழுத்தம் தருவதாக கூறி திருச்சி சூர்யா, பல்வேறு விமர்சனங்களை வைத்துள்ளார். அதுதொடர்பாக அறிய செய்தியுடன் இணைக்கப்பட்ட முழு வீடியோவை பாருங்கள்.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி












Click it and Unblock the Notifications